மாணவர் மனசு : வேடிக்கையும் விளையாட்டும் தான் குழந்தைகள் உலகம்
அரசு பள்ளி ஆசிரியரான நூலாசிரியர் தேனி. சுந்தர், தனது பள்ளி மாணவர்களிடம் கற்றுக் கொண்ட பல்வேறு சம்பவங்களின் தொகுப்பே இந்நூல். 16 தலைப்புகளில் ஒவ்வொரு சம்பவங்களையும் மாணவர்களின் மொழியில் மிக அற்புதமாக நூலைச் செதுக்கி உள்ளார். வகுப்பில் மாணவர்களோடு மாணவராக வலம் வருகிறார். கல்வித்துறை உயர் அதிகாரிகள் வரும்போது அதிகாரிகளுக்கே அதிகாரியாகவும் மாறிவிடுகிறார். உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது மாணவர்களிடம் அன்பாக பேசி வினாக்கள் எழுப்புவதில்லை. மாறாக அதிகாரத்துடன் கேள்வி கேட்பதை சுட்டிக்காட்ட தயங்கவில்லை நூலாசிரியர். குழந்தைகளின் மொழியில் வினாக்கள் எப்படி எழுப்புவது? என்பதை உயர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதோடு இவரது மாணவர்கள் பாடநூல்களை மட்டுமல்லாது பல பொது அறிவு விஷயங்களை கற்று அறிந்து கொண்டு வருகின்றனர் என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். அதிகாரிகள் உங்கள் அப்ரோச் மிகவும் அருமையாக உள்ளது என நூலாசிரியருக்கு பாராட்டு சொல்வது அருமை. மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்குக் கொண்டு வரும் தின்பண்டங்களை மற்றொரு மாணவர் வகுப்பறையில் திருடி தின்ற சம்பவத்தை திரையில் பார்க்கும் அளவுக்கு நகைச்சுவையோடு வர...