Posts

Showing posts from February, 2019

கட்டாயத் தேர்ச்சி : 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடுகளின் அடிப்படையில் ஒரு பார்வை..

Image
இந்தியா முழுவதும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.. இச்சட்டம் குழந்தைகள் நலன் சார்ந்து பல அம்சங்களை வலியுறுத்தியது.  அதில் குறிப்பிடத் தக்கவை கட்டாயத் தேர்ச்சி, வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்தல், கல்வி ஆண்டு முழுவது மாணவர் சேர்க்கை, உடல், மன ரீதியான தண்டனைகளுக்கு தடை, சிறப்பு / தனி வகுப்புகளுக்கு தடை, சேர்க்கைக்கு சான்றிதழ்களின்மை ஒரு தடையில்லை போன்றவை..  சட்டம் நடைமுறைக்கு வந்த இந்தப் பத்தாண்டுகளில் தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு என்பதைத் தவிர தனியார் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டிய பல அம்சங்களை நடைமுறைப்படுத்த அரசு போதிய முயற்சிகள் எடுத்ததாகவோ கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் போதிய வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகளை மூடியதாகவோ அல்லது குறைந்த பட்ச நடவடிக்கைகள் எடுத்ததாகவோ தெரியவில்லை.. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டாலும் அது ஏட்டளவிலான தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அளவிலேயே உள்ளன.  இந்தச் சூழ்நிலையில் தான் எந்த வித...

கட்டாயத் தேர்ச்சியும் கற்றல் அடைவுத் தேர்வுகளும்....

Image
தொடக்கக் கல்வியில் அதாவது 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களது கற்றல் அடைவினைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் மாநிலம் முழுவதும் ஒரு பள்ளி / ஒரு வகுப்பு / ஒரு மாணவர் கூட விடுபடாமல் கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு கல்வி ஆண்டுத் துவக்கத்திலும் முதல் ஆய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டு இறுதியிலும் மீளாய்வு அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.  இந்த ஆய்வில் முதல் வகுப்பு மாணவர்கள் அப்போது தான் பள்ளியில் சேர்ந்திருப்பார்கள் என்பதால் அவர்களை மட்டும் தவிர்த்து விட்டு 2ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவரது தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புத் திறன், எழுதுதல் திறன் சோதிக்கப்படுகிறது. கணிதத்தில் அந்தந்த வகுப்பிற்கேற்ற அளவில் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலில் எளிய கணக்குகளைச் செய்தல் மற்றும் கடின கணக்குகளைச் செய்தல் ஆகிய திறன்கள் சோதிக்கப்படுகின்றன.  இந்த ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட தகவல்கள் அடிப்படையில் மாணவர்கள் ஏ, பி, சி, டி என நான்கு தரங்களில் பிரிக்கப்படுகிறார்கள். உதாரணத...

கட்டாயத் தேர்ச்சியும் இடைநிற்றல் ஒழிப்பும்..

Image
இடைநிற்றலை ஒழித்துக் கட்டிய கட்டாயத் தேர்ச்சி முறை..  தமிழக அரசு கொள்கைக் குறிப்பில் பெருமிதம்…!! 6-14 வயது வரையிலான அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல், அவர்களில் இடைநிற்றலின்றி அனைவரையும் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சியடையச் செய்தல் ஆகியவற்றை தொடக்கக் கல்வியில் கொள்கை இலக்குகளாகக் கொண்டிருக்கிற தமிழக அரசு தான் மத்திய அரசின் அடியொற்றி இயங்கும் போக்கின் தொடர்ச்சியாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரும் முடிவை அமைச்சரவை கூடாமல், அரசாணை பிறப்பிக்காமல் அவசர அவசரமாக நடைமுறைக்குக் கொண்டு வரப் பார்த்தது. பரவலாக எழுந்த எதிர்ப்பு கண்டு முதலில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு இல்லை என்றும் அதனை அடுத்து இனிவரும் எந்த ஆண்டும் பொதுத் தேர்வு இல்லை என்றும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.  “2002 ஆம் ஆண்டில் 5.74 இலட்சமாக இருந்த இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 41,034 ஆக குறைக்கப்பட்டுள்ளது.” – (பக்கம் ,18)  “தொடக்க நிலை வகுப்புகளில் 2001ஆம் ஆண்டில் 12 விழுக்காடாக இருந்த இடைநிற்றல் விகிதம் 2016 ஆம் ஆண்டில் 0.90 விழுக்காடாகவ...