உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் : நூல் வாசிப்பு அனுபவம் : ஆசிரியர் ஐ.சுமதி
புத்தகத்தின் அட்டை படத்தையும் தலைப்பையும் பார்க்கும் போது உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்.. நூல் ரொம்ப polite மாதிரி தான் தெரியும்.. ஆனா அப்படி இல்ல... நம்முடைய அந்த ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு.. கட்டுரைகள் எல்லாமே ரௌத்திரம்..! உனக்குரிய இடம் எங்கே?, விடுங்க சார்.. திட்டாதீங்க சார்.. படிக்க வைக்கவா? எதார்த்தத்தை விவாதிக்க வைக்கவா?, மாணவர்கள் எதை தெரிந்து கொள்ளணும் ?, கைய கட்டு ..வாய பொத்து .., கேள்வியா கேட்கிற கேள்வி?, எவ்வளவு தைரியம் பாஸ் உங்களுக்கு ? - இப்படியான இந்நூல் 25 கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்புகளில் பல கேள்விகள்... இந்த கேள்விகளில் மாணவன் ஆசிரியரை நோக்கி கேட்கும் கேள்விகள் மட்டுமல்ல, ஆசிரியர் அதிகாரியை நோக்கி கேட்கும் கேள்விகளும் அடங்கும்.. கணக்கும் இனிக்கும் என்ற கட்டுரையில் கணக்கு ஆசிரியர் என்றாலே " ஏன் கோபம்? சிடுசிடுப்பு? சிரிச்சா என்ன? (கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போய் பார்த்தால் நம் கணித ஆசிரியர் எல்லாருமே கொஞ்சம் உர்ன்னு தான் இருந்துருக்காங்க🤔) "சிரிக்கத் தெரியாத மனிதர்களைப் பார்த்தால் சிரிக்க தோன்றும் எனக்கு " என்கிற கவிஞர்...