Posts

Showing posts from August, 2025

தேனி சுந்தரின் 'மாணவர் மனசு' வெளிப்படுத்தும் சிறார் உளவியல் : முனைவர் மு.செந்தில் குமார்

Image
புதியவன் செந்தில் அவர்களின் வாசிப்பு அனுபவம்     கம்பம் பள்ளத்தாக்கில் விளைந்த, விளையும் இலக்கியப் பயிர்களில் முக்கியமான, முதன்மையான பயிர் தேனி சுந்தர் அவர்கள். அப்பகுதியின் படைப்பாளர்கள் கதை, கவிதை, நாவல் என இயங்கும்போது இவர் மட்டும் குழந்தைகளுக்கான இலக்கியத்தைக் கையிலெடுத்து தொடர்ச்சியாகப் படைப்புகளைப் படைத்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மையப் பொறுப்பு, த.மு.எ.க.ச, ஆசிரியர் இயக்கங்களில் முனைப்போடு பங்காற்றி வருகிறார். கல்வி, சிறார்கள் தொடர்பான இவரது கட்டுரைகள் நாளிதழ்கள் இலக்கிய, இதழ்களில் வெளிவந்துள்ளன. 2016 - மகாராஜாவின் புதிய ஆடை 2021 - டுஜக் டுஜன் அப்பாவின் டைரி 2022 - சீமையில் இல்லாத புத்தகம் 2023 - எதிர்பாராத பரிசு 2023 - ஓங்கூட்டு டூணா 2024 - மாணவர் மனசு 2025 - நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன 2025 - திட்டமிடாத வகுப்பறைகள் 2025 - உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் 2025 - நட்சத்திரக் குழந்தை மேற்கண்ட அவரது படை...

டுஜக் டுஜக் (ஒரு அப்பாவின் டைரி ) - வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
இந்நூல் நூறு பக்கங்களை கொண்டது. புதுக்கவிதை வடிவில் குழந்தையின் மழலை மொழியை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும் பொழுதும் நம் மனதில் ஒரு பிளாஷ் பேக் தோன்றும். நம் வீட்டுக் குழந்தைகளின் சிறுவயது நினைவுகள் ஞாபகத்திற்கு வரும். இந்த புத்தகத்தை வாசித்த பின் கண்ணில் காணும் குழந்தைகள் எல்லாம் (நடமாடும்) கவிதைகளாகவே தோன்றும். அவர்களின் ரசிகர்களாவோம் நாம்... அடுத்தவர்களின் டைரியை வாசிக்க கூடாது !ஆனால் இந்த அப்பாவின் டைரியை தைரியமாக வாசிக்கலாம்.. இது ஒரு அப்பாவின் டைரி அல்ல... அப்பாக்களின், அம்மாக்களின் டைரி... இந்த நூலை வாசிக்கும் பொழுது இப்படி ஒரு டைரி நாம் எழுதாமல் போனதுக்கான வருத்தம் தோன்றும்... புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தேதியை குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர் - இது அனைத்தும் கொரோனா காலம் Lock down எனும் களம் அமைத்து தந்த நேரத்தில் எழுதப்பட்டது. அய்யோ... மின்னல் வெட்டுது பாப்பா ... உள்ள ஓடி வந்துரு. ...! அது நிம்மல் இல்லப்பா... கெட்டுப்போன லைட்டு....! இப்ப பாரு அமந்து அமந்து எரியும் ..,.! ---------------------------------- "கொஞ்ச நாள் கிளி வேணும் கிளி வேண...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் விவாதக் கூட்டம் : பெரம்பலூர் மேக்நாட் அறிவியல் மன்றம்

Image
அனைவருக்கும் வணக்கம். பெரம்பலூர், மேக்நாட் அறிவியல் மன்றத்தின் 4வது நூல் விவாதம் 16.08.2025 அன்று நடைபெற்றது. தேனி சுந்தர் அவர்கள் எழுதிய 'திட்டமிடாத வகுப்பறைகள்' என்ற நூல் கூட்டு வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. நூல் உள்ளடக்கமும் விவாதமும் - கருத்துத் தொகுப்பு: இந்நூலின் ஆசிரியர், பள்ளி ஆசிரியராக தம் சொந்த வகுப்பறை அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளார். நூலின் உள்ளடக்கமானது முன் தொடக்க கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையேயான வகுப்பறை சூழலில் திட்டமிடாத செயல்பாட்டு அனுபவமே ஆனாலும் கூட அவ்வனுபவத்தின் வழியாக நாம் பெறும் கோட்பாட்டுத்தன்மையை விரிவாக மேல்நிலை வகுப்பு மாணவர்கள் வரை பயன்படுத்த முடியும். குழந்தைமை நிறைந்த மாணவர்கள், ஆசிரியர்களுடன் அன்புடனும் இணக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றால் ஆசிரியர்கள் மாணவர்களுடன் மனிதத் தன்மையுடனும் அனுசரணையாகவும் நெருங்கிய நட்பினராகவும் நடந்துகொள்ள வேண்டும். வழக்கமான திட்டமிட்ட வகுப்பறை நோக்கில் அல்லாது திட்டமிடாத செயல்பாடுகளிலும் மாணவர்களின் அறிவை உள் தூண்டுதலுடன் மிகச் சிறந்த ...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து கனவு ஆசிரியர் மாத இதழில்..

Image
குழந்தைகள் உலகை மிக நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் எளிமையாகவும் இருக்கிறது. குழந்தைகளைக் கண்டுபிடிக்க குழந்தைகளோடு குழந்தையாக ஒன்றி இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகம் உங்களது குழந்தைமை கால நினைவுகளைக் கொண்டுவந்து முன்னிறுத்தும். பள்ளி வகுப்பில் நிகழ்ந்த நினைவுத் தொகுப்புகளின் அனுபவப் பகிர்வே இந்நூல். - பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளிவரும் கனவு ஆசிரியர் மாத இதழ் ஆகஸ்ட், 2025

மாணவர் மனசு நூல் குறித்து தினமலர் நாளிதழ்

Image
மழலை அரும்புகளின் மனவோட்டம் அறிந்து போதிக்கும் முறையை அனுபவங்கள் வாயிலாக கற்பிக்கும் நுால். சுவையான அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ளது. மற்றவர்கள் பழி சுமத்தி, சேட்டையை கச்சிதமாக அரங்கேற்றும் சிறுவர்களின் குறும்பு, நகைச்சுவை தருகிறது. ஆசிரியர் வீட்டை மழலையர் துப்பறிந்து கண்டுபிடிப்பது வியப்பூட்டுகிறது. கதைகளை உல்டா செய்வது, போட்டியில், பாயசம் குடித்ததாகக் கூறி பயமுறுத்துவது போன்ற சுட்டித்தனம் மகிழ வைக்கிறது.போதையுடன் வந்த தந்தையை கண்டித்தபோது கூறிய காரணம் நெகிழ வைக்கிறது. கல்வி அதிகாரிகள் மனோபாவமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கற்றலில் இனிமையையும், எளிமையையும் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. மழலையர் பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நுால். –  புலவர் சு.மதியழகன் தினமலர் நாளிதழ் நூலறிமுகம்