விடுங்க சார்... திட்டாதீங்க சார்...
கடந்த மே மாதம் கடைசி நாளில்.. ஆஹா நாளைலேருந்து பள்ளிக்கூடமேன்னு பசங்களப் போலவே தயாராவதற்கு நமக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.. அதில் கூடுதல் கஷ்டம் என்னன்னா? நாளை முதல் வேறொரு பள்ளிக்கு மாற்றுப் பணியில் செல்ல வேண்டும் என 31ஆம் தேதி இரவு 9 மணிக்குச் சொன்னார் எங்க தலைமை ஆசிரியர்.... அதுவும் இணை இயக்குநர் உத்தரவாம்... மறுநாள் கொஞ்சம் குழப்பத்தோடும் மனவருத்தத்தோடும் தான் சென்றேன்.. அந்தப் பள்ளியில் மொத்தமே ஆறு குழந்தைகள் தான்.. கோகுல், அனிஸ், ஹரிணி, பவித்ரா மற்றும் இரு பெண் குழந்தைகள்.. கடந்த மாத இறுதியில் எனது பள்ளிக்கு திரும்பிவிட்டேன்.. போன இடத்தில் பல நல்ல அனுபவங்களைத் தந்து அனுப்பினர் அந்தக் குழந்தைகள்.. ஒரு நாள் மூன்றாம் வகுப்பு ஹரிணி மட்டும் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை.. சொன்ன எழுத்துப் பணிகள் பலவும் முடிக்காமலே இருந்தது... ஏம்ப்பா, சொல் பேச்சு கேட்க மாட்டியா? ஒரு தடவை சொன்னா புரியாதா?ன்னு ஆசிரியருக்கே உரிய கடும் முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.. மீதி ஐந்து மாணவர்களும் மொத்தமாக வந்தார்கள்.. கோகுல் முதலில் வந்தான்.. நான் என்ன என்று கேட்பதற்குள்ளாகவே.. திட்டா...