பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவ்வப் போது சில நூல்களைக் குறித்து பேசுவார்.. அது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறும். ஊடக வெளிச்சம் புத்தகங்கள் மேல் பாய்வது நல்ல, ஆரோக்கியமான விசயம்.. அதுவும் கமல்ஹாசன் போன்ற உலகம் அறிந்த பிரபலங்கள் அந்த நூல் குறித்த பேசும் போது, வார்த்தைகள் மேலும் கூடுதல் கவனம் பெறுகிறது.. கடந்த ஆண்டு, பிக் பாஸ் நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து பேசி, மக்களிடையே அப்படியொரு கவனம் பெற்ற நூல் தான் “நிறங்களின் உலகம்”.. தேனியின் முன்னோடி படைப்பாளிகளுள் ஒருவரான தோழர் தேனி சீருடையான் எழுதிய நாவல்.. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, 1996 ல் எழுதி முடிக்கப்பட்ட இந்த நாவல் 2008 ல் தான் வெளிவந்திருக்கிறது. அதை 2014 வாக்கில் தான் நான் வாங்கினேன். 2022 அக்டோபரில் தான் வாசிக்க எடுத்திருக்கிறேன்.. ஒரு படைப்பு உருவாகி , அச்சாகி, வாசகர் கைகளில் சென்றடையவும், அதை வாசிக்கவும் எவ்வளவு பெரிய கால இடைவெளி..? குற்ற உணர்ச்சி தான் பொங்கி வருகிறது..! பிறக்கும் போது இருந்த கண் பார்வையை , இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இழந்து விடுகிற...