நானும் புத்தன் தான்.. - நூல் குறித்து
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹைக்கூ நூலை வாசித்தேன்.. அப்போ அதுக்கு முன்னாடி நிறைய ஹைக்கூ நூல்களை வாசித்துக் கொண்டிருந்தீர்களா என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள்.. தமிழகத்தில் ஹைக்கூ இலக்கியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்கக் கவிஞர்கள் எல்லாம் பெரும்பாலும் நம்மூர்ல தான் இருந்தார்கள்.. நம்மூர்க்காரர்களாக இருக்கிறார்கள்..! ஹைக்கூ சிகரத்தில் எப்போதும் இருக்கும் கம்பம் மாயவன், தோழர்கள் உமர் பாரூக், Tamizhmani Ay மற்றும் Cumbum Puthiyavan ஆகியோரது ஹைக்கூ நூல்கள் எப்படியும் கைக்கு வந்து விடும்… இப்போது அவர்களும் ஹைக்கூ எழுதுவது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். ஆகவே என்னுடைய ஹைக்கூ வாசிப்பு குறைந்ததற்கு அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.. கம்பம் பகுதியில் அந்த ஏக்கத்தை, தாகத்தை போக்கும் விதமாக, குறைக்கும் விதமாக இப்போது கவிஞர் ராஜிலா ரிஜ்வான் ஹைக்கூ சாரல் பொழிந்து வருகிறார்.. அவருடைய இரண்டாவது நூல் “நானும் புத்தன் தான்..” அகநி வெளியீடாக வந்திருக்கிறது.. அடிப்படையில் அவர் ஒரு ஆசிரியர். இஸ்லாமியப் பெண். ஹைக்கூ கவிஞர்.. எல்லாமே கொஞ்சம் தனித்துவமான தன்மைகள் தான்.. தனது அணிந்...