Posts

Showing posts from 2023

பூமிக்கு யார் சொந்தம் : செ.கா.வின் நூல் குறித்து

Image
யதார்த்தத்தின் வியப்பு.. ஈரோடு சென்னிமலை நண்பர் செ.கா.வுடன் ஒரு பத்தாண்டு கால பழக்கம் இருக்கும். வாசிப்பு மற்றும் பயணத்தில் மிக ஈடுபாடு கொண்டவர். வாசிப்பிற்கான பயணம், பயணத்திற்கான வாசிப்பு - இரண்டும் தான் செ.கா. செய்யும் பணிகளை வெறும் அடையாளத்திற்காக மட்டும் அல்லாமல் அர்த்தப் பூர்வமாக, ஆழமாக எடுத்துச் செய்யக் கூடியவர். அவருடைய அறிவியல், சூழலியல் மற்றும் பரிணாமம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு "பூமிக்கு யார் சொந்தம்?" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. வழக்கமாக, பூமி யாருக்கு சொந்தம்? பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற உயிர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது தானே? இயற்கை என்பது மனிதனையும் உள்ளடக்கியது தானே? என்றெல்லாம் பேசி இருப்போம். கேட்டு இருப்போம். பூமிக்கு யார் சொந்தம்? என்கிற தலைப்பே சிந்திக்க வைப்பதாக இருந்தது. பல்வேறு விதமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே வாசித்துள்ளேன். ஆனாலும் மீண்டும் ஒருமுறை அவற்றை ஒருசேர வாசிக்கும் போது புதிய அனுபவமாக அமைந்தது. சிறுத்தை, பெருஞ்சிறுத்தை மற்றும் சிவிங்கிப் புலிகள் தொடர்பான கட்டுரை ஒன்றிய அரசு மேற்கொ...

கலிலியோ மண்டியிடவில்லை – தேனி சுந்தர்

Image
“அறிவியலின் வரலாற்றைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கிறேன். மதம் எந்த அளவு அறிவியலை ஒடுக்கி இருக்கிறது என்பதை அறியும் போது மனம் தாளாத வேதனை அடைகிறது. அறிவியல் அறிஞர்களின் மறைக்கப்பட்ட வேதனைகளும் விம்மல்களும் அதிகார அடக்குமுறைகளும் அடங்கிய பெரும் மானுட ஆவணமாகவே அறிவியலின் வரலாறு இருக்கிறது. அறிவியல் பயன்பாடுகளை தினசரி வாழ்வில் உபயோகித்து பழகிய நாம் அதன் பின்னுள்ள மனித அறிவின் வியப்பான சாதனைகளை, போராட்டத்தை அறிந்து கொள்ளவே இல்லை. எனது கட்டுரைகள் அறிவியலின் நம்பிக்கைகளை ஆராய்கிறது. இலக்கியத்திற்கும் அறிவியலுக்கான நெருக்கத்தைப் பகிர்ந்து கொள்ளுதலை முதன்மைப் படுத்துகிறது” என எஸ்.ரா. அவர்கள் எழுதியுள்ள முன்னுரை வரிகள் தான் நூலின் பிரதானம்.. கலிலியோவின் சிறுவயதில், ஆண்கள் மேம்பட்டவர்கள் என்பதால் தான் பெண்களுக்கு ஆண்களை விட குறைவான பற்களை இறைவன் படைத்துள்ளார் என ஒரு மதபோதகர் கூறுகிறார். பெரியவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அதை அப்படியே நம்புகிறார்கள். பிறருக்கும் போதிக்கிறார்கள். ஆனால் சிறுவயது கலிலியோ அதை அப்படியே நம்பவில்லை. தாமறிந்த பெண்கள் அனைவரையும் வாயைத் திறக்க சொல்லி பற்களின் எண...

எது சிறார் இலக்கியம் : தொடரும் விவாதம் - தேனி சுந்தர்

Image
 நன்றி :   இந்து தமிழ் நாளிதழ்

சொல்வதும் கேட்பதும்தான் கற்றலா ?

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் : கள்ளக்குறிச்சி மாவட்ட நிகழ்ச்சி

மகாத்மா காந்தியை பேசும் புத்தகங்களுடன் தேனி சுந்தர்

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிகழ்வு

உள்ளுட்டேன் சார்..! - பேரா ச.மாடசாமி

தனித்து நிற்கும் ஆசிரியரை அல்ல.. கண்கள் எப்போதும் தேடுவது… கலந்து நிற்கும் ஆசிரியரை- குழந்தைகளோடு கலந்து நிற்கும் ஆசிரியரை! அப்படி நாங்கள் தேடிக் கண்டுபிடித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் - தேனி சுந்தர். இவர் மொழி, சிந்தனை, செயல் ஒவ்வொன்றிலும் கல்விக்கான வேரைக் காண்கிறோம். குழந்தைகளின் மொழி - இலக்கியம் ஆனது இவரால்... குழந்தைகள் சொல்லும் டுஜக் டுஜக்கை இசைத் துணுக்குகள் என்றவர் இவர். ‘காக்காச்சி அங்கக்கு’க்கு டிக்சனரியில் அர்த்தம் இல்லை. சுந்தரின் எழுத்துலகில் அர்த்தம் இருக்கிறது. ‘இந்த மாடு பேரு என்னப்பா?’ என்று குழந்தை முன்வைத்த கேள்விக்குப் பெரியவர்கள் உலகில் விடை இல்லை. நெகிழ்வான உலகம் முன்வைக்கும் கேள்விக்கு இறுகிய உலகத்தில் விடை கிடைக்குமா? குழந்தை உலகில் பயணிக்க நம் அதிகாரம், அகங்காரம் இரண்டையும் மூட்டை கட்டி வைக்க வேண்டும். அது ஒரு வாய்ப்பு. மீண்டும் அந்த வாய்ப்பு ‘ஓங்கூட்டு டூணா’வில் கிடைத்தது. வெளியே வேறொருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ‘சுந்தர் சார்! சுந்தர் சார்!’ என்று குழந்தைகள் கூப்பிடுகின்றனர். வகுப்பறையில் நிலவும் இந்த சுதந்திரம் அழகானது; அபூர்வமானது. நான் மிக ரசித்...

தேனி சீருடையான் எழுதிய நிறங்களின் உலகம் நூல் குறித்து

Image
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவ்வப் போது சில நூல்களைக் குறித்து பேசுவார்.. அது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறும். ஊடக வெளிச்சம் புத்தகங்கள் மேல் பாய்வது நல்ல, ஆரோக்கியமான விசயம்.. அதுவும் கமல்ஹாசன் போன்ற உலகம் அறிந்த பிரபலங்கள் அந்த நூல் குறித்த பேசும் போது, வார்த்தைகள் மேலும் கூடுதல் கவனம் பெறுகிறது.. கடந்த ஆண்டு, பிக் பாஸ் நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து பேசி, மக்களிடையே அப்படியொரு கவனம் பெற்ற நூல் தான் “நிறங்களின் உலகம்”.. தேனியின் முன்னோடி படைப்பாளிகளுள் ஒருவரான தோழர் தேனி சீருடையான் எழுதிய நாவல்.. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, 1996 ல் எழுதி முடிக்கப்பட்ட இந்த நாவல் 2008 ல் தான் வெளிவந்திருக்கிறது. அதை 2014 வாக்கில் தான் நான் வாங்கினேன். 2022 அக்டோபரில் தான் வாசிக்க எடுத்திருக்கிறேன்.. ஒரு படைப்பு உருவாகி , அச்சாகி, வாசகர் கைகளில் சென்றடையவும், அதை வாசிக்கவும் எவ்வளவு பெரிய கால இடைவெளி..? குற்ற உணர்ச்சி தான் பொங்கி வருகிறது..! பிறக்கும் போது இருந்த கண் பார்வையை , இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இழந்து விடுகிற...

"ஓங்கூட்டு டூணா" - நானும் "ஐ லைக் இட்..! - மனத்துணைநாதன்

"குழந்தைங்க இப்பவெல்லாம் ரொம்ப மோசங்க.. சொல் பேச்சே கேட்கிறதில்ல.. அடிச்சா தான் உருப்பிடுவாங்க.. எங்க கையில் இருந்த கம்ப தான் பிடுங்கிட்டாங்களே!"- இப்படி தான் குழந்தைகள் மீதான அக்கறையும் பரிவும் பரவலாய் பொங்கி வழிகிறது. ஆம், குழந்தைகளை குற்றவாளிகளை போல அணுகுகிற பார்வை தொடர்ந்த வண்ணம் உள்ளது. குழந்தைகள் அவர்களது இயல்பை, அது தவறோ, சரியோ... வெளிப்படுத்தி விடுவார்கள்.. பெரியவர்களைப் போல உள்ளும் புறமும் வேறு வேறாக அவர்கள் இருப்பதில்லை. எப்பொழுதும் நான் சொல்வதை மட்டும் செய் என்றால் அது சரியாகுமா? "ஏய்.. சாருக்கு நான் தான் எட்டுப் போட சொல்லிக் கொடுத்தேன்..!" என்று குழந்தைகள் சொன்னால் "ஆமாம்" என்று அதை ஏற்று சிரிக்கிற மனங்கள் தேவை அல்லவா...? இயல்பாக ஒரு மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான உரையாடல்கள் பற்றி பெரிதாக எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அதுவும் அதே குழந்தைகளுக்கான உரையாடல் மொழியில்... பாடங்களுக்கு அப்பால் வகுப்பறையில் நடக்கின்ற உயிரோட்டமான ஒரு அசல் சூழலை பேசவோ அதை முக்கியத்துவம் கருதி எழுதி ஒரு புத்தகமாகவோ வெளியிட யாரும் முயலவில்லை. தேனி சுந்தர் அவர்கள் அ...

மணக்கும் ஏலம்.. வலிக்கும் வாழ்க்கை : ஏலோ..லம் நாவல்..!

காலையில் ஆறு-ஏழு மணிக்குள்ளும் மாலையில் நான்கு-ஐந்து மணிக்குள்ளும் தீயணைக்கப் போகிற வண்டிகள் போல அவ்வளவு ஜீப்கள் விர்விர்ரென்று போவதைப் பார்க்க முடியும். வண்டிக்குள் பார்த்தால் அரிசி மூட்டைகளைப் போல அவ்வளவு பெண்கள் ஒருவர் மேல் ஒருவராய் அடைந்து கிடப்பார்கள். மலைப் பாதையில் எப்படி அவர்களால் இவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்து போய் வர முடிகிறது என்பதை நினைத்தாலே நமக்கு கால், கைகளில் “சூக பிடிச்சுக்கிரும்..!” கம்பம் மெட்டு சாலை மற்றும் கம்பம் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் நாள்தோறும் காண்கிற காட்சி இது. நான் வசிக்கும், பணிபுரியும் கிராமங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வண்டிகளில் செல்கிறார்கள். கேட்டால் “மலை வேலைக்கு” என்பர். குழந்தைகள் தூக்கத்தில் இருக்கும்போதே வண்டி வந்து, பெண்கள் வேலைக்கு கிளம்பி விடுவார்கள். மீண்டும் அவர்கள் வீடு வந்து சேர்வதற்குள் அன்றைய பொழுது போய்விடும்.! குழந்தைகள் தாங்களே எழுந்து, குளித்து, கிளம்பி பள்ளிக்கு வருவர். இப்படியொரு வேலைவாய்ப்பு உருவானதன் பின்னணி என்ன? என்பதை வலிமிகு சித்திரமாக வரைந்து காட்டி இருக்கிறது ஏலோ-லம் நாவல்.! த...

அரண்மனை கமுக்கங்களை அவிழ்த்துக் காட்டுகிற நாவல்... சுளுந்தீ..!

இவ்வளவு விறுவிறுப்பும் பரபரப்புமான ஒரு நாவலை சமீபத்தில் நான் வாசித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நான்கைந்து பிரதிகள் வாங்கி, நண்பர்களுக்கு பரிசாக கூட வழங்கி இருக்கிறேன். ஆனால் வாசிக்க வாய்க்கவில்லை.. விடுமுறை கிடைத்ததால் டொம்னிக் லொப்பியர், லேரி காலின்ஸ் எழுதிய “நள்ளிரவில் சுதந்திரம்” (680 பக்கங்கள்), சல்மான் ருஷ்டீயின் “நள்ளிரவின் குழந்தைகள்” ( 752 பக்கங்கள்) உள்ளிட்ட நூல்களை வாசித்ததும் அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட படைப்பாளர் ஒருவரின் நூலை வாசிப்போம் எனக் கருதி, "சுளுந்தீ" (480 பக்கங்கள்) நாவலை எடுத்தேன்.. இந்நூலாசிரியர் இரா.முத்துநாகு, தேனி மாவட்டம் வைகை அணை அருகில் உள்ள குறும்பபட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். தினமலர், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் பத்திரிகையாளராக பணி புரிந்தவர். ஒளிப்படக் கலைஞரும் கூட. தேனி மாவட்டத்தில் பல்வேறு விதமான இலக்கிய வகைமை எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள் உள்ளனர். வரலாற்றுப் புனைவு எழுத்துக்கு ஓர் அற்புதமான அடையாளமாக, எழுத்தாளராக இந்நூலின் மூலம் முத்திரை பதித்துள்ளார் திரு.முத்துநாகு.. மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல், தொல்லியல், கள ஆய்வு எ...

ஓங்கூட்டு டூணா : தினமலர் நாளிதழ் நூலறிமுகம்

Image
மழலையர் வகுப்பறையில் பெற்ற அனுபவங்களை இலக்கிய மனதுடன் பகிர்ந்துள்ள நுால். நிகழ்வுகளை எளிய கவிதைகள் போல் சுவாரசியம் குன்றாமல் தருகிறது. வாழும் சூழலை புரிய துடிக்கும் மழலையர் செயலை உள்வாங்கி அற்புதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பிக்கும் போதே கற்றலும் உணர்வுப்பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. அறியாமல் தவிப்பது போன்ற ஆசிரியரின் பாவனைகள், எளிய கற்பித்தல் உத்தியாக வெளிப்பட்டுள்ளன.வகுப்பறையை கூர்ந்து கேட்டல், விழிப்புடன் இருத்தல், சமநோக்கு பார்வை என மழலையருக்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகளை வெளிப்படுத்துகிறது. பதிவாகியுள்ள ஆக்கங்கள், மழலை மொழியை மகிழ்வுடன் உள்வாங்கிய இனிய கவிதைகள் போல் இதம் தருகின்றன. – மலர் தினமலர் நாளிதழ் நூலறிமுகம்

ஆசிரியர் இளங்கோ கண்ணன் எழுதிய "தவசு" நூல் குறித்து...

நான், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துகிற புது விழுது: இருமாத கல்வி இதழின் ஆசிரியராக இருந்த போது ஒவ்வொரு இதழ் தயாராகும் முன்பும் தொடர்பில் இருக்கும் அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் இதழுக்கு படைப்புகள் கேட்டு தகவல்கள் அனுப்புவதுண்டு.. வாட்ஸ்அப், குறுந்தகவல், மின்னஞ்சல், முகநூல், மெசஞ்சர், கடிதம் என அனைத்து வழிகளிலும் முயற்சிப்பது வழக்கம். "அய்யய்யய்யய்ய்யே..இவனோட பெரிய தொல்லையாக இருக்கே..!" என்று எத்தனை பேர் திட்டினார்களோ தெரியாது..! ஆனாலும் நான் தொடர்ந்து கொண்டே இருப்பேன். தமிழகம் அறிந்த கல்வியாளர் பெருமக்கள் மரியாதைக்குரிய எஸ்.எஸ்.ராஜகோபாலன், பேரா.ச.மாடசாமி, ஆயிஷா நடராசன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, விஞ்ஞானி தவி வெங்கடேஸ்வரன், கவிஞர் முத்து நிலவன் என ஏராளமான பெரிய தலைக் கட்டுகளிடம் எல்லாம் கட்டுரைகளை வாங்கிவிடுவேன்.. இருந்த போதிலும் நம்ம ஆசிரியர் பெருமக்களிடம் இருந்து பெரிய அளவுக்கு படைப்புகள் வந்து சேராது. ஆசிரியர் குழுவில் இருக்கும் நண்பர்களிடமே கூட போராடித்தான் வாங்க வேண்டி இருக்கும்.. நம்மை மகிழ்விக்கும் வகையில் படைப்புகள் அனுப்பிய ஒரு சில ஆசிரியர்களுள் நெல்லை இளங்கோ கண்ணனு...

வளர்ந்து வரும் ஓர் இலக்கிய வகை இது - ச.தமிழ்ச்செல்வன்

Image
டுஜக் டுஜக் என்கிற நூலின் மூலமாக புகழ்பெற்ற எழுத்தாளர் தேனி சுந்தரின் இரண்டாவது முயற்சி இது. டுஜக் டுஜக் நூலில் அவர், அவருடைய குழந்தைகளின் உரையாடல்களையும் அவர்களுடனான உரையாடல்களையும் தொகுத்திருந்தார். ஆசிரியரான அவர் இந்த நூலில் வகுப்பறைக் குழந்தைகளின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் படம் பிடித்திருக்கிறார்.. தமிழில் இப்போது வளர்ந்து வரும் ஓர் இலக்கிய வகை இது. குழந்தைகளின் உலகத்துக்குள் நுழைய பெரியவர்களுக்கு எளிதில் பாஸ்போர்ட் கிடைப்பதில்லை. அந்த பாஸ்போர்ட்டுக்காக பலரும் மனுப் போட்டுக் கொண்டுள்ளார்கள் பலகாலமாக.. குழந்தைகளுடன் நடத்தும் உரையாடல்கள் அவர்களின் மனப்போக்கு எத்திசையில் செல்கிறது என்பதைக் கணிக்க உதவும் கருவியாக பயன்படுவதை இத்தகைய நூல்கள் காட்டுகின்றன.. வீட்டுக்கு நிறைய விருந்தாளிங்க வந்திருக்கும் போது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், அன்று வகுப்பில் அவள் அழுதுகொண்டே இருந்தாலும் பள்ளிக்கூடம் போனால் நாலு எழுத்துப் படிச்சுக்குவாளே என்று சொல்கிறார்கள். வீடு நிறைய விருந்தாளிகள் வந்திருக்கும் போது வீட்டில் இருந்தால் குழந்தைகள் எவ்வளவோ கத்துக்குமே என்று தேனி சுந்தர் எழுதுகிற...

ஆசிரியர் நாட்குறிப்பு : வெங்களத்தூர் பள்ளி

Image
ஆசிரியை உதயலட்சுமி எழுதிய ஆசிரியர் நாட்குறிப்பு : வெங்களத்தூர் பள்ளி சமீபத்தில் வகுப்பறை அனுபவங்கள் தொடர்பான பல அனுபவங்கள் சார்ந்த நிறைய கட்டுரைகள், நூல்கள், சமூக வலைத் தள பதிவுகள் வரத் துவங்கி உள்ளன. நானும் எழுதி இருக்கிறேன். "ஓங்கூட்டு டூணா..!" என்கிற தலைப்பில் வந்திருக்கும் அந்நூல் பால்வாடி மற்றும் முதல், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் உடனான அனுபவங்கள்.. அவர்களது உரையாடல்கள்.. விளையாட்டுகள் அடங்கியது. ஆசிரியை உதயலட்சுமி எழுதி இருக்கும் இந்நூல் 6 முதல் 10ஆம் வகுப்பு குழந்தைகள் தொடர்பானவை.. ஒவ்வொரு வகுப்பு குழந்தைகளின் புரிதலும் அனுபவமும் எதிர்பார்ப்புகளும் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளும் வெவ்வேறானவை. அந்த அடிப்படையில் மிக முக்கியமான ஒன்று. பேரா.மாடசாமி அவர்களின் நீண்ட நாள் ஆசை, இதுபோன்ற வகுப்பறை டயரிகள் நிறைய ஆசிரியர்களால் எழுதப் பட வேண்டும் என்பது. அவரே அணிந்துரை எழுதியுள்ளார். மேலும் நண்பர்கள் விழியன், சிவா உள்ளிட்டோரும் எழுதி இருக்கிறார்கள்.. நாங்க குட்டிப் பள்ளிக் கூடத்து வாத்தியார்கள். பெரிய பள்ளிக் கூடத்து வாத்தியார்கள் பெரும்பாலானவர்களை சந்திக்கும் போது மிகவும் வெறு...

என் பெயர் ராஜா – வாசிப்பு அனுபவம் – சு.டார்வின்

Image
நாங்க சென்னைக்கு, புத்தகக் கண்காட்சிக்கு போயிருந்தப்ப வாங்குன புத்தகம் என் பெயர் ராஜா.. அந்தக் கதை தான் இது. நான் ஒரு கோம்பை நாய். எங்க அம்மா பெயர் ராணி. என் அம்மா ஒரே சமயத்தில் ஐந்து குட்டிகள் ஈன்றாள். அதில் முதல் குட்டி நான் தான். என் பெயர் ராஜா. நான் மூன்று மாத குட்டி. ஆனால் ஒன்று, என்ன ஆனாலும் என் தங்கச்சி மீது தான் அம்மா ரொம்ப பாசமாக இருப்பாள். ஒரு நாள் என் அம்மா ராணி உடைய எஜமான் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, என் தம்பிகள் மூன்று பேரையும் தூக்கிப் போயி விட்டார். என் அம்மாவிடம் கேட்ட போது, அவர்களை விற்பனை செய்ய போவதாக சொன்னாள். எனக்கு விற்பனை என்றால் என்ன என்று தெரியாது. தாயாரிடம் கேட்டேன். அதாவது மகனே, விற்பனை என்றால் இப்போது நம்மிடம் இருக்கும் பொருளை இன்னொருவருக்கு கொடுத்து விட்டு பணம் வாங்கிக் கொள்வது என்று கூறினாள். விற்பனைக்கு என்று சந்தை இருக்கும். அங்கே காய்கறி, மீன், கறி என்று நிறைய இருக்கும். அங்கே தான் என்னையும் என் எஜமான் வாங்கி வந்தார். அங்கே தான் உன் மூன்று தம்பிகளையும் விற்பனை செய்யப் போகிறார்கள் என்று அம்மா சொன்னாள். அடுத்து எங்க அம்மா சொன்ன மாதிரியே என்னை...

தோழர் சீருடையான் அவர்களின் புதிய நாவல் "ஒற்றை வாசம்"

Image
சில நேரங்களில் புத்தகங்கள் வருகிற பார்சல்களைப் பிரித்த கையோடு வாசிக்க உட்கார்ந்து விடுவதுண்டு. நாம் ஆர்டர் போட்டு வாங்குகிற நூல்களை விட அன்பின் நிமித்தமாக அனுப்பி வைக்கப் படுகிற நூல்களுக்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதுண்டு. அந்த வகையிலேயே தோழர் சீருடையான் அவர்களின் புதிய படைப்பான "ஒற்றை வாசம்" நாவல் வாசிப்பும் தொடங்கியது. அதிலும் நம்ம தேனியை மையப்படுத்திய படைப்புகள் என்றால் இயல்பாகவே கொஞ்சம் கூடுதலான ஈர்ப்பு வந்து விடுகிறது தானே.. இன்று போய், தேனியில் இறங்கி "காட்டுச் சாலை" எங்கு இருக்கிறது என்று கேட்டால் கிட்டத்தட்ட யாருக்கும் தெரியாது என்று தான் நினைக்கிறேன். அதையே "பாரஸ்ட் ரோடு" என்றால் சின்ன குழந்தை கூட சொல்லி விடும். அந்தச் சாலையில் அங்கங்கே சில குடிசைகள் முளைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடக்கிற கதை. சௌமிய வருடம் என்கிற ஒரு குறிப்பில் இருந்து அறுபதுகளின் கடைசி என்று நாம் உறுதிபட சொல்ல முடிகிறது. ஃபிளாஷ் பேக் கதை தான். வியட்நாம் வீடு படத்தில் வருகிற, "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் அன்பே, என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.. வேர் என நீ இ...

ஓங்கூட்டு டூணா _வாசிப்பு அனுபவம் : அருந்ததி

தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ஓங்கூட்டு டூணா _ புத்தகத்தை நானும் வாசித்தேன். அதுவும் இரண்டு முறை...! எனை வெகுவாக கவர்ந்த எழுத்து நடை... இதே விடயத்தை இன்னொருவர் இதே போல எழுத முடியுமா என தெரியவில்லை. இது அவருக்கே உரிய தனி நடை.. புத்தகத்தை படித்தபோது...  சிரித்த சிரிப்பிற்கு அளவே இல்லை.  அப்படி ஒரு நகைச்சுவை. ஆமாம், நானும் 20 ஆண்டுகள் தொடக்கப் பள்ளி ஆசிரியை தான்... அரை மணி நேரத்தில் விறுவிறுப்பாக வாசிக்கலாம். 'இயலாதென்று முயலாதவர்கள்... இறக்கை இருந்தும் பறப்பது இல்லை' ஆம்... மாற்று சிந்தனையுடன் புத்தகம் படைத்து... இதை பறை சாற்றி இருக்கிறார் ஆசிரியர்.. குழந்தைகளின் அனுபவங்கள் சார்ந்த வரிகளிலும் வகுப்பறையை தாண்டி... நாம் மண்வாசனையை கவனிக்கலாம்.' எழுத முனைகையில் தான்... எழுத்தாளர் அருமை தெரிகிறது. அப்படி ஒரு அருமையான எழுத்தில்...  தாங்கள் மனதை கவர்கிறீர்கள். வாழ்க.. வளர்க...💐 அன்புடன் தோழமை அருந்ததி ஆசிரியை, தேனி

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : தேனி சீருடையான்

குழந்தைகளே நடித்து குழந்தைகளே இயக்கும் கலைக் காவியம்...! “உனக்குத் தெரியும்; ஒரு குழந்தை ஒரு வார்த்தையைச் சொல்லும்போது அது உனக்குத் தெரியும் என்ற உண்மை உனக்குப் புரியும்.”  நான் ஆறாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்தும் லண்டனில் இருந்தும் வெளிவந்த பிரெய்லி புத்தகங்களை வாங்கி வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவற்றில் குழந்தைகளுக்கான பருவ ஏடு ”சில்ட்ரன்ஸ் ஃப்ரண்ட்” முகப்பு அட்டையில் மேற்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். (you know that truth when a child says it in her language.) ஒரு குழந்தை அனுதினமும் பேசும் மொழிதான் என்றாலும் அது புதிய திசையில் இருந்து புறப்பட்டு புதிய இலக்கு நோக்கிப் பயணிப்பதை உணர முடிகிறது. நம் முகத்தை நாமே பார்த்துக் கொள்வது போல நமக்கே ஆச்சர்யமாய் இருக்கிறது. அனுதினமும் கண்டு கேட்டவை என்றாலும் ஓர் குழந்தை நல விரும்பியால்தான் அதை ஆவணப் படுத்த முடிகிறது.. தேனிசுந்தர் அதைச் செய்திருக்கிறார். “குழந்தை இயலின் ஆவணக் காப்பகம் தேனிசுந்தர்” என்றால் அது மிகையல்ல. ஏற்கனவே குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள் எழுதி அதை நிரூபித்திருக்கிறார். அவற்றின் ப...