Posts

Showing posts from December, 2017

உலகமயமாதல் கொள்கையை முழுமையாக நிராகரித்தால் தான் அனிதாக்களுக்கு கல்வியும் வேலையும் கிடைக்கும் – கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன்

Image
அமலில் உள்ள கல்வி உரிமைச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? அரசியல் உறுதியோடு கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. சரத்து 45, அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் பதிநான்கு வயதிற்கு உட்பட்டவர் அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்க அரசு முயல வேண்டும் என்று கூறியது. அதன்படி 1960 ஜனவரி 26க்குள் அவ்விலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால் 1990 ஆகியும் எட்டவில்லை. எனவே உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதனை அடிப்படை உரிமையென அறிவித்தது. ஆனால் அதற்கான அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணராது அரசு இருந்ததைக் கண்டு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் நாடு தழுவிய பல போராட்டங்களை நடத்தினார்கள். இனியும் தள்ளிப் போட முடியாதென்ற நிலையில் நகல் சட்டத் திருத்தம் அறிவிக்கப்பட்டது. ஐந்து முறை மாற்றப்பட்டு இறுதியாக 86-ஆம் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசு சட்டங்கள் மூலம் அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாயிற்று. முழு உரிமையல்ல.. அரசின் விருப்பத்திற்கிணங்க என்ற கட்டுப்பாடுகளுக்...