மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம் : சரவண ஸ்ரீ
கோடை விடுமுறை.. குழந்தைகள் போல் ஏனோ எனக்கும் இந்த விடுமுறை தேவை பட்டது.. ஊரெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்ந்தாச்சு… இன்று எனது வாசிப்பில் தேனி சுந்தர் அவர்களின் மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம்.. இந்த நூல் 16 கட்டுரைகளை கொண்டுள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு நூல் விலை : 70 ரூபாய்.. நான் புத்தகம் படித்து முடித்தவுடன் தோன்றியது என் மனதில் புத்தகத்தின் விலை குறைவு இப்புத்தகத்திற்கு இன்னும் எவ்வளவும் கொடுக்கலாம். சிரிப்பு போலீசு….. பெரும்பான்மை கிராமபுற பள்ளிகளில் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு நுளையும் போதே இன்று பள்ளியின் நிலை எப்படி இருக்குமோ? என்று மனதில்ஓடும். … இதில் குற்றவாளிகளை கண்டறிந்து…. சிரிப்பு போலீசாக படிக்கும் போதே நாங்களும் ஆகிட்டோம். சாரு பயந்துட்டாரு….. இதில் சீக்கிரம் வாங்க சார்…பயமுறுத்திட்டுப் போயி உக்காரணும் கால் வலிக்குது….இப்படி சொல்லும் ஆசிரியர் குழந்தைகளின் உறவை விட வேறு என்ன வேண்டும்? டும் டும் டும்……..வாசிக்கும் போதே குழந்தை போல் மகிழ்ந்தேன். மாணவர் மனசு வாசிக்கும் போதே எனக்கும் ஒரு போன் வேண்டும் என்று எழுதிப் போட தோன்றியது .எனது வகுப்பறையிலும் மா...