மாதா என்கிற பெயரை நான் பணிக்கு வந்த புதிதில் இருந்து கேள்விப்பட்டு வருகிறேன். 2005 ல் தமுஎகச மாவட்ட மாநாடு ஆண்டிபட்டியில் தான் நடந்தது என்று நினைக்கிறேன். தோழர் மக்கள் ராசப்பன், மாதா, மாலன் போன்றவர்களை அந்த மாநாட்டில் முதல் முறையாக பார்க்கிறேன். சுருளிப்பட்டி கிளையின் சார்பில் கலந்து கொண்டு மாநாட்டில் சில கடுமையான விமர்சனங்கள் வைத்த ஞாபகம், ஆனாலும் தோழர் மாலன் அவர்கள் புதியவர் என்ற கரிசனத்தோடு அதற்கு இதமான பதில் அளித்தார். ஆனால் மற்றவர்களுக்கு சுளீர் சுளீர் என்று தான் பதிலுரைத்தார்.. அப்போது முதல் பெயர் தெரியும், ஆள் தெரியும் என்றாலும் அவர் என்ன விதமான படைப்புலகில் இயங்கி வருகிறார் என்று தெரியாது.. அப்புறம் அவரது பெயர் அடிக்கடி காதுகளில் விழுவதும் கூட குறைந்து போனது. இப்போது எழுத்து, புத்தகம் என்று வந்த பிறகு படைப்பாளிகளுடன் மீண்டும் நெருங்குகிற வாய்ப்புகள் கிடைத்தன.. அவர்களது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன.. அந்த அடிப்படையில் தோழர் மாதா அவர்களின் "யாருடைய பிரேதம்?" என்கிற மொழிபெயர்ப்பு கதையை புக்டே இணைய தளத்தில் வாசித்த பிறகு தோழர் பெயர் மீண்டும் அழுத்தமாக என்...