Posts

Showing posts from 2021

அதிர்ந்தது நிலம் மட்டுமில்லை… - தேனி சுந்தர்

இந்த முறை சீக்கியர்களை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என முடிவெடுத்துத் தனது பெரும்படைகளை அனுப்பினார் பேரரசர் ஃபரூக்சி. அவர் நினைத்தபடி நடந்தது. சீக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அப்படைக்கு தலை மையேற்று மொகலாய அரசர்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்த பண்டா சிங் கைது செய்யப்பட்டார். “டெல்லியை நோக்கிப் புறப்பட்ட வெற்றி ஊர்வலத்தில் இருநூறு சீக்கியர் களின் தலைகளோடு விலங்கிடப்பட்டு இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பண்டா சிங்கும் இருந்தார். தலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அரசர் கோபமடைவார் என்று எண்ணிய படைத் தலைவர்கள், திரும்பிச் செல்கிற வழியில் இருந்த அக்கம்பக்கத்து கிராமங் களில் வசித்த அப்பாவி சீக்கியர்களைக் கொன்று குவிக்குமாறு தனது படை களுக்கு உத்தரவிட்டனர். இப்படியாக சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டு அவர்களது தலைகளும் ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டன. இந்த ஊர்வலம் டெல்லியை அடைந்தபோது தலைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தன. இந்தக் கொடூரம் நடந்தது 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில். மன்னராட்சி காலத்திற்கு நிகரான அல்லது அதையும் விஞ்சி விடும் அளவிற்கு “என்னுடைய பகுதியில்தான் அதிகமான சீக்கியர...

பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வைத்த BRTE பூஜ்ஜியக் கலந்தாய்வு..!

தேனி மாவட்டத்தில் கலந்தாய்வு அறிவிப்பிற்கு முன்பிருந்த மொத்த ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் 56. அதில் இறப்பு, ஓய்வு, கன்வர்சன் காரணமாக கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் 10. (வழக்கு காரணமாக இன்னும் 8 பேர் பணி விடுவிப்பு செய்யப்படவில்லை). ஆக, இந்த நிலையிலேயே தேனி மாவட்டத்தில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 13 ஆகும். கலந்தாய்வுக்கு இருநாள் முன்னதாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் அடிப்படையில் புதிதாக 22 பணியிடங்கள். ஆக மொத்தம் தேனி மாவட்டத்தில் மட்டும் 35 காலிப் பணியிடங்கள் இருந்தன. மாவட்டத்திற்குள் வர வேண்டும் என கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை 15.  ஏற்கனவே இருப்பவர்கள் தொடர்ந்து சொந்த மாவட்டத்தில்  பணிபுரிவது போக, பணி நிரவல் காரணமாக வெளியில் சென்றவர்கள் 15 பேரும் மாவட்டத்திற்குள் வந்திருக்க முடியும். அது மட்டுமின்றி கூடுதலாக இன்னும் 20 பேர் தேனி மாவட்டத்திற்குள் வந்திருக்க முடியும். மிக முக்கியமாக பணி நிரவல் காரணமாக மாவட்டத்திற்கு வெளியில் சென்றவர்களை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சியாக நடந்த இந்த கலந்தா...

BRTE கலந்தாய்வு : அரசு சாதித்தது என்ன?

சரியான, தெளிவான கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை.. எந்த இடம் காட்டப்படும், எந்த இடங்கள் மறைக்கப்படும் என்கிற விபரங்கள் கடைசி வரையிலும் தெரியவில்லை.. முன்னுரிமை பட்டியல் வெளியிடப் பட்டு ஆசிரியர் பயிற்றுநர் அனைவரிடமும் திருத்தம் ஏதுமில்லை என்று கடிதம் பெற்று முன்னுரிமை பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில் தான் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வின் போதே சிலரது தரவரிசையில் மாற்றம் செய்யப்பட்ட வினோதமும் நடந்தது...! ஏற்கனவே இருந்த பணியிடங்கள் மட்டுமின்றி புதிதாக பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.. அந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதுவரையில் சரி. ஆனால் கலந்தாய்வு நடக்கும் போதே பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது எந்த வகையில் சரியானது என்று தெரியவில்லை.. மேலும் அனைத்து வட்டார வள மையங்களிலும் ஒரே விதமான பயிற்சி, பணிகள் தான் நடைபெறுகின்றன. ஆனாலும் ஒவ்வொரு மையத்திற்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை.. ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கை.. எந்த அடிப்படையில் பாடவாரியாக ஆசிரியர் பயிற்றுநர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.. ஒரு பொதுவான வழிகாட...

பள்ளிகள் வெடிகுண்டுகளை வீசி விடாமல் இருக்க வேண்டும்..! - தேனி சுந்தர்

மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மக்கோடா அப்பாவிடம் கேட்கிறான் . இன்று ரேசனில் சீனி போடுகிறார்களாமே என்று. இல்லை, நமது பகுதியில் நாளை தான் போடுவார்கள் என்கிறார் அப்பா. பின்னாடியே வந்த கயானா கேட்கிறாள். அப்பா, இன்று ரேசனில் சீனி போடுவார்களாமே.. எங்கள் ஆசிரியர் சொன்னார் என்று கடைசி பாட வேளையில் அவளது ஆசிரியர் சொன்னதை அப்படியே சொல்கிறாள். "நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரேசனில் சீனி போடுகிறார்கள்.. நீங்கள் வீட்டுக்குச் செல்லும் போது, வீட்டில் உங்கள் அம்மா சீனியை வைத்து சுவையான பீன்ஸ் சூப் அல்லது வேறு ஏதாவது இனிப்பான பதார்த்தம் உங்களுக்காக செய்து வைத்திருப்பார்.. அதை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு செல்லுங்கள்.." அப்பா தன் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.. யதார்த்தம் புரியாத இந்த ஆசிரியர்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு வெடிகுண்டை வீசி இருக்கிறார்களே என்று.. இது ஒரு அப்பாவின் குறிப்பு. இது நடந்தது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில்..! அமெரிக்கா, ஜப்பானில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் வீசிய அணுகுண்டு தாக்குதலால் அந்த நகரங்களில் இருந்த குழந்தைகள் எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டார்கள...

சேது ஆனந்தன் எழுதிய ஃபிடல் காஸ்ட்ரோ : விறுவிறுப்பான, வண்ணமயமான ஒரு நூல்... - தேனி சுந்தர்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர் தோழர் சேது ஆனந்தன்.. அவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர். எங்கள் மண்ணின் சிறந்த ஆளுமைகளில் அவரும் ஒருவர். பள்ளி ஆசிரியராக, ஓய்வறியா சங்கவாதியாக பணிபுரிந்தவர் பணி ஓய்வுக்கு பிறகு படைப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியர் அவதாரம் எடுத்திருக்கிறார்.. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் அப்போது தான் மாநில பொறுப்பிற்கு வந்த சமயம். தோழர் சேது ஆனந்தன் அவர்களின் முதல் நூல் ஜோசப் ஸ்டாலின் அப்போது தான் வெளிவந்தது. அதற்கான விழா தேனியில் நடந்தது. அவ்விழாவில் அவர் சார்ந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர், தமிழகம் அறிந்த தோழர் மாயவன் கலந்து கொண்டிருந்தார். அதே போல அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் தோழர் ஆர்.எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் ஆர். முத்து சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்.. இத்தனை பெரிய ஆளுமைகள் பங்குபெற்ற அந்நிகழ்வில் என்னை அங்கீகரித்து, எனக்கு ஒரு முக்கிய இடத்தை அளித்து என்னை ஊக்கப்படுத்தினார்.. எனக்கு அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்த...

இல்லந்தோறும்.. உள்ளந்தோறும்.. நாள்தோறும் அம்பேத்கர்..! – தேனி சுந்தர்

Image
தேசமே கார்பரேட் மயமாகும் இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரும் அவரவர் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க போராடியாக வேண்டியிருக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பெரும் நிறுவன ஊழியர்கள் தங்கள் தீராத பிரச்சனைகளுக்காக வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அத்தகைய வேலை நிறுத்தங்களை தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட தொழிற்தகராறு சட்ட மசோதாவை எதிர்த்துப் போராடி உரிமையை பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே நிலைநிறுத்தியவர் டாக்டர் அம்பேத்கர் .. எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம், அகவிலைப்படி வழங்கிடும் சட்டம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, தொழிலாளர் வைப்பு நிதிச் சட்டம், ஊதியத்துடன் கூடிய விடுப்புச் சட்டம், தொழிலாளர் விபத்து நஷ்ட ஈடு, வேலைவாய்ப்பு அலுவலக உருவாக்கம், சம வேலைக்குச் சம ஊதியம், தொழிலாளர் நலத்துறை என ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காக அவர் வாதாடாத, போராடாத அம்சங்கள் எதுவுமில்லை.. குறிப்பாக பெண்களின் உரிமைக்காக அவரது போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. பெண்களை இழிவாகவும், கேவலமாகவும் பேசுகிற மனுதர்மம் போற்றப்படும் நாட்டில் இந்த ...

நான் அமைதியாக இருக்கப் போவதில்லை..! – தேனி சுந்தர்

Image
“கடந்த சில இரவுகளாக நான் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை. தாங்கமுடியாத அளவுக்கு நான் பயமுறுத்தப்படுகிறேன். சித்திரவதைகளின் மூலம் குற்றுயிராக்கப்படுகிறேன். மருத்துவ வசதி ஏதும் தரப்படவில்லை..”- கென் சரோ விவா. யார் இந்த கென் சரோ விவா. நாம் நைஜீரியாவுக்குப் போக வேண்டும். நைஜர் டெல்டா பகுதிகள் முழுவதும் அங்குள்ள எண்ணெய் வளங்களுக்காக ஷெல் கம்பெனியால் சூறையாடப்பட்டது. அந்த நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களின் துருப்பிடித்து உடைந்த துளைகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவால் எந்நேரமும் – நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக – தீ ஜீவாலைகள் எரிந்து கொண்டிருந்தன. பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீ ஜீவாலைகள் தெரிவதாக விண்வெளி வீர்ர்களே கூறியதாக பதிவுகள் இருக்கின்றன. அங்கு அப்போதிருந்த சர்வாதிகார ராணுவ அரசுக்கும் ஷெல் கம்பெனிக்கும் இடையிலான கள்ளக் கூட்டு காரணமாக இரக்கமின்றி நிலங்கள் சூறையாடப்பட்டன. அப்பகுதியில் வாழ்ந்த ஓகோனி மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அம்மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர். ஓகோனி மக்களின் இனக்குழுத் தலைவர் ஒருவரின் மகன் தான் கென்சரோ விவா. அந்த மக்களின் துயரங்களை தன் எழுத்துகள...

ஏழை மக்களின் சுற்றுச் சூழலியல்

Image
பொதுவாக சுற்றுச் சூழலியல் குறித்த ஆர்வமும் அறிவும் அதற்கான செயல்பாடுகளும் வளர்ந்த நாடுகளில் தான் இருக்கும் .. அவர்கள் ஏற்கனவே வளர்ச்சியின் பெயரால் இயற்கையைப் பாழடித்த காரணத்திற்கு பரிகாரம் செய்வது போல செயல்படுவதும் உண்டு.. வளர்ந்த நாடுகளுக்கு தான் அதற்கான பணமும் செயல்படுவதற்கான ஆற்றலும் தேவையும் உண்டு.. ஏனெனில் அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.. ஏழை நாடுகளின் மீது சூழலியல் கட்டுப்பாடுகளைச் சுமத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு எதிரான கருத்து ஆகும்.. அதே போல படித்த, நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் அது குறித்து சிந்திப்பர், எழுதுவர், பேசுவர் என்கிற பார்வையும் இருக்கிறது.. சுற்றுச் சூழல் சிந்தனை என்றாலே துருவப் பகுதிகளில் பனி உருகுவதும், பனிக் கரடிகள் பரிதாபமாக நிற்பதுவும் ஓசோன் படல ஓட்டையும் தான் நினைவுக்கு வருகிறது.. அவற்றிலும் கூட உலகளாவிய சிந்தனை உள்ளூர் அளவிலான செயல்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன.. உலகளாவிய அளவில் கவனம் பெற்ற சில சூழலியல் போராட்டங்கள் உள்ளன. இவையாவும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குறிப்பாக 1970களில் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்றவை. வளர்ந்த நாடுகளில் நடைபெற்றவை அல்ல....

ஓங்கி ஒலிக்க வேண்டிய குரல்....

Image
அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி ஜோபைடன் பேசியது விவாதமாகி இருக்கிறது. தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் முகக் கவசம் களைந்து முகத்தில் புன்னகையோடு மற்றவர்களை வரவேற்கலாம். இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். முகக்கவசம் தொடர்பாக இவ்வளவு தூரம் அவர் அவசரப்பட வேண்டியதில்லை என்று கருத்துகள் வந்துள்ளன. அவ்வளவு நம்பிக்கையோடு அவர் பேசுவதற்கு காரணம் அந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது என்பது தான். தடுப்பூசி போட்டதால் அங்கு தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளது. தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் அமெரிக்காவை முந்தும் தகுதி உலகில் மோடி தலைமையிலான இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது என்று கிண்டலாக விமர்சிக்கப்படுகிறது.அந்த நையாண்டிக்குப் பின்னுள்ள துன்பமும் துயரமும் கையறு நிலையும் எதிரி நாட்டுக்கும் கூட வந்து வ...

நூல் அறிமுகம் : மோகனா : ஓர் இரும்புப் பெண்மணியின் கதை - தேனி சுந்தர்

Image
அறிவியல் இயக்கத்தை அறிந்தவர்கள் அனைவரும் பேரா.மோகனாவை அறிவார்கள்.. ஆகச் சிறந்த கருத்தாளர்.. எந்த தலைப்பில் பேச வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டே இருப்பார்.. அவ்வளவு சீக்கிரம் உரையை முடிக்கமாட்டார் என்பது தான் அவரைப் பற்றி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நமக்குள்ள பயம்.. வானியல் குறித்துப் பேசும் போது எந்த குறிப்பும் இல்லாமல் ஏராளமான தகவல்களை சொல்லிக் கொண்டே போவதை பல நாட்கள் வியப்புடன் பார்த்திருக்கிறேன்.. அதே போல வாய்க்குள் வராத அறிவியல் பெயர்கள், விஞ்ஞானிகளின் பெயர்கள் அவர்களின் காலம் போன்றவற்றையும் கூட குறிப்பின்றியே பேசுவார்.. அப்படியொரு வியக்கத்தகு நினைவாற்றல் உடையவர்.. அந்த நினைவாற்றல் துணையுடன் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.. அதிலும் பல சம்பவங்களை தேதியுடன் குறிப்பிட்டிருந்தார்.. நான் அவரைத் தொடர்புகொண்டு, எப்படி தேதிகளுடன் எழுதியிருக்கிறீர்கள்..? டைரி எழுதி உள்ளீர்களா..? என்று கேட்டேன்.. இல்லை தோழர், எல்லாம் நினைவிலிருந்து தான் என்றார்.. ஆச்சர்யமாக இருந்தது. பார்க்கும் அனைவரிடமும் எளிதாகக் கலந்து விடுவார்.. பழகிய, பேசிய எல்லோரையும் நினைவில் வைத்திருப்பார்.. திடீரென போனில் அழை...