Posts

Showing posts from December, 2024

டுஜக் டுஜக் நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்..

Image
நாம் எல்லோரும் குழந்தைகளோடு உரையாடி இருப்போம். நாம் வழக்கமாகப் பார்க்கும் பொருள்களையும் உயிரினங்களையும் அவர்கள் வேறொன்றாகப் பார்ப்பார்கள். கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளின் உலகம் என்ன என்பதை அவர்களிடம் இருந்தே தெரிந்து கொள்ளும் போது நாமும் குழந்தையாக இருக்கும் போது இப்படித்தான் இருந்திருப்போமா எனச் சிந்திக்க வைப்பார்கள். இந்நூலும் அப்படித்தான், இரண்டு குழந்தைகளும் ஒரு அப்பாவும் உரையாடுவதை அப்படியே மழலை மொழியில் தந்து படிக்கும் நம்மை மழலையாக்கிச் சிந்திக்க வைக்கிறது.. - கனவு ஆசிரியர்  டிசம்பர் 2024 இதழ் (பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளிவரும் மாத இதழ்)  

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

Image
தனக்குத் தானே முன்மாதிரியாக அமைந்த உலகின் ஒரே அணை என்று முல்லைப் பெரியாறு அணை குறிப்பிடப்படுகிறது. நீரின் ஓட்டத்தின் போக்கில் அதை மறித்துக் கட்டப்படுவது தான் பெரும்பாலான உலக வழக்கம். ஆனால் நீரின் போக்கையே மாற்றி, அதற்கு எதிர்ப்புறமாக அணையைக் கட்டி, அதிலும் பல்வேறு நுட்பங்களைக் கையாண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் புளூபிரிண்ட்-ஐ அப்படியே தனது நாவல் மூலம் படம் வரைந்து விளக்கியுள்ளார் ஐயா பொ.கந்தசாமி ஐயா அவர்கள்.  விருதுநகரில் பிறந்தவர் என்றாலும் அவருக்கு தாய்வழிப் பூர்வீகம் தேனி தான். வைகை அணைக்குப் பக்கத்தில் முதலக்கம்பட்டி. சில பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளும் செய்திகளும் அவரை மேலும் மேலும் பென்னிக்குக்கை குறித்த தகவல்களைத் தேடி ஓட வைத்துள்ளது. இதய அறுவைச் சிகிச்சை செய்திருந்த போதிலும் தனது வாழ்நாள் , பிறவிப் பயனாக இந்நூலை அவர் எழுதி முடித்து இருக்கிறார். நான் முதன் முதலாக ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த குள்ளப்ப கவுண்டன் பட்டி தான் கதையின் முக்கியமான உள்ளூர் நாயகனாக வருகிற பேயத்தேவரின் தந்தை மொக்கையத் தேவர் வந்து குடியேறிய ஊர். கூடலூருக்குப் பக்கத்து ஊர் தான். பேயத்தேவர் கூடலூ...

வாசிப்பு அனுபவம் : மாணவர் மனசு : தோகை பழனிவேல்

Image
போர்பந்தரில் பிறந்தாலும் 'மகாத்மா காந்தி' போரை விரும்பாதவர். அதைப் போலத்தான் தேனிக்கு அருகில் பிறந்தாலும் தேனீயைப் போலில்லாமல் தேன் போல இனிக்கிறது தேனி சுந்தரின் எழுத்து.. அவர் பல நாள் ஆராய்ந்து, அவதானித்து, ஆராய்ச்சி செய்து எழுதுவதாக சொல்லவில்லை. கண்களால் கண்டதை, தனக்குள் உணர்ந்த அன்றாடங்களை கட்டுரையாகவேர, கதையாகவோ உருமாற்றும் வித்தையை தெரிந்து வைத்திருக்கிறார். பார்த்தவற்றை நாம் சாதாரணமாக கடந்து விடுகிறோம். அவர் படைப்பாக்குகிறார் அவ்வளவே.. "மற்றவர்களெல்லாம் பூமியில் வசிக்கிறார்கள்.. படைப்பாளன் மட்டுமே வாழ்கிறான் " என்று நான் எப்பொழுதோ படித்த ஞாபகம். தேனி சுந்தரின் படைப்புகளை படிக்கிறபோது அந்த சொற்றொடர் மீண்டும் நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன்பு எங்களூர் கடை வீதியில் இரண்டு பள்ளி மாணவர்கள் பேசிக் கொண்டு சென்றார்கள். அதில் ஒருவன் "டேய்..! விக்னேசு...நீ ஏன்டா இன்னிக்கி பள்ளிக்கூடம் வல்ல.. ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இன்னிக்கி எந்த சாரும் பாடம் நடத்துல .. தெரியுமா"? என்றான். "அப்படியாடா முருகா டெய்லியும் சாருங்க பாடம் நடத்தாமயிருந்தா எவ்வளவு ஜாலிய...

மருத்துவர் பூர்ணிமா கணநாதன் எழுதிய மகப்பேறு : தெரிந்ததும் தெரியாததும் நூல் குறித்து..

Image
தேனி மாவட்டம்,  மருத்துவர் பூர்ணிமா கணநாதன் எழுதிய மகப்பேறு : தெரிந்ததும் தெரியாததும் நூல் குறித்து.. என் மனைவி எங்கள் முதல் குழந்தை டார்வினை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த போது அவருக்கு துணையாக, உதவியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. விழிப்போடு இருக்க வேண்டும் என்பதுவும். வீட்டிலேயே சில நூல்கள் இருந்தன. வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. குறிப்பாக அந்நூலை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது. ஆனாலும் வாசிக்க முடியவில்லை. சில அத்தியாயங்கள் படித்ததோடு நின்று போனது.. காரணம் நூலின் விரிவான உள்ளடக்கம்..! ஆனால் தடம் அறக்கட்டளையின் செயலாளரும் இயன்முறை மருத்துவருமான பூர்ணிமா அவர்கள் எழுதிய "மகப்பேறு - தெரிந்ததும் தெரியாததும் " என்கிற இந்நூல் குழந்தைகளுக்கான ஆத்திசூடி போல அவ்வளவு எளிமையாக, சுருக்கமாக இருக்கிறது. எவ்வளவு நல்ல கருத்தாக இருந்தாலும் மக்களுக்கு அதை நாம் சுருக்கமாக சொல்ல வேண்டி இருக்கின்றது. இல்லையெனில் அதை அவர்கள் கவனிப்பதில்லை. உள்வாங்குவது இல்லை. எனவே எளிதில் விழுங்கும் மாத்திரைகள் போல, அதிலும் விரும்புவோர் இன்னும் நிதானமாக சுவைத்துச் சுவைத்து சாப்பிடும் இனிப...

குழந்தை இலக்கியம் : ஐரோப்பிய தமிழர்கள் நிகழ்வு

குழந்தை இலக்கியம் குறித்து..  

தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு : பிளாட்பார்ம் தமிழ்

Image
பிரபல எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய “மாணவர் மனசு” (Manavar Manasu Book) என்ற நூலினை வாசித்தேன். இப்புத்தகத்தில் மாணவர்களின் மனசை மிக எளிதாக ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். தொடக்கக் கல்வி ஆசிரியராகப் ஒருவர் பணியாற்றுவதற்கு நிதானமும் பொறுமையும் தேவை என்பதை இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். மழலைப் பள்ளிகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடைப்பட்ட பருவத்தினர் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களை கையாள ஒரு ஆசிரியருக்கு தனித்த அணுகுமுறை தேவை என்பதை “மாணவர் மனசு” புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு உணர்வுகளை கையாளத் தெரிந்து கொண்டால் அப்புறம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் கைவசம்தான். அப்படிப்பட்ட முயற்சிக்காக தேனி சுந்தர் அவர்கள் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார் என்பதை இந்நூலிலுள்ள கட்டுரை வழியாக அறிய முடிகிறது. மாணவர்களை பொய் சொல்ல அனுமதிக்கும் ஆசிரியர் : ஆசிரியர்கள் சொல்லும் பொய்யுக்கும், மாணவர்கள் சொல்லும் பொய்யுக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது...

நாவல் இலக்கிய உலகில் ஓர் உலா

Image
ஒரு படைப்பை எழுத்தாளர் தொடங்கி வைக்கிறார். வாசகர் தான் அதை முடித்து வைக்கிறார் என்றொரு சொற்றொடர் உண்டு.ஆனால் இலக்கியம் வாசகரிடம் இருந்தும் தொடங்க முடியும் என்று பறைசாற்றி வருகிறார் பேரா.விஜயகுமார் அவர்கள். நமது மண்வாசம் இதழில் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ்ச் சிறுகதை சிற்பிகள், சிறுகதை இலக்கியத்தின் சிகரங்கள் ஆகிய இருநூல்கள் மூலம் தமிழ் மற்றும் உலகளாவிய அளவிலான சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்த பேராசிரியர், இம்முறை நாவல் இலக்கிய உலகில் ஓர் உலா வந்திருக்கிறார். அவர் மட்டும் செல்லாமல் உடன் நம்மையும் அழைத்துச் செல்கிறார். ராய் மாக்சம் எழுதிய உப்புவேலி, ஹெப்சிபாவின் புத்தம் வீடு, சுசீலாவின் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், முத்துநாகு எழுதிய சுளுந்தீ, தேபேஷ் ராயின் அகதிகள், பூமணியின் வெக்கை, சர்மிளா செய்யத் எழுதிய உம்மத், ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள், தொ.மு.சி.ரகுநாதனின் பஞ்சும் பசியும் , நக்கீரனின் காடோடி, இமையம் எழுதிய செல்லாத பணம், வைக்கம் முகம்மது பசீரின் மதில்கள், பாலமுருகனின் சோளகர் தொட்டி, டி.செல்வராஜின் மலரும் சருகும், சல்மாவின் அடைக்கும் தாழ் உள்ளிட...