Posts

Showing posts from June, 2020

மாற்று வகுப்பறைக்கு நூறு முகங்கள்: ஹீரோக்கள் தான் தேவை – தேனி சுந்தர்

Image
இந்த கொரனா காலகட்டத்தில் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் கல்வியில் பாதிப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. கவலை நியாயமானது. ஆனால் கவலை மட்டும் போதுமா என்பது தான் கேள்வி. பள்ளிகளை உடனடியாகத் திறக்க முடியாது. எப்போது திறக்க வாய்ப்பு என்பது குறித்தும் ஆரூடம் கூற முடியாத நிலையாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நாம் நிச்சயம் மாற்று குறித்து யோசிக்க வேண்டும். தற்போது சிட்டுக்கள் மையம் என்கிற மாற்று வகுப்பறைகள் குறித்து பெரும்பாலும் விவாதங்களும் அதையொட்டிய பல்வேறு முயற்சிகளும் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மகிழ்ச்சியான, ஆரோக்கியமான முன்னெடுப்பாக, காலத்தே முன்வைக்கப்பட்டுள்ள நல்ல ஆலோசனையாக கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். தொடர்ந்து ஆலோசனைகளையும் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் சில முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. சின்னச் சின்னதாய் சில அடிகள் எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன. ப...

கொரானாவால் கல்வி பாதிப்பு : நமக்குத் தேவை சிட்டுக்கள் மையம் -தேனி சுந்தர்

Image
விளையாட்டாய்க் கற்போம்.. கற்பதைக் கற்கண்டாய் மாற்றுவோம்.. பாடிக் கற்போம்.. விளையாடிக் கற்போம்.. --- இவை தான் அந்த மையத்தின் முழக்கங்கள்.. எந்த மையத்தின் முழக்கங்கள்? சிட்டுக்கள் மையம்.. ஆம், கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் எனும் உறுதியோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுடன் இணைந்து நடத்திய அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாய், அந்த அனுபவத்தின் விளைபொருளாய்க் கிடைத்த சிந்தனை.. அனைவருக்கும் ஆரம்பக் கல்விக்கான அறிவியல் இயக்கத்தின் பெருங்கனவின் சிறு முயற்சி தான் சிட்டுக்கள் மையம்.. தொடர்கல்வியைப் போல வளர்கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும் பத்தாண்டுக் கல்வியினை நிச்சயம் படித்தே ஆகணும் என்ற பாடல் பிறந்தது அப்போது தான். 1990களில்.. மிகவும் அக்கறையுடனும் மிகுந்த நிதானத்துடனும் தேசிய அளவில், மாநில அளவில், மாவட்டம், ஒன்றியம் என ஒவ்வொரு கட்டமாக ஆலோசித்து, சிந்தித்து காலகாலத்திற்கும் பேசும் வகையிலான ஒரு முன்னுதாரணத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செயல்படுத்திக் காட்டியது.. சிட்டுக்கள் யார்..? :  பள்ளிக்கூடம் செ...

பூமியின் வடிவத்தை எவ்வாறு கண்டறிந்தோம்? – தேனி சுந்தர்

Image
அறிவியலில், ஆய்வுகளில் வெற்றி, தோல்வி என்பதை விட அதற்கான முயற்சிகளும் தேடல்களும் முக்கியமானவை என்பதை குழந்தைகள் மனதில் ஆழமாக விதைக்கும் வகையில் நாடகத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன..  கடலில் இருவர் மீன் பிடிக்கச் செல்கின்றனர். ஒருவர் மாமன், மற்றொருவர் மருமகன். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது சூரியன் மறைவதைப் பார்க்கும் மருமகனுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. காலையில் மலை முகட்டில் உதிக்கும் சூரியன் மாலையில் எங்கே போகிறது? கடலுக்குள் போகிறதா? எப்படி மறுபடி மறுநாள் காலையில் கிழக்கே மலைமுகட்டில் உதிக்கிறது. அதற்கு மாமன் சொல்கிறார்.. சூரியன் மறையும் இடத்தில் ஒரு படகு இருக்கும். அது சூரியனை ஏற்றிக் கொண்டு சென்று மறுநாள் காலைக்குள் மலைமுகடு இருக்கும் பக்கத்தில் இறக்கி விட்டுவிடும். தினமும் இதே போல் தான் நடக்கிறது என்கிறார்.. மருமகன் படகு எப்படி இவ்வளவு பெரிய சூரியனைச் சுமந்து செல்ல முடியும்? சூரியனின் வெப்பத்தில் படகு எரிந்து போகாதா? என்றெல்லாம் கேட்கிறான்.. ஏய், உனக்கு மீன் வேணுமா வேணாமான்னு கேட்கிறார்.. இப்படி ஒரு காட்சியோடு தொடங்குகிறது நாடகம். அடுத்தடுத்து நான...

குழந்தைகளுக்குச் சத்துணவு: விரைந்து செயல்படுமா தமிழக அரசு?

Image
உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்  அரவிந்த்  போப்டே   தலைமையிலான அமர்வு தானே முன்வந்து விசாரித்த , கொரனா காரணமாக முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும், குழந்தை களுக்கான சத்துணவு தொடர்பான வழக்கில் மார்ச் , 18  அன்றே   மாநில   அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துணவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.. அதனைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் மார்ச், 20ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையிலும் அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கான சத்துணவு கிடைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் சத்துணவிற்கான பொருட்களையும் அதைச் சமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகையினையும் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலமும் அறிவிப்புகளையும் செயல்திட்டங்களையும் வெளியிட்டுள்ளன. கேரளா உள்ளிட்ட வெகு சில மாநிலங்களில் உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசி...

குழந்தையால் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஒரு நூல் – பூமியின் ரகசியங்கள் : தேனி சுந்தர்

Image
பூமியின் ரகசியங்கள் : சமீபத்தில் நமக்கெல்லாம் கிரட்டா துன்பர்க் என்கிற ஸ்வீடன் நாட்டுச் சிறுமி குறித்து தெரிந்திருக்கும்.. சுற்றுச் சூழல் தொடர்பாக தன் நாட்டு நாடாளுமன்றத்தின் முன் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டம்.. ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் தலைவர்களையெல்லாம் உலுக்கியெடுத்த பேச்சு.. அமைதிக்கான நோபல் பரிசு வரையிலும் அவரது பெயர் பரிசீலனை செய்யப்பட்டது என்பது வரை அறிந்திருப்போம்.. இவரைப் போலவே, இன்னொரு குழந்தையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.. இவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆயிகா சுபோட்டா. ஆறாம் வகுப்பு பயின்றுகொண்டிருந்த மாணவி. அவர் பூமியின் ரகசியங்கள் என்கிற ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார். அந்நூலில் ரூமி, ஆய்ச்சி எனும் இரு குழந்தைகள்.. ரூமி புத்தகங்கள் வாசிப்பதில் பேரார்வம் உள்ள குழந்தை. அப்படி ஒருநாள் நூலகத்தில் இருந்து ஒரு புத்தகம் எடுக்கிறாள். நமக்குத் தெரிந்த அலாவூதினும் அற்புத விளக்கும் போன்ற கதைகளில் ஒரு பூதம் வருமே அது போல ரூமி எடுத்த புத்தகத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது. ரூமி அதன் பெயரைக் கேட்கிறாள்.. தன்னைப் பூமி என்று அந்த உ...

நூல் அறிமுகம் : கல்விக்கான ஒரு கையேடு – தேனி சுந்தர்

Image
பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது நேர்காணல்கள் குழந்தைகள் தான் படிக்க வேண்டும். ஆசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் படிப்பதில்லை. இது சரியல்ல. எல்லோரும் படிக்க வேண்டும். தொடர்ந்து கற்க வேண்டும். தொடர்ந்து படிப்பது மட்டுமே நமது அறிவை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கும். அறிவினை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கும் ஆசிரியரே குழந்தைகளை ஆகர்ஷிக்க முடியும். அத்தகைய ஆசிரியர்களாலேயே சாதிக்க முடியும். ஒரு நாள் வகுப்பில் சம்பங்கி என்ற வார்த்தையைச் சொல்லி ஆசிரியர் கரும்பலகையில் பூ படம் ஒன்றை வரைகிறார். உடனே குழந்தைகள் சம்பங்கின்னா மீன் டீச்சர்ன்னு சொல்றாங்க. ஒரு பையன் அந்த மீனை வரைந்து காட்டுகிறான். இன்னொரு பையன் பொறிச்சு சாப்பிட முடியாது. குழம்பு தான் வைக்கமுடியும் என்கிறான். அதை வச்சு சாப்பிட முடியாது டீச்சர் பொடிப்பொடியாய் போயிடும் என்கிறாள் இன்னொரு குழந்தை. ஆனாலும் மறுபடி மறுபடி அந்த டீச்சர் பூவைப் பற்றியே சொல்றாங்களே தவிர, அந்தக் குழந்தைகள் சொன்ன தகவல்களைக் கண்டு கொள்ளவே இல்லை. அரசுப் பள்ளிகளில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அரசுப்பள்ளிகளுக்கு மாற்றாக வேறு பள்ளிகளைப் பொருத்திப் பார்க்...

நூல் அறிமுகம் : ஓய்ந்திருக்கலாகாது : கல்விச் சிறுகதைகள்

Image
பாலமுருகன் எழுதிய பள்ளித்தளம், பூமணியின் பொறுப்பு, கிருஷ்ணன் நம்பி எழுதிய சுதந்திர தினம், தோப்பில் முகமது மீரான் எழுதிய தங்கராசு, பாவண்ணனின் சம்மதங்கள் ஏன்?, சு.வேணுகோபால் எழுதிய மெய்ப்பொருள் காண்பது அறிவு, இலட்சுமணப் பெருமாள் எழுதிய ஆதாரம், பாமா எழுதிய எளக்காரம், மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய பிரம்புபதேசம், தி.ஜானகிராமனின் முள்முடி, புதுமைப்பித்தனின் மோட்சம், சுந்தர ராமசாமியின் எங்கள் டீச்சர் என இந்நூலில் உள்ள கதைகள் பதிமூணில் ஒன்று தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியது.. இந்தக் கதைகளை உள்வாங்கிப் படிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளை வரவைக்க முயற்சி செய்யக்கூடும்.. வந்த குழந்தைகளை அன்பாக அரவணைக்கக் கூடும். பிரம்புகளை ஒடித்துத் தூக்கி எறிந்துவிட்டு பிரம்பு வாத்தியாரில் இருந்து பரமசிவம் வாத்தியாராக மாறக்கூடும். குறைந்தபட்சம் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவையாவது தரமாக வழங்க முயற்சி எடுக்கக்கூடும்.. கால்கள் கூச, உள்ளம் உதற பயந்துபயந்து பள்ளிக்குள் வரக்கூடிய ஏழை எளிய மக்களை மரியாதையாக நடத்தக்கூடும்.. தங்களைக் கற்றல் கற்பித்தலில் முழுமனதோடு ஈடுபடுத்திக் கொள்ளக்கூடும்.. அனைவரின், குற...