நூலறிமுகம்: புதிய பரிதியின் தமிழ் என் காதலி....
எங்கெங்கும் காணினும் சக்தியடா என்பது போல எட்டுத்திக்கிலும் கவிஞர்கள் கூட்டம்.. ஆளாளுக்கு ஒரு வட்டம்! அதற்குள் இருந்துகொண்டு எதையாவது எழுதுவதும் அதை கவிதை என வெளியிடுவதும் இன்று சர்வசாதாரணமான கலாச்சாரமாகிவிட்டது... என்னைக் கவிஞன் என்று இந்த சமூகம் கூற வேண்டும்.. அதற்கான முயற்சிகளாக எதையேனும் எழுதுவேன், படைப்பேன் என பகட்டுத்தனமாக கூறுபவர்களுக்கு மத்தியில்... நன்றாக நடக்க, ஓடப்பழகிய நான்காம், ஐந்தாம் அகவைப் பருவத்திலேயே புரட்சி பற்றிக் கவி பாடினால் என்னவென்று சொல்வது? சமணத்தை ஒழிக்கச் சபதமேற்று ஆயிரம் பாடல்களை எழுதிய திருஞான சம்பந்தரைக் கருவிலே திருவுடையார் எனப் போற்றுகின்றனர்.. அப்படியானால் தாலாட்டுக் கேட்கும் பருவத்திலே இப்பாழடைந்த சமூகத்தை புரட்சியால் நீராட்ட நினைத்துக் கவி பாடிய இக்குட்டிப் புலவனை என்னவென்று சொல்வது? ஊனமுற்றவனாய்ப் பிறக்க ஆசை அந்த ஊனமுற்ற உறுப்பு வயிறாக இருந்தால்! வைகை வற்றியதற்கு வருத்தப்படாமல்-அதில் மீன் பிடிக்க நினைக்கிறாய்... பிறந்த நாள் கேக் வெட்டும்போது நினைத்துக் கொண்டேன்.. அம்மாவின் பிரசவ வேதனையை! இது போன்ற இன்...