Posts

Showing posts from March, 2025

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து இரா.சத்யா, தேவாரம்

Image
நம் பள்ளிப் பருவம் முதல் இன்று வரை குழந்தைக் கவிஞர் என்றாலே அழ வள்ளியப்பா என்ற பெயர் தான் ஆசிரியரான பின்பும் மனதில் முதன்மையாக வந்து நிற்கும். அதுபோல குழந்தைகளுக்கான படைப்புகளை அளித்த நமது முன்னத்தி ஏர்களைப் பின்னுக்குத் தள்ளி சிறார் இலக்கியஉலகில் புதுமைப் படைப்பாளியாக வலம் வந்து கொண்டிருக்கும் எங்கள் தேனி சுந்தர் சார் அவர்களின் சமீபத்திய நூலான திட்டமிடாத வகுப்பறைகள் பற்றிய என் பார்வையிலான மனப்பதிவுகளை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள விரும்பி வந்துள்ளேன். அதிக நூல்களை வாசிப்பவரே சிறந்த படிப்பாளி என்ற பொதுவான கூற்று ஒன்று உண்டு. அந்த வகையில் பார்த்தால் தொடக்க நிலை முதல் வளரிளம் பருவம் வரை உள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு சிறந்த ஆசிரியரே உலகின் மிகச் சிறந்த படிப்பாளி என்று கூறலாம். ஏனென்றால் குழந்தைகளை நேசிக்கும் ஒரு ஆசிரியருக்கு அவரது குழந்தைகளே அனுதினமும் சுவாரஸ்யமான அனுபவங்களைத் தரும் ஆசான்களாக விளங்குகின்றனர் என்பது கண்கூடு . அதற்கான அத்தாட்சியாகவே சமீப காலங்களில் தேனி சுந்தர் அவர்கள் படைப்பில் வெளிவந்துள்ள சிறார் இலக்கிய நூல்கள் அனைத்தையுமே கூற முடியும். ஒரு திரைப்படம் பார்க்கலாம் எ...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : நூல் குறித்து மதுரை அமுதா செல்வி

Image
குழந்தைகளின் எதார்த்த உலகத்திற்குள் ஒரு சிறு பிள்ளையைப் போல் நுழைந்து அவர்களுடன் அமர்ந்து அவர்களின் செயல்பாடுகளை உற்று நோக்கி கலந்துரையாடல்களை கவனித்து அவற்றின் மீது எந்த விசாரணையும் செய்யாமல் மிக நேர்மையாக நிகழ்த்திய உரையாடல்கள் தோழர் தேனி சுந்தர் அவர்களை புது இலக்கிய வகைமையை உருவாக்கச் செய்திருக்கிறது. அந்த வகையில் தோழரின் அத்துணை படைப்புகளும் இலக்கிய வானில் நட்சத்திரங்களாய் மின்னுகின்றன. அவருடைய நூல்களை சுடச்சுட வாசிப்பதில் எனக்கு எப்போதுமே அலாதி பிரியம் உண்டு.  அவருடைய படைப்புகளின் வழியே சந்திக்கும் குழந்தைகளில் எனக்கு மிக நெருக்கமானவள் மருமகள் புகழ்மதி. அவளை வாசிக்கும் போதெல்லாம் மனதிற்குள் மகிழ்ச்சி ஊற்றாய் பொங்கி எழும். புத்தகத்தை மூடி வைக்கும் போது "அச்சச்சோ அதுக்குள்ள போயிட்டாளே" என்ற வருத்தம் வரும். முதல் வேலையாக பேருந்து ஏறிச் சென்று புகழ்மதியை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழும்பும். அடுத்தடுத்த தொடர்ந்து வரக்கூடிய வேலைகளின் ஆக்கிரமிப்பு அந்த ஆசையை மட்டுப்படுத்திவிடும். ஆனால் அவளைப் பிரிந்த வருத்தம் கலைந்து போவதற்குள் புதிதாய் அடுத்த புத்தகத்தை நம் கைகளி...