ஆசிரியரின் மனதை வெளிப்படுத்தும் – மாணவர் மனசு! - மு.தமிழ்ச்செல்வன்
எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ‘மாணவர் மனசு“ என்ற நூலினை வாசித்தேன். மாணவர் மனசை மிக எளிதாக இப்புத்தகத்தில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து அவர் கட்டுரைகளாக எழுதியவைதான். இதிலுள்ள கட்டுரைகளை முகநூலில் ஏற்கனவே வாசித்திருந்ததால் மீள் வாசிப்பு செய்ததை போன்றே உணர்ந்தேன். இந்தக் கட்டுரை தொகுப்பை பாரதி புத்தகாலயம், புக் ஃபார் சில்ரன் வெளியீடாக இவ்வாண்டு வெளியிட்டுள்ளது. தொடக்கக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு நிறைய பொறுமையும் நிதானமும் தேவை என்பதை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வழியாக நாம் அறிய முடிகிறது. மழலைப் பள்ளிகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடைப்பட்ட பருவத்தினர் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களை கையாள தனித்த அணுகுமுறை தேவைதான். அது அன்பும் அரவணைப்பும் கலந்த, கண்டிப்புடன் கூடியதாகவும் இருக்க வேண்டியதாக இருக்கிறது. அதோடு மாணவர்களிடம் அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு கீழ் இறங்கி பேசி, அவர்களின் உணர்வுகளை கையாளத் தெரிந்து கொண்டால் அப்புறம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரு...