கட்டாயத் தேர்ச்சி : 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடுகளின் அடிப்படையில் ஒரு பார்வை..
இந்தியா முழுவதும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.. இச்சட்டம் குழந்தைகள் நலன் சார்ந்து பல அம்சங்களை வலியுறுத்தியது. அதில் குறிப்பிடத் தக்கவை கட்டாயத் தேர்ச்சி, வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்தல், கல்வி ஆண்டு முழுவது மாணவர் சேர்க்கை, உடல், மன ரீதியான தண்டனைகளுக்கு தடை, சிறப்பு / தனி வகுப்புகளுக்கு தடை, சேர்க்கைக்கு சான்றிதழ்களின்மை ஒரு தடையில்லை போன்றவை.. சட்டம் நடைமுறைக்கு வந்த இந்தப் பத்தாண்டுகளில் தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு என்பதைத் தவிர தனியார் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டிய பல அம்சங்களை நடைமுறைப்படுத்த அரசு போதிய முயற்சிகள் எடுத்ததாகவோ கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் போதிய வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகளை மூடியதாகவோ அல்லது குறைந்த பட்ச நடவடிக்கைகள் எடுத்ததாகவோ தெரியவில்லை.. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டாலும் அது ஏட்டளவிலான தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அளவிலேயே உள்ளன. இந்தச் சூழ்நிலையில் தான் எந்த வித...