Posts

Showing posts from July, 2020

நூல் அறிமுகம்: எல்லோரையும் எழுத வைக்கும் சிலேட்டுக்குச்சி – தேனி சுந்தர்

Image
சிலேட்டுக்குச்சி.. அந்த வார்த்தையே அழகான வார்த்தை.. ஆயிரம் நினைவுகள் தோன்றும்.. ஒவ்வொருவரும் இன்னொரு முறை வாழ்ந்து பார்த்துவிட முடியாதா என ஏங்கும் குழந்தைப்பருவ நினைவுகளை ஓடும் நதியின் கரையில் மோதும் அலைகள் போல வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளத்தோடு உரசி உரசி எழுப்பி விடும் நூலாக வெளிவந்துள்ளது. அரியலூரில் ஆசிரியராக வாழும் நண்பர் முத்துக்கண்ணனின் முதல் நூல். தேனி மாவட்டம் கூடலூர் அவருக்கு சொந்த ஊர். பணி நிமித்தம் வாக்கப்பட்டு போன ஊர் அரியலூர். சிலேட்டுக்குச்சி, முழுக்க முழுக்க கல்விக்கூட பதிவுகள், பகிர்வுகளின் தொகுப்பு.. ஏற்கனவே பல பதிவுகளை முகநூலில் வாசித்திருக்கிறேன்.. இருந்தாலும் தொகுப்பாக ஒரு சேர வாசிக்கும் போது பலவகைக் காய்கறிகள், பாயாசத்தோடு விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கிறது எனக்கு. அத்தியாயங்கள் பதினேழு.. சிறுகதைகள் போல சம்பவங்களும் அதைச் சொல்லும் விதமும் வாசிக்க வாசிக்க அத்தனை அழகாக இருக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே ஒரு சிக்ஸர்.. அதில் வரும் மனோஜ் மொத்தப் புத்தகத்தையும் வாசித்து பிறகும் கடைசியாக ஒருமுறை உங்களைச் சிரிக்க வைப்பான்.. இரண்டு நாட்கள் கழித்து கூட...

நூல் அறிமுகம் : நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும்

படிப்பறிவில்லாத ஏழை மக்கள் வாழ்வதற்கான திறன்கள் மற்றும் பிழைத்திருப்பதற்கான உத்திகள் குறித்துத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி யோனா பிரீட்மேன்.. அவர் ஒரு கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைப்பதில் ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விடச் சிறந்தது என்கிற நம்பிக்கையுடையவராக இருந்தார். சுற்றுச்சூழல் கல்வி, சுயதிட்டமிடல், சமையலறைத் தோட்டங்கள், உணவுகளைப் பாதுகாப்பது, உடல்நலம், பாதுகாப்பான குடிநீர் எனப் பல தலைப்புகளில் 300க்கும் மேற்பட்ட படப்புத்தகங்களை உருவாக்கியுள்ளார்.. அவற்றில் ஒன்று தான் நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும் என்கிற இந்தப் புத்தகம்.. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு படங்கள்.. படங்களின் அருகிலேயே எளிமையான சிறு சிறு வாக்கியங்கள்.. குழந்தைகள், பெரியவர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் என அனைவரும் அந்நூலை வாசிப்பிற்கும் வழிகாட்டலுக்கும் பயிற்சி அளிக்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.. அவரவர் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.. கழிவுகளையும் களைகளையும் எப்படிச் செல்வமாக மாற்ற முடியும்.. மனிதக் கழிவிலிருந்து உரம...

தாய்மொழிவழிக் கல்வியே தரமான கல்வி : சங்கரய்யா

Image
ஜூலை,15 – தமிழகத்தின் மூத்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான தோழர்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள். சமூக வலைத் தளங்கள் முழுவதும் நேற்றைய தினம் தோழர் சங்கரய்யா அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அவரது கட்சி சார்ந்த, சாராத அனைவருக்கும் அவர் தோழர்.சங்கரய்யா தான். பல தரப்பினரும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்த சம்பவங்களையும் அவருடைய வாழ்க்கைத் துணுக்குகளையும் நிறைய பகிர்ந்து கொண்டிருந்தனர். அவரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தின. நல்வாய்ப்பாக என்.ராமகிருஷ்ணன் எழுதிய என்.சங்கரய்யா : வாழ்க்கையும் இயக்கமும் என்கிற புத்தகம் கிடைக்கப் பெற்றேன். மாணவர் பருவத்தில் இருந்து, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் தொடர்ச்சியான இயக்கங்கள், போராட்டங்கள், சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கை என விறுவிறுப்பான திரைப்படம் போல இருக்கிறது இவரது வாழ்க்கை அனுபவங்கள். அவருடைய இந்த, பொதுவுடைமை இயக்கம் சார்ந்த பிடிப்பு மிக்க வாழ்க்கை அமையப் பெற்றமைக்காக யாருக்காவது நன்றி சொல்ல வேண்டும் என்றால் சுதந்...

ரவிக்குமார் எழுதிய “தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்” – தேனி சுந்தர்

Image
“உங்கள் மனிதத் தன்மையை மதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்.. உங்களுக்கு குடிக்கத் தண்ணீர் தராத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்.. உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்..” என்கிற அம்பேத்கரின் கேள்விகளை நினைவூட்டுகின்ற இந்நூலாசிரியர், மக்களுக்காகத் தான் மதமேயொழிய மதத்திற்காக மக்கள் அல்ல என்பதை அறியாதவர்கள் தங்கள் சுயநலத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தையே தகர்க்க முற்பட்டுள்ளனர். அவர்களது சுயநலமும் வகுப்புவாத அரசியலும் சிறுபான்மை மக்களிடம் மட்டுமின்றி தலித்துகளிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியாளர்கள் இந்த அச்சத்தைப் போக்காவிட்டால் தலித் மக்கள் மதமாற்றம் என்னும் பாதுகாப்பைத் தேடிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் எச்சரிக்கிறார் ரவிக்குமார்.. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் எழுதிய சமீபத்திய நூல். மணற்கேணி வெளியீடாக வந்துள்ளது. அதிகாரத்துவ எதிர்ப்பு நூல் வரிசையில் இது நான்காவது நூல். சிறிய நூல் தான் என்றாலும் ஏராளமான விவாதங்களை எழுப்புவதாக உள்ளது. தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் : ஒரு சமூகத்த...

நூல் அறிமுகம்: அல்லிநகரம் ம.காமுத்துரை அவர்களின் குதிப்பி : கிண்டி விடும் கரண்டி – தேனி சுந்தர்

Image
நாம தினமும் பாக்குற சமையல்காரங்களோட தினசரி வாழ்க்கைச் சம்பவங்களையும் சங்கடங்களையும் உள்ளது உள்ளபடி பேசும் நாவல் குதிப்பி.. குதிப்பிங்கிறது வட்டகையில சோறு கிண்டிவிடுற பெரிய கரண்டி. பக்கத்திலேயே இருந்தும் பாக்காம இருக்கோம்.. கிட்டத்திலேயே இருந்தும் புரிஞ்சுக்காம இருக்கோம்கிற மாதிரி உணர வைக்குற கதை. கலங்க வைக்குற கதை... கதை முழுசும் தேனி தான். தேனிக்காரங்க பேச்சுதான். படிக்கப் படிக்கப் பக்கத்து கடையில் உட்கார்ந்து பேசுறதும் தெருவுல நடக்குறதும் வார்த்தைகள்ல வர்ற மாதிரி இருக்கு. அக்கம்பக்கத்துல் பேசுறது மொத்தமும் காதுல விழுந்துக்கிட்டே தானே இருக்கு. காது நம்மகிட்ட கேட்டுக்கிட்டா கேக்குது? அச்சு அசல் பேச்சு மொழி. நாவல் முழுக்க நம்ம தெருக்காரங்க தான் பேசுறாங்க. படிக்கும் போதே கண்ணுக்குள்ள படமா ஓடுது. நம்ம மக்களுக்கே உரிய அந்த நக்கல், நையாண்டி, திமிரு, தெனாவட்டு, சண்டியர்த்தனம் எல்லாம் அங்கங்க.. அப்படியப்படியே இருக்குது.. சேது, சாரதி, வளர்மதி, கடைக்காரரு, பாக்கியம், அக்காண்டிப் பெரியம்மா, ஆண்டாளு, வாசு, சண்முகம் தோழர், வசந்தி, சரவணன், முஜிபூர், ரமேஷ், துரைப்பாண்டி, கவுண்டரம்மா, சின்...

கொரோனா காலத்தில் மாற்று வகுப்பறை..! - தேனி சுந்தர்

Image
உலகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக அனைத்தும் முடங்கியிருக்கிறது. நோய்த் தொற்றால் இலட்சக் கணக்கிலான மரணங்கள் என்றால் இன்னொரு பக்கம் பொருளாதாரத் தேக்கம், வேலை வாய்ப்பின்மை, வருவாயின்மை எனப் பல சிக்கல்கள் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன. இத்தனைக்கும் இடையில் தான் அரசும் மக்களும் பெற்றோரும் கல்வியாளர்களும் குழந்தைகளின் கல்வி குறித்து பெருங்கவலை கொள்கின்றனர். பள்ளிகளை எப்போது திறப்பது, பாடத் திட்டத்தைக் குறைக்கலாமா, பாடங்களைக் குறைக்கலாமா, தேர்வுகளை நடத்தலாமா, கல்வி ஆண்டு முழுவதும் ரத்து செய்து விடலாமா, பள்ளிகளைத் திறந்து விட்டால் வகுப்புகளை எப்படி நடத்துவது எனக் கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன. உண்மை என்னவென்றால், கொரானா தொற்று தீவிரமாகி வருகிறது. எந்த ஷிப்டும் நடைமுறைக்கு வரமுடியாது. அதனால் புதிய அல்லது மாற்று வகுப்பறைகள் குறித்து சிந்தித்தே ஆக வேண்டும்.  இங்கு தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தன் தொடர்ச்சியான பணிகளின் அனுபவத்திலிருந்து சில முன்மொழிவுகளை அரசின் முன்பும் சமூகத்தின் முன்பும் வைக்கிறது. கல்லாமையை இல்லாமை ஆக்கும் உறுதியோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடங்கியத...

கேரளாவில் முதல் மணி ஒலிக்கிறது.. – தேனி சுந்தர்

Image
ஜூன் மாத துவக்கம் கேரளாவுக்கு அதிர்ச்சி ஊட்டுவதாகவே இருந்தது. தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாகக் கல்விச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்குக் குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்குத் தொலைக்காட்சி மூலமாக ஜூன் 1ஆம் தேதி பரீட்சார்த்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. மலப்புரம் பகுதியில் வசித்த 14 வயதுக் குழந்தை தன் வீட்டில் தொலைக்காட்சி வசதி இல்லை என்பதாலும் அதனால் அரசு நடத்தும் மெய் நிகர் வகுப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாள். கோவிட் 19க்கு எதிரான போரில் மிகச்சிறப்பான செயல்பாடுகளால் தேசிய அளவில் கவனிக்கத்தக்க வகையில் முன்னேறிக் கொண்டிருந்த கேரளாவுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. எங்கள் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பழுதாகி விட்டிருந்தது. சரிசெய்ய வேண்டுமென என் மகள் சொல்லிக் கொண்டே இருந்தாள். என்னால் அதனை பழுது நீக்கம் செய்ய முடியவில்லை. அதற்கு மாற்றாக நவீனமான போனையும் என்னால் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்கிறார் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தினக்கூலியான அந்தக் குழந்தையின் அப்பா. ...

தமிழக அரசு தனியார் பள்ளிகளின் துயரங்களைத் துடைக்க வேண்டும்.. - தேனி சுந்தர்

இந்த கல்வியாண்டு பிறந்து விட்டது. ஒரு மாதம் முழுதாக கடந்து விட்டது. ஆனால் பள்ளிகளைத் திறக்க இயலவில்லை. கட்டணம் வசூலிக்க இயலவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்றாலும் அதற்கும் ஆயிரம் சிக்கல்கள். பல பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் இல்லை என்கிறார்கள். வீட்டுக்கு ஒரு போன் தான் உள்ளது. அதையும் அப்பாவோ அம்மாவோ எடுத்துக் கொண்டு வேலைக்குச் சென்று விடுவதால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்கின்றனர் பல மாணவர்கள். ஒரு வீட்டுக்கு ஒரு போன் தான் இருக்கிறதாம். நாலைஞ்சு வாங்கிப்போட்டா தான் என்ன நட்டமாகிடப் போகுது? தக்காளி, வாழைப்பழம் போல கெட்டுப்போகிற பொருளா என்ன? அப்படி என்ன தான் வேலைக்குப் போகிறார்களோ? என்ன தான் பிழைப்பு பிழைக்கிறார்களோ? தெரியவில்லை என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் புலம்புவதைப் பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது. கலந்துகொள்கிற குழந்தைகளுக்கு, இணையவழி வகுப்புகளிலும் கூட பள்ளிச் சீருடை, டை, பெல்ட் சகிதம் உக்கார வைத்து பாடம் நடத்தி ஒரு கல்விச் சூழலை வீட்டிலும் உருவாக்கப் பார்க்கிறோம். அதுவும் கூட இந்த கல்வியாளர்கள் என்ற கூட்டத்திற்கு பிடிக்கவில்லை. குய்யோ முறையோ என்று ...