கணக்கும் இனிக்கும்
தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை... கணக்கு! பிடிக்காத பாடம்... கணக்கு! பிடிக்காத வாத்தியார் கணக்கு வாத்தியார்! கணித ஆண்டு என்று சொன்னதுமே எனக்குச் சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பகிர்வு. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு டீச்சர் கணக்கில் வடிவியல் பாடம் நடத்துனாங்க. கையிலே வடிவியல் நோட்டு, காம்பஸ் எல்லாம் எடுத்தாச்சு.. வரையுறேன்.. வரையுறேன்.. தப்புத்தப்பா வருது. கடைசி வரைக்கும் வட்டம் மட்டும் வரவேயில்லை. நாங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம்... டீச்சர் போட்டாங்க பாருங்க முதுகுல.. அன்னைக்குத் தொடங்கியது தான் பகை! ஒரு கட்டத்துல கணக்குப் பாடத்துக்குப் பயந்தே எட்டாம் வகுப்பிற்குப் பிறகு நான் படிக்கவில்லை, திராட்சைத் தோட்டத்திற்கு காக்கா விரட்டப் போறேன்னு தெருத்தெருவாக நான் ஓட... எங்கப்பா சைக்கிளை எடுத்துக்கிட்டுத் தேட.. அது ஒரு சில வாரங்கள்... ஒரு வழியாகப் பக்கத்து ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தேன். அங்கு ஒரு கணக்கு வாத்தியார்... இன்னிக்கும் கூட சுருளிமுத்து வாத்தியார்னா சில பேர...