கட்டாயத் தேர்ச்சியும் கற்றல் அடைவுத் தேர்வுகளும்....
தொடக்கக் கல்வியில் அதாவது 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களது கற்றல் அடைவினைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் மாநிலம் முழுவதும் ஒரு பள்ளி / ஒரு வகுப்பு / ஒரு மாணவர் கூட விடுபடாமல் கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு கல்வி ஆண்டுத் துவக்கத்திலும் முதல் ஆய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டு இறுதியிலும் மீளாய்வு அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
இந்த ஆய்வில் முதல் வகுப்பு மாணவர்கள் அப்போது தான் பள்ளியில் சேர்ந்திருப்பார்கள் என்பதால் அவர்களை மட்டும் தவிர்த்து விட்டு 2ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவரது தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புத் திறன், எழுதுதல் திறன் சோதிக்கப்படுகிறது. கணிதத்தில் அந்தந்த வகுப்பிற்கேற்ற அளவில் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலில் எளிய கணக்குகளைச் செய்தல் மற்றும் கடின கணக்குகளைச் செய்தல் ஆகிய திறன்கள் சோதிக்கப்படுகின்றன.
இந்த ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட தகவல்கள் அடிப்படையில் மாணவர்கள் ஏ, பி, சி, டி என நான்கு தரங்களில் பிரிக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு மொழிப்பாடங்களைப் பொருத்த வரையில் வாசித்தலில் நிறுத்தற்குறி, பொருள் மற்றும் உணர்ச்சிக்கேற்ப வாக்கியங்களை வாசித்தல், ஓரிரு பிழைகளுடன் வாசித்தல், சொற்களை மட்டும் வாசிக்கத் தெரிந்திருத்தல், வாசிக்கத் தெரியாத நிலை எனவும் ஆங்கிலம் மேலும் இத்தகவல்கள் மாணவர் வாரியாக தொடங்கி பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் முறையாக அந்தந்த நிலைக்குரிய அலுவலர்களால் பராமரிக்கப்படுகின்றன. கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்த அடைவு நிலையும் கல்வி ஆண்டின் இறுதியில் உள்ள அடைவு நிலையும் ஒப்பாய்வு செய்யப்பட்டு மாணவர்களது அடைவு நிலை உரிய நிலையை அடைய பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சில மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரே நேரடியாக அடைவில் பின் தங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர்களுக்கான கூட்டங்களை நடத்தி விளக்கம் கேட்டனர். அடைவை மேம்படுத்த உரிய முறையில் வழிகாட்டப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் பெரும்பாலான வகுப்பறை நிகழ்வுகளில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. எனவே 2018-19 கல்வி ஆண்டிலும் இதனைத் தொடர வேண்டும் என துறை சார் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியால் மாணவர்கள் கற்றலில் கவனம் செலுத்துவதே இல்லை.. ஆசிரியர்களும் பாடங்களை நடத்துவதற்கு உரிய கவனம் கொடுப்பதில்லை.. எனவே கல்வியில் தரத்தை உறுதிப்படுத்த 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதை ரத்து செய்ய வேண்டும், பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் துடியாய்த் துடிப்பது அறிவியல் பூர்வமற்றது. ஆய்வுப் பூர்வமற்றது.
தேனி சுந்தர்
9047140584
Comments
Post a Comment