Posts

Showing posts from 2026

மாணவர் மனசு நூல் குறித்து ஆசிரியர் யாழரசி பதிவு

Image
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாணவர் மனசு பெட்டி குறித்த கட்டுரையாக இருக்குமென எண்ணி வாசிக்க ஆரம்பித்தப்பிறகே புரிந்தது அது மாணவர்-ஆசிரியர் மனசென.. குட்டி குட்டியான உரையாடல், நிகழ்வுகள் அனைத்தும் தொகுப்பாக 16 கதைகள் அல்ல அல்ல 16 மனசுகள். ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு ஊருக்கு போறீனா சொல்லிட்டு போகமாட்டீயா?? ஏன் சார் நீங்களும் கூட வருவீங்களா? முதல் கதையிலே.. கூடவே சுத்திட்டு இருந்தியேடா செவ்வாழ மொமண்ட்.. You Brutus.. அந்த பால்வாடி டிக்கட்ஸ் தான் வாழ்றாய்ங்யா.. தேனீ சுந்தர் அவர்களின் வகுப்பறையில் ஒரு ஓரத்திலிருந்து பார்த்தது போல் இருந்தது.. தேனி சுந்தர் அவர்களின் வரிகள் அருகிலிருந்து கதை கேட்பது போல் அனுபவம். உங்கள் அனுபவங்களில் எனக்கும் சில உண்டு. வகுப்பு தோழன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என நிற்கும் போது, இனி சரியாக இருப்பான் டீச்சர் என வக்காலத்து செய்து, அவனை சரியாக வீட்டுப்பாடம் எழுதி வருவதை உறுதி செய்கின்றனர். ஒன்றாம் வகுப்பு குட்டி குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் டப்பா ஓபன் பண்ணி தரும்போது நீங்க ஒன்னு எடுத்துகோங்க என்ற அன்புக்கு நானெல்லாம் என்றுமே அடிமைதான் அதுகள அதட்டி திட்ட மனசு வரமாட்டுது. அதன...

குழந்தைமை போற்றுதும் நூல் குறித்து ஆசிரியர் சுமதி, நெல்லை

Image
ஆசிரியர் தன் வீட்டு குழந்தைகளான டார்வின் மற்றும் புகழ்மதியின் இயல்பான உரையாடல்களை சுவாரசியமான 20 சிறு கட்டுரைகளாக்கி வெளியிட்டுள்ளார். கருவுற்ற பெண்கள் சுந்தரகாண்டம் படித்தால் நல்ல குழந்தை பிறக்கும் என்பது போல தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ,நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன. குழந்தைமை போற்றுதும் போன்ற புத்தகங்களை வாசிக்கலாம்... இது மனதை மகிழ்வித்து தயார்படுத்தும்... குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொண்ட நாட்களில் இவருடைய புத்தகங்களை பார்த்தாலே குற்றவுணர்வு ஏற்படுத்தும்.. மழலைச் சொல் கேட்டோம். ஐ.சுமதி, ஆசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி, செட்டிகுளம்.

நட்சத்திரக் குழந்தை நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்

Image
நன்றி : கனவு ஆசிரியர் மாத இதழ் பிப்ரவரி, 2026

சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் : சீனி சந்திரசேகரன்

Image
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என கையொப்பமிட்டு நூலாசிரியரால் அனுப்பப்பட்ட புத்தகம்.  சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் இது நூலில் இருந்து.. பாடம் நடத்துச் செல்லும் பொழுது கோபத்தை வாசலில் நிற்க வைத்து விட்டு நீங்கள் மட்டும் வகுப்பறைக்குள்ளே செல்லுங்கள். நிறைய சிரிங்க! உடம்புக்கு நல்லது! உங்க மனசுக்கும் நல்லது. வலியவர்கள் ஆள்வதும் எளியவர்கள் அவர்களை அண்டிய அடங்கி இருப்பதும் தான் எதார்த்தம் என படமும் பாடமும் உணர்த்துகின்றனவா? ஒரு பக்கம் சமத்துவ சமூகம் என்ற தலைப்பில் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட பாடங்களை வைப்பதில் நியாயமா?  படம் எழுப்பும் கேள்வி. அடிக்கடி கேட்பதால் மட்டுமே அறதப்பழசான வார்த்தைகளாக நமக்கெல்லாம் இருக்கின்ற எண்ண்ம் எந்த அளவிற்கு தவறான ஒன்று என்பதை விளக்கும் மாணவர்கள் சொல்லும் புரியாத வார்த்தைகள்.. இன்றைய வகுப்பறை நெருக்கடிகளுக்கான மருந்து அரசாணை விதிமுறை தொகுப்பு நூல்களில் நிச்சயம் இல்லை. உங்களது சமஸ்தானத்தை ஆளுகின்ற அதிகாரிகளிடமும் இல்லை. கல்வியாளர்களிடம் இருக்கிறது. கல்வி சார்ந்த நூல்களில் இர...

குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல் : சீனி சந்திரசேகரன்

Image
குழந்தைகள் உலகை பார்க்க நமக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் மனம் கவிமனம். எப்போதும் படைப்பூக்கம் துள்ளும் குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல். நூலிலிருந்து.. அறிந்தும் அறியாத பருவத்திலேயே இந்த சமூகம் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் குழந்தைகள் தலையில் திணிக்கிறது அதில் கடவுள் மதம் சாதி சடங்கு சம்பிரதாயம் மூட பழக்கங்கள் எல்லாம் அடங்கும். பேய் சாமி எல்லாமே சும்மாச்சும் தான் பாப்பா.. வீட்டுப்பாடம் தரும் அல்லலை புரிய வைக்கும் நிகழ்வு... அம்மாச்சி வீட்டுக்கு போய் எழுத போறேன்னு சொல்லி ஸ்லேடும் நோட்டும் எடுத்து ஒரு பையில  போட்டு கொண்டு போயிட்டாங்க இரண்டு மணி வாக்குல வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வந்துச்சு கட்டம் போட்டு  எழுதி இருந்தது எழுதியது அம்மா.. எழுதச் சொன்னது டீச்சரா நடிச்ச குழந்தை.. இத இத இத இதெல்லாம் எழுதிட்டு வந்துருங்க ஈஸியா சொல்றாங்க டீச்சர் எழுதற எங்களுக்கு தானே கையெல்லாம் வலிக்குது குழந்தை டார்வின் கவலை... குழந்தைகளை எப்படி அழைத்தாலும் அழகுதான் எனச் சொல்லும் எனக்கு நான்கு பெயர். வட்டக் கண்ணாடி போட்டவர் எல்லாம் குழந்தைகளுக்கு காந்தி தான். அதிகாரிகள் விசிட் வருவதைப் பற...