பள்ளிகள் வெடிகுண்டுகளை வீசி விடாமல் இருக்க வேண்டும்..! - தேனி சுந்தர்
மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மக்கோடா அப்பாவிடம் கேட்கிறான் . இன்று ரேசனில் சீனி போடுகிறார்களாமே என்று. இல்லை, நமது பகுதியில் நாளை தான் போடுவார்கள் என்கிறார் அப்பா. பின்னாடியே வந்த கயானா கேட்கிறாள். அப்பா, இன்று ரேசனில் சீனி போடுவார்களாமே.. எங்கள் ஆசிரியர் சொன்னார் என்று கடைசி பாட வேளையில் அவளது ஆசிரியர் சொன்னதை அப்படியே சொல்கிறாள். "நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரேசனில் சீனி போடுகிறார்கள்.. நீங்கள் வீட்டுக்குச் செல்லும் போது, வீட்டில் உங்கள் அம்மா சீனியை வைத்து சுவையான பீன்ஸ் சூப் அல்லது வேறு ஏதாவது இனிப்பான பதார்த்தம் உங்களுக்காக செய்து வைத்திருப்பார்.. அதை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு செல்லுங்கள்.." அப்பா தன் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.. யதார்த்தம் புரியாத இந்த ஆசிரியர்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு வெடிகுண்டை வீசி இருக்கிறார்களே என்று.. இது ஒரு அப்பாவின் குறிப்பு. இது நடந்தது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில்..! அமெரிக்கா, ஜப்பானில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் வீசிய அணுகுண்டு தாக்குதலால் அந்த நகரங்களில் இருந்த குழந்தைகள் எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டார்கள...