கனிமங்கள் நிறைந்து ததும்பும் சுரங்கம்! : தேனி சீருடையான்
சொல் அடர்த்தி இருப்பதால் இதைக் கவிதை என்று சொல்லலாம்; சந்தத்துடன் கூடிய இசைக் கோலம் இல்லாததால் கவிதை இல்லை என்றும் சொல்லலாம். உரையாடலுடன் கூடிய கேள்வியும் பதிலுமாய் நூறு பக்கத்துக்கும் மேல் நீள்வதால் இதைப் புதினம் என்று சொல்லலாமா? அப்படியும் சொல்ல முடியும். ஒவ்வொரு குழந்தையும் நோக்கமின்றி உரையாடுகின்றன. அறிவியல், உளவியல், அரசியல் என உள்ளடக்கக் கூறுகள் கலந்தும் கலைந்தும் கிடப்பதால் இது புதினம் இல்லை என்று சிலர் வாதிடுவர். ஆக, இது “சீமையில இல்லாத புத்தகம்” என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது. உலகின் வேறு எந்த மொழியிலும் இம்மாதிரியான புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இப்படி ஒரு புத்தகத்தை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்ததே ஒரு புரட்சிச் சிந்தனைதான். இந்த நூலின் முக்கியக் கதாபாத்திரங்கள் மூன்று; டார்வின், புகழ்மதி, கீர்த்தி. அப்பா துணைப் பாத்திரமாய் வந்து போவார். அண்ணல் காந்தியடிகள் தனது சுய சரிதையில் குழந்தைக் கல்விபற்றி இப்படிக் கூறுவார். “குழந்தைகளுக்கு முதலில் கோடு போடவும் புள்ளி வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அது ஓவியமாய் மாறி மனசில் படியும்; அதுதான் முதல் கல்வி.” “அறுபது பக்க புஸ...