பூமிக்கு யார் சொந்தம் : செ.கா.வின் நூல் குறித்து
யதார்த்தத்தின் வியப்பு.. ஈரோடு சென்னிமலை நண்பர் செ.கா.வுடன் ஒரு பத்தாண்டு கால பழக்கம் இருக்கும். வாசிப்பு மற்றும் பயணத்தில் மிக ஈடுபாடு கொண்டவர். வாசிப்பிற்கான பயணம், பயணத்திற்கான வாசிப்பு - இரண்டும் தான் செ.கா. செய்யும் பணிகளை வெறும் அடையாளத்திற்காக மட்டும் அல்லாமல் அர்த்தப் பூர்வமாக, ஆழமாக எடுத்துச் செய்யக் கூடியவர். அவருடைய அறிவியல், சூழலியல் மற்றும் பரிணாமம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு "பூமிக்கு யார் சொந்தம்?" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. வழக்கமாக, பூமி யாருக்கு சொந்தம்? பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற உயிர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது தானே? இயற்கை என்பது மனிதனையும் உள்ளடக்கியது தானே? என்றெல்லாம் பேசி இருப்போம். கேட்டு இருப்போம். பூமிக்கு யார் சொந்தம்? என்கிற தலைப்பே சிந்திக்க வைப்பதாக இருந்தது. பல்வேறு விதமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே வாசித்துள்ளேன். ஆனாலும் மீண்டும் ஒருமுறை அவற்றை ஒருசேர வாசிக்கும் போது புதிய அனுபவமாக அமைந்தது. சிறுத்தை, பெருஞ்சிறுத்தை மற்றும் சிவிங்கிப் புலிகள் தொடர்பான கட்டுரை ஒன்றிய அரசு மேற்கொ...