Posts

Showing posts from June, 2016

அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்

சமீபத்தில் வெளிவந்த தேர்தல் முடிவுகளை விடவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது +2 பொதுத் தேர்வு முடிவுகள்.. எத்தனை பேர் முதலிடம், எத்தனை பேர் இரண்டாவது இடம்.. மூன்றாவது இடம்.. எந்தெந்தப் பாடங்களில் எத்தனை பேர் 200/200? மாணவர்களின், பள்ளி நிர்வாகிகளின் பேட்டிகளால் பத்திரிகைகள் நிரம்பி வழிந்தன.. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி, சிலர் வங்கி, கூட்டுறவுத்துறையில் மேலாளர்கள், சிலர் தனியார் நிறுவன மேலாளர், ஆடிட்டர்.. அதே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப்பள்ளிகளில், மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசுப்பள்ளி மாணவி சரண்யாவிற்கு (1179 மதிப்பெண்கள் ) தந்தை இல்லை.. அவரது தாயார் நிர்மலா ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.. இந்த வருமானத்தில் தான் குடும்பம் வாழ்கிறது.. மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்ற கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசுப் பள்ளி மாணவி சத்யாவின் ( 1178 மதிப்பெண்கள் ) தந்தை ஒரு கட்டிடத் தொழிலாளி.. அம்மா, அப்பா இருவரும் பள்ளிக்கூடமே போகாதவர்கள்.. மூன்றாவது இடம் பெற்ற காஞ்சிப...