அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்
சமீபத்தில் வெளிவந்த தேர்தல் முடிவுகளை விடவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது +2 பொதுத் தேர்வு முடிவுகள்.. எத்தனை பேர் முதலிடம், எத்தனை பேர் இரண்டாவது இடம்.. மூன்றாவது இடம்.. எந்தெந்தப் பாடங்களில் எத்தனை பேர் 200/200? மாணவர்களின், பள்ளி நிர்வாகிகளின் பேட்டிகளால் பத்திரிகைகள் நிரம்பி வழிந்தன.. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி, சிலர் வங்கி, கூட்டுறவுத்துறையில் மேலாளர்கள், சிலர் தனியார் நிறுவன மேலாளர், ஆடிட்டர்..
அதே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப்பள்ளிகளில், மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசுப்பள்ளி மாணவி சரண்யாவிற்கு (1179 மதிப்பெண்கள் ) தந்தை இல்லை.. அவரது தாயார் நிர்மலா ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.. இந்த வருமானத்தில் தான் குடும்பம் வாழ்கிறது.. மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்ற கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசுப் பள்ளி மாணவி சத்யாவின் ( 1178 மதிப்பெண்கள் ) தந்தை ஒரு கட்டிடத் தொழிலாளி.. அம்மா, அப்பா இருவரும் பள்ளிக்கூடமே போகாதவர்கள்.. மூன்றாவது இடம் பெற்ற காஞ்சிபுரம் அனு ( 1179 மதிப்பெண்கள் ) என்ற மாணவியின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர்.. அனைவருமே மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்..
அதே போல மாவட்ட அளவில் அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற குழந்தைகளும் மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே.. உதாரணத்திற்கு தேனி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் முதலிடம் பெற்ற தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஷ்வரி ( 1137 மதிப்பெண்கள் ) ஒரு விவசாயி பன்னீர்ச் செல்வம் என்பவரின் மகள்.. விவசாயக் குடும்பம் என்பதால் வீட்டில் உள்ள கால்நடைகளைப் பராமரிப்பது, விவசாயப் பணிகளை மேற்கொள்வது ஆகியவை படிப்புடன் இணைந்த அவரது அன்றாடப் பணிகள்.. மருத்துவராக வேண்டும் என்பது அவரது ஆசை..
ஆண்டிபட்டி அருகே உள்ள உக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். மணிவண்ணன் ( 1127 மதிப்பெண்கள் ), ஒரு கூலித் தொழிலாளியின் மகன்.. மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.. அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி பவித்ரா ( 1179 மதிப்பெண்கள்) எனும் மாணவியின் தந்தை ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் மகள்.. உயர்கல்வி பயில்வது குறித்து பெற்றோரிடம் ஆலோசித்து தான் முடிவெடுக்க முடியும் என்கிறார் பவித்ரா..
மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் குடும்பச் சூழல் பெரும்பாலும் இதுபோன்றே இருக்கிறது.. அவர்களது உயர்கல்வி வெறும் கனவாக மாறிவிடாமல் இருக்க அரசு அவர்களுக்கு உதவ வேண்டும்.. அரசுப் பள்ளிகளில் மாநில/ மாவட்ட அளவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ- மாணவியரின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டால் அவர்களது வாழ்க்கை பிரகாசமாக அமையும்.. மேலும் அரசுப் பள்ளிக்குழந்தைகளுக்கு இப்படியோரு ஊக்கம் கிடைக்கும் பட்சத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்கள் போட்டி போட்டு படிக்கும் நிலை உருவாகும்.. ஓராண்டுப் பாடங்களை ஈராண்டுகள் படித்து சாதிக்கும் மாணவர்களை விட சிறந்த மதிப்பெண்களை அரசுப்பள்ளி குழந்தைகள் பெறுவார்கள்.. அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்..
எனவே புதிதாகப் பதவியேற்றிருக்கும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மாநில/ மாவட்ட அளவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்ற மகிழ்ச்சியான, முன்னுதாரணமான ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.. இது அனைத்து மாணவர், ஆசிரியர் அமைப்புகளின் கோரிக்கையாகவும் அனைத்துக் கட்சிகள், இயக்கங்களின் கோரிக்கையாகவும் மாறவேண்டும்..
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றி, கல்வி உரிமை, தரமான கல்வி என்பதெல்லாம் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதுதான் என்ற பிம்பத்தை உருவாக்கி, அதில் 100% இடங்களையும் நிரப்பிட ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் முடுக்கிவிட்டுள்ளது அரசு.. சட்டபூர்வ அங்கீகாரத்துடன் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணம் என்ற பெயரில் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் தனியாருக்கு அரசு வாரி வழங்கி வருகிறது..
மேலும் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் அதில் பெறும் மதிப்பெண்களும் தான் கல்வித்தரத்திற்கான அளவுகோல் என்றாக்கி அதனையே விளம்பரப்படுத்தி மக்களை வலைவீசிப் பிடித்து வருகின்றன தனியார் பள்ளிகள்.. அரசுப் பள்ளிகளில் பல்வேறு வசதியின்மைகளையும் கடந்து பத்தாம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகள் தாங்கள் விரும்பும் தனியார் பள்ளியில் சேர்ந்து மேல்நிலைக் கல்வியைப் படிக்கலாம்.. அதற்கு அரசே பணம் செலுத்துகிறது.. வாருங்கள்.. வாருங்கள்.. இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே என்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக கூவிக்கூவி அழைத்ததையும் நாம் பார்த்தோம்…. பத்தாம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் குழந்தைகளையெல்லாம் பணம் கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு அரசுப்பள்ளிகள் ஏன் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடிப்பதில்லை என்று ஆய்வுக்கூட்டம் வேறு நடத்துகிறார்கள்..
ஆக, தனியாருக்குச் சாதகமாக இத்தனை பணிகளையும் மேற்கொள்ளும் அரசுக்கு மாவட்டத்திற்கு 3 குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை ஏற்பது ஒன்றும் பெரிய சிரமமான, அரசுக்குக் கூடுதலான செலவுகளை ஏற்படுத்தக் கூடிய விசயமே அல்ல.. எனவே நண்பர்களே, அனைவரும் ஒன்றாய், ஓங்கிக் குரல் கொடுப்போம்..
“அரசுப் பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்..”

தேனி சுந்தர், 9047140584
நன்றி: விழுது மே-ஜூன் 2016 இதழ்
Comments
Post a Comment