நூல் அறிமுகம் : ஊர்வசி புட்டாலியா எழுதிய மௌனத்தின் அலறல் : இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலம்
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை குறித்த அறிக்கை 1947, ஜூன் 3ஆம் தேதி வெளிவந்தது. அடையப்பட்ட தீர்வு உண்மையில் ஒரு தீர்வும் அல்ல.. இந்தத் தொடக்கம் ஒரு தொடக்கமும் அல்ல.. கால அவகாசம் போதுமானதில்லை என்றேன். ஆனால் ஜின்னா, நேரு, படேல் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் ஆகஸ்ட்,15க்குள் எங்களுக்கு ஒரு கோடு வேண்டும் என்றார்கள். நான் ஒரு கோட்டைப் போட்டுக் கொடுத்தேன்.. – சிரில் ராட்கிளிப் 1946 மார்ச் முதலாகவே கலவரங்களும் கொலை, கொள்ளைகளும் அரங்கேறின.. பிரதமர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு 1947, ஆகஸ்டு 17ல் தான் தலைவர்கள் சந்தித்து குடிமக்களைப் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேசிக் கொள்கின்றனர்.. அதற்குள்ளாகவே பல இலட்சம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர்.. ஏராளாமானோர் உயிர் இழந்திருந்தனர்.. பெண்களையே மதத்தின் மாண்பாகக் காட்டி பெண்களையே தியாகப் பலிகொடுத்து, பெண்களையே கடத்தி, கற்பழித்து, கொலைகள் செய்து, பெண்கள் உடலே சரித்திரமாக, இரத்த சரித்திரமாக மாறிய கதைகள்.. எந்த சரித்திர நூல்களும் சொல்லாத, சொல்லிவிட முடியாத, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது மக்கள் சந்தித்த, மக்கள் என்றால் இந்த...