Posts

Showing posts from March, 2017

படிக்க வை.. எழுத வை..

Image
கடந்த மாத இதழில் நான் மாற்றுப்பணிக்காக சென்ற பள்ளியில் ஏற்பட்ட அனுபவத்தைப் புதிய ஆசிரியன் இதழில் பகிர்ந்திருந்தேன்.. அதன் தொடர்ச்சி தான் இதுவும்..  அந்தப் பள்ளியில் வெறும் ஆறு குழந்தைகள் தான்.. வகுப்பு துவங்கும் முன்பு மிகவும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.. பள்ளி திறந்த சில வாரங்களுக்கு அவர்களுடைய உரையாடலில் சட்டமன்றத் தேர்தல் செய்திகள் நிரம்பியிருந்தன.. ஜெயலலிதா எங்க அப்பத்தா சார்.. கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எங்க தாத்தா சார் என்பான் கோகுல்.. தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் குறித்து சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.. வாக்குச்சாவடிக்காக ஒட்டியிருந்த போஸ்டர்களைக் கிழித்தேன்.. சார் சார்.. ரெட்டலையக் கிழிச்சுடாதீங்க என்பான்.. கல்வி வளர்ச்சி நாளில் காமராசர் தான் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவருன்னு சொல்லிமுடிக்கும் முன்பே சார் அதை எங்கப்பத்தா தான் அஞ்சு முட்டை கொடுக்கணும்னு மாத்துணாங்க என்பான்.. கலைஞரைக் கண்டபடி நக்கலடிப்பான்..  பத்துக்கும் கீழே குழந்தைகள் எண்ணிக்கை குறைந்ததால் இப்பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த சத்துணவுப் பணியாள...

வகுப்பறை என்பது பன்முகப் பண்பாட்டைக் கொண்டாடும் இடமாக மாற வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு நேர்காணல்

Image
2017ஆம் ஆண்டினை சாவித்ரிபா பூலே அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் துவங்கியிருக்கிறீர்களே..? ஜோதிபா பூலே மற்றும் அவருடைய இணையரான சாவித்ரிபா பூலே இருவருமே சனாதானக் கொள்கைகளுக்கு எதிராக, பிராமணீய, வேத சமய கட்டுப்பாடுகளுக்கு எதிரான மிகப் பெரியபோராட்டங்களை நடத்தியவர்கள்.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், அவர்கள் இருவரும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களை வீட்டிற்கு அழைத்து தங்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்கச்சொன்னது.. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், ஒரு பிராமண விதவைப் பெண் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேற்றப் பட்டபோது அடைக்கலம் கொடுத்ததும் அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தையைத் தத்தெடுத்து தங்கள் குழந்தையாகவே வளர்த்தெடுத்ததும் கூட.. பெண்கள் படிக்கக் கூடாது என்று சொன்ன காலகட்டத்தில் பெண்களுக்காக பள்ளிக்கூடங்களைத்திறந்தார்கள்.. ஆதிசூத்திரர்களும் சூத்திரர்களும் ஒன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக முதன் முதலில் பொதுப் பள்ளிகளை நிறுவினார்கள்.. மனுவாதத்திற்கும் வணிகமயத்திற்கும் எதிராக எழுந்தபத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர்க்குரல்கள் தான் ஜோதிபா பூலே...