Posts

Showing posts from February, 2022

டுஜக் டுஜக் - ஒரு அப்பாவின் டைரி : வாசிப்பு அனுபவம் : ரமேஷ், நாராயணத் தேவன் பட்டி

Image
டுஜக்..டுஜக்... படித்தேன்.. நண்பர் சுந்தரை பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தை கீழே வைக்காமல் படித்தேன். சூப்பர்...! என் மகனின் மழலைப்பருவம் என் கண்முன் வந்து நிழலாடியது. அவனை பள்ளியில் சேர்க்க போகும் போது பள்ளியில் கேட்ட கேள்வி: யானை என்ன கலர்? அவன் சொன்னான்.. யானை, யானை கலர் தான்....! டுஜக்... டுஜக்... ஓர் அற்புத படைப்பு..! குழந்தைகளின் மொழியை, சிந்தனையை, ஆர்வத்தை, தெளிவாக பதிவு செய்து தொகுத்திருக்கிறார். தரமான உரையாடல்கள்.. தேதி வாரியான பதிவுகள் மிகவும் சிறப்பு.! கொரனா வந்து பிஸ்கோத்து பாக்கெட்ட தூக்கிட்டு போயிரும்! என கூறும் மழலையின் புரிதல் சுகானுபவம். டார்வின், விவேக் இறந்துவிட்டார் என பதிவு செய்யும் போது குழந்தைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிய புரிதல் இல்லாமல் போனது சுவாரசியமானது. குழந்தைகளுக்கு எது பிடிக்குமோ அதனையே விரும்பி கற்றுக் கொள்கிறார்கள்.. நினைவிலும் வைத்துக் கொள்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. உதாரணமாக என்னிடம் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் அல்ஜீப்ராவில் மிக...

டுஜக் டுஜக் : குழந்தையின் வெற்றிக் குரல்.. செல்வம், ஆசிரியர்

Image
பொருள் இல்லாத தலைப்பாக இருக்கிறதே! என்ற சிந்தனையோடு புத்தகத்தை புரட்டிபார்க்க தொடங்கினேன். புத்தகத்தின் உள்ளே பொருள் செறிந்து காணப்பட்டதை உணரமுடிகிறது. குழந்தைகள் உள்ள எல்லா வீட்டிலும் நிகழும் இந்த நிகழ்வை எதார்த்தமாக கடந்து செல்வோம். ஆனால், ஆசிரியர் சுந்தர் அதற்கு அணிகலன் பூட்டி அழகுபடுத்தி நம் கையில் தந்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள். குழந்தைகளின் பேச்சு மொழியை அப்படியே தந்துள்ள பாங்கு அழகு ரசிக்கும் படியாக இருக்கிறது.. குழந்தை மொழிக்கு இலக்கண குற்றம் கண்டால் அதுவும் ஒர் 'இலக்கணப் பிழையே ' என்பதற்கு சான்றாகவே நம் முப்பாட்டன் வள்ளுவன் கூட "குழலினிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்" என்று சொல்லி இருக்கிறார் போல... கற்றல் என்பது குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து தான் தொடங்கும் என்பதை ஆசிரியர் சுந்தர் உணர்ந்தவர் என்பதால் என்னவோ தன் குழந்தைகளை ஆக்கப்படுத்தியுள்ள நிகழ்வு அழகு மிளிர்கிறது. அந்த வகையில் டார்வின் கீர்த்தி புகழ்மதிக்கு பாராட்டுக்கள். "அப்பத்தா நீய்..எல்லாம் செத்துப்போய்ட்டா நானு ஓம் பக்கத்துலயே ஒக்காந்து அழுவேன்.." - பேத்தியின் ஒப்ப...

குழந்தைமையைக் கொண்டாடும் புத்தகம் டுஜக் டுஜக் : ஜி.பாண்டி

Image
நண்பர் சுந்தர் ஒரு அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில செயலாளர். அவர் எழுதிய டுஜக் டுஜக் என்ற புத்தகம் வாசித்தேன்.. கல்வியாளர் பேரா. மாடசாமி மற்றும் விஞ்ஞானி ராமானுஜம் ஆகியோரின் அணிந்துரையோடு வெளிவந்துள்ளது.. மிக அற்புதமான நடையுடன் ஆங்காங்கே ஶ்ரீரசாவின் கோட்டோவியங்களோடு குழந்தைமையை பிரதிபலிக்கும் சொல்லாடல்களோடு தந்திருப்பது மிகச்சிறப்பு... எனக்கும் குறுஞ்செய்தியாக நிகழ்வுகளை அவ்வப்போது சுந்தர் அனுப்புவார். ஆம்லெட் போட முட்டைகள் வாங்கி உடைத்து, அதைத் துடைத்து, முழிப்பது பற்றி அவர் அனுப்பிய செய்தி பளிச்சென்று என் நினைவுக்கு வருகிறது... தமிழ் இலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழ் என்று ஒருவகை உண்டு. குறிப்பாக குழந்தை கண்ணனையும் முருகனையும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் சேட்டைகளோடு உள்ள குழந்தமைகள் பற்றி கவிதையாக எழுதியுள்ளனர். அதுபோல தேனி சுந்தர் தனது துணைவியாரின் ஒப்புதலோடு எழுதிய "ஒரு அப்பாவின் டைரி" பத்து மாத இரண்டு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் நம் கைகளில் நூலாக பூத்திருக்கிறது. மூத்த குழந்தை டார்வின்.. இப்பொழுதுதான் பள்ளி செல்ல ...

மழலை..! மழலை..! மழலை தவிர வேறில்லை! : டுஜக் டுஜக் : சத்யா ராமராஜ்

Image
குழந்தைகளை நேசிக்கும் யாராலும் இந்த நூலை நேசிக்காமல் இருக்கவே முடியாது. அவ்வளவும் மழலை! மழலை! மழலை மட்டுமே! மழலை தவிர வேறு இல்லை! எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று சொல்லவே முடியாது...! என் குழந்தைகளைக் கொஞ்சும் போது, "தின்னத் திகட்டாத கனி குழந்தை" என்று என் அம்மாச்சி சொல்லுவார்கள். அது போல இந்த மழலை மொழியை மீண்டும் மீண்டும் வாசித்தாலும் அலுப்புத் தட்டவில்லை . என்ன ஒரு அழகு! என்ன ஒரு கற்பனை! என்ன ஒரு பெரிய மனுசத் தனம்! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம் இல்லம் என்பார்கள். இந்த நூலில் அதன் தரிசனம் ஒவ்வொரு பக்கத்திலும் தவறாமல் இடம் பெறுகிறது . உண்மையிலேயே சுந்தர் சார் இயக்க வேகம் கொண்ட, சமூக அக்கறை கொண்ட, சிந்தனைத் தெளிவு கொண்ட, செயல்திறன்மிக்க ஒரு நபராக மட்டுமே இதுநாள் வரை எனக்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால் அன்பான தந்தையாக என்னை ஒவ்வொரு பக்கத்திலும், ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மூழ்கித் திளைக்கச் செய்துவிட்டார்.. என்னென்ன நான் சொன்ன போதும் வார்த்தைகளால் மட்டுமே இந்த நூலின் அழகை எடுத்துரைத்து, உணரச் செய்து, நீங்களும் வாசியுங்கள் என்று பரிந்துரைக்க நினைத்தால் அது அறியாமை ...

அடுத்தடுத்து பக்கங்களை புரட்ட வைக்கிறது : டுஜக் டுஜக் - ராணி குணசீலி

Image
தன் குழந்தைகளுடன் உரையாடிய பொழுதுகளை நல்ல ரசனையான படைப்பாக்கித் தந்திருக்கிறார் நூலாசிரியர் தேனி சுந்தர். குழந்தைகளைப் பேச வைக்கிற... பேசுவதை கவனிக்கிற ஒரு அப்பாவின் டைரி இது. குழந்தைகளின் பேச்சு மொழியிலேயே புத்தகத்தின் தலைப்பு.! புத்தகம் முழுதும் டார்வின், புகழ்மதி இருவரின் கற்பனைகளும் பேச்சுகளும் தான். பேச்சுகளைத் தடை செய்யாத வீடு. வாசிக்கையில் நாம இப்படி எதையெல்லாம் நம் குழந்தைகளிடம் கவனித்தோம், பேச வைத்தோம் என்று சிந்திக்க தோன்றுகிறது.. கூடவே கவனிக்கத் தவறி விட்டோமோ என்ற ஒரு ஏக்கமும் வருது...! ஒவ்வொரு பக்கமும் வாசித்து முடிக்க.. முடிக்க.. அடுத்து என்ன சொல்லப் போறாய்ங்களோ... அப்பா மாட்னாரா, இல்ல அம்மா சிக்குனாங்களான்னு தெரியலயே என அடுத்தடுத்து ஜாலியாக பக்கங்களை புரட்ட வைக்கிறது.! மின்னல் வெட்டுவதை "நிம்மல் இல்லப்பா.. அது கெட்டுப்போன லைட்டு.. இப்ப பாரு அமந்து அமந்து எரியும்...!" "அம்மா பூன ஆபீசுக்கு போய் இருக்குப்பா" "சீனி வேட்டு மாரி உப்பு வேட்டு இருக்காப்பா" என கற்பனையில் பின்றாங்க... டார்வின், அண்ணனாக மாறி பாப்பாவிடம் அலப்பறையைக் கொடுப்பது எல்லாம் செம...