ஜனநாயகமும் அறிவியல் பார்வையும் அடிநாதமாக இருக்க வேண்டும்..
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்ட மாற்றங்களுக்கான பணிகளை நினைக்கையில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்க முயற்சிகளையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.. இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக கீழிருந்து மேலாக ஒரு கல்விக்கொள்கை உருவாக்கப்படுகிறது என்ற பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்டாலும் பாஸ் மார்க் வாங்கும் அளவிற்குக் கூட கருத்துக் கேட்பு நடத்தவில்லை.. ஒரு நாட்டின் கல்விக்கொள்கையை உருவாக்கும் பணியில் பெயரளவுக்குக் கூட கல்வியாளர்கள் பயன்படுத்தப்படவில்லை.. மாறாக தமிழகத்தில் புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் மாநிலம் முழுவதும் பரவலான கருத்துக் கேட்பு, அதற்கும் முன்னதாக இருந்தே கல்வியாளர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை என நல்லவிதமாகவே பணிகளைத் துவங்கி இப்போது பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டு கருத்துக் கேட்பிற்கு விடப்பட்டுள்ளது.. அதிலும் கூட பல்வேறு இடங்களில் நாட்டின் பன்முகத்தன்மை, சமயச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டே வருவதைப் பார்க்கும் போது நெஞ்சம் மகிழ்கிறது.. நிலைப்பாட்டுத்தாள் மற்றும் பல்வேறு பாடங்களுக்கான வர...