“ஓங்கூட்டு டூணா” : நீலகிரி சித்ரா டீச்சர்
டார்வின், புகழ்மதியோட அப்பா.. எனது மரியாதைக்குரிய நண்பர்.. குழந்தை நேய ஆசிரியர்.. சிறார் புத்தக எழுத்தாளர்.. அறிவியல் செயல்பாட்டாளர்.. இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டது.. “நடிகர்”.. இத்தனை கதாப்பாத்திரங்களும் ஒருங்கே கொண்ட.. Theni Sundar அவர்களின் மற்றுமொரு படைப்பான.. அவர் ஆட்டோகிராப் இட்டு எனக்கு அனுப்பி வைத்த.. “ ஓங்கூட்டு டூணா “.. வாசித்தேன். அதன் பின்னூட்டத்தை பகிராமல் இருக்க முடியுமா?!! “ ஓங்கூட்டு டூணா ” இந்த வார்த்தைகள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பரிட்சயமானது தான்.. ஆனால் எத்தனை பேர் அந்த மழலை மொழிகளை ரசித்திருப்பார்கள்.. பதிவு செய்ய முன் வந்திருப்பார்கள்?!!.. அபியின் கதையில் ஆரம்பித்த புத்தகம் இறுதியில்.. “ஐ லைக் இட்” என்ற பாரதிராஜா வின் பிரபலமான டயலாக் உடன் முடிந்திருந்தது சிறப்பு.. இடையில் பதிவாகியுள்ள வகுப்பறை அனுபவங்கள் அருமையிலும் அருமை.. பொதுவாகவே ஆசிரியர்களாகிய அனைவருக்குமே வகுப்பறை அனுபவங்கள் இருக்கும்.. ஆனால் இது போன்ற ஒரு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் வாய்க்கப் பெற்ற வரம் பெற்றவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாகிய நாம்...