Posts

ஓங்கி ஒலிக்க வேண்டிய குரல்....

Image
அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி ஜோபைடன் பேசியது விவாதமாகி இருக்கிறது. தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் முகக் கவசம் களைந்து முகத்தில் புன்னகையோடு மற்றவர்களை வரவேற்கலாம். இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். முகக்கவசம் தொடர்பாக இவ்வளவு தூரம் அவர் அவசரப்பட வேண்டியதில்லை என்று கருத்துகள் வந்துள்ளன. அவ்வளவு நம்பிக்கையோடு அவர் பேசுவதற்கு காரணம் அந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது என்பது தான். தடுப்பூசி போட்டதால் அங்கு தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளது. தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் அமெரிக்காவை முந்தும் தகுதி உலகில் மோடி தலைமையிலான இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது என்று கிண்டலாக விமர்சிக்கப்படுகிறது.அந்த நையாண்டிக்குப் பின்னுள்ள துன்பமும் துயரமும் கையறு நிலையும் எதிரி நாட்டுக்கும் கூட வந்து வ...

நூல் அறிமுகம் : மோகனா : ஓர் இரும்புப் பெண்மணியின் கதை - தேனி சுந்தர்

Image
அறிவியல் இயக்கத்தை அறிந்தவர்கள் அனைவரும் பேரா.மோகனாவை அறிவார்கள்.. ஆகச் சிறந்த கருத்தாளர்.. எந்த தலைப்பில் பேச வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டே இருப்பார்.. அவ்வளவு சீக்கிரம் உரையை முடிக்கமாட்டார் என்பது தான் அவரைப் பற்றி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நமக்குள்ள பயம்.. வானியல் குறித்துப் பேசும் போது எந்த குறிப்பும் இல்லாமல் ஏராளமான தகவல்களை சொல்லிக் கொண்டே போவதை பல நாட்கள் வியப்புடன் பார்த்திருக்கிறேன்.. அதே போல வாய்க்குள் வராத அறிவியல் பெயர்கள், விஞ்ஞானிகளின் பெயர்கள் அவர்களின் காலம் போன்றவற்றையும் கூட குறிப்பின்றியே பேசுவார்.. அப்படியொரு வியக்கத்தகு நினைவாற்றல் உடையவர்.. அந்த நினைவாற்றல் துணையுடன் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.. அதிலும் பல சம்பவங்களை தேதியுடன் குறிப்பிட்டிருந்தார்.. நான் அவரைத் தொடர்புகொண்டு, எப்படி தேதிகளுடன் எழுதியிருக்கிறீர்கள்..? டைரி எழுதி உள்ளீர்களா..? என்று கேட்டேன்.. இல்லை தோழர், எல்லாம் நினைவிலிருந்து தான் என்றார்.. ஆச்சர்யமாக இருந்தது. பார்க்கும் அனைவரிடமும் எளிதாகக் கலந்து விடுவார்.. பழகிய, பேசிய எல்லோரையும் நினைவில் வைத்திருப்பார்.. திடீரென போனில் அழை...

நூல் அறிமுகம்: எல்லோரையும் எழுத வைக்கும் சிலேட்டுக்குச்சி – தேனி சுந்தர்

Image
சிலேட்டுக்குச்சி.. அந்த வார்த்தையே அழகான வார்த்தை.. ஆயிரம் நினைவுகள் தோன்றும்.. ஒவ்வொருவரும் இன்னொரு முறை வாழ்ந்து பார்த்துவிட முடியாதா என ஏங்கும் குழந்தைப்பருவ நினைவுகளை ஓடும் நதியின் கரையில் மோதும் அலைகள் போல வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளத்தோடு உரசி உரசி எழுப்பி விடும் நூலாக வெளிவந்துள்ளது. அரியலூரில் ஆசிரியராக வாழும் நண்பர் முத்துக்கண்ணனின் முதல் நூல். தேனி மாவட்டம் கூடலூர் அவருக்கு சொந்த ஊர். பணி நிமித்தம் வாக்கப்பட்டு போன ஊர் அரியலூர். சிலேட்டுக்குச்சி, முழுக்க முழுக்க கல்விக்கூட பதிவுகள், பகிர்வுகளின் தொகுப்பு.. ஏற்கனவே பல பதிவுகளை முகநூலில் வாசித்திருக்கிறேன்.. இருந்தாலும் தொகுப்பாக ஒரு சேர வாசிக்கும் போது பலவகைக் காய்கறிகள், பாயாசத்தோடு விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கிறது எனக்கு. அத்தியாயங்கள் பதினேழு.. சிறுகதைகள் போல சம்பவங்களும் அதைச் சொல்லும் விதமும் வாசிக்க வாசிக்க அத்தனை அழகாக இருக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே ஒரு சிக்ஸர்.. அதில் வரும் மனோஜ் மொத்தப் புத்தகத்தையும் வாசித்து பிறகும் கடைசியாக ஒருமுறை உங்களைச் சிரிக்க வைப்பான்.. இரண்டு நாட்கள் கழித்து கூட...

நூல் அறிமுகம் : நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும்

படிப்பறிவில்லாத ஏழை மக்கள் வாழ்வதற்கான திறன்கள் மற்றும் பிழைத்திருப்பதற்கான உத்திகள் குறித்துத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி யோனா பிரீட்மேன்.. அவர் ஒரு கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைப்பதில் ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விடச் சிறந்தது என்கிற நம்பிக்கையுடையவராக இருந்தார். சுற்றுச்சூழல் கல்வி, சுயதிட்டமிடல், சமையலறைத் தோட்டங்கள், உணவுகளைப் பாதுகாப்பது, உடல்நலம், பாதுகாப்பான குடிநீர் எனப் பல தலைப்புகளில் 300க்கும் மேற்பட்ட படப்புத்தகங்களை உருவாக்கியுள்ளார்.. அவற்றில் ஒன்று தான் நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும் என்கிற இந்தப் புத்தகம்.. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு படங்கள்.. படங்களின் அருகிலேயே எளிமையான சிறு சிறு வாக்கியங்கள்.. குழந்தைகள், பெரியவர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் என அனைவரும் அந்நூலை வாசிப்பிற்கும் வழிகாட்டலுக்கும் பயிற்சி அளிக்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.. அவரவர் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.. கழிவுகளையும் களைகளையும் எப்படிச் செல்வமாக மாற்ற முடியும்.. மனிதக் கழிவிலிருந்து உரம...

தாய்மொழிவழிக் கல்வியே தரமான கல்வி : சங்கரய்யா

Image
ஜூலை,15 – தமிழகத்தின் மூத்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான தோழர்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள். சமூக வலைத் தளங்கள் முழுவதும் நேற்றைய தினம் தோழர் சங்கரய்யா அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அவரது கட்சி சார்ந்த, சாராத அனைவருக்கும் அவர் தோழர்.சங்கரய்யா தான். பல தரப்பினரும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்த சம்பவங்களையும் அவருடைய வாழ்க்கைத் துணுக்குகளையும் நிறைய பகிர்ந்து கொண்டிருந்தனர். அவரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தின. நல்வாய்ப்பாக என்.ராமகிருஷ்ணன் எழுதிய என்.சங்கரய்யா : வாழ்க்கையும் இயக்கமும் என்கிற புத்தகம் கிடைக்கப் பெற்றேன். மாணவர் பருவத்தில் இருந்து, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் தொடர்ச்சியான இயக்கங்கள், போராட்டங்கள், சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கை என விறுவிறுப்பான திரைப்படம் போல இருக்கிறது இவரது வாழ்க்கை அனுபவங்கள். அவருடைய இந்த, பொதுவுடைமை இயக்கம் சார்ந்த பிடிப்பு மிக்க வாழ்க்கை அமையப் பெற்றமைக்காக யாருக்காவது நன்றி சொல்ல வேண்டும் என்றால் சுதந்...

ரவிக்குமார் எழுதிய “தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்” – தேனி சுந்தர்

Image
“உங்கள் மனிதத் தன்மையை மதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்.. உங்களுக்கு குடிக்கத் தண்ணீர் தராத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்.. உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்..” என்கிற அம்பேத்கரின் கேள்விகளை நினைவூட்டுகின்ற இந்நூலாசிரியர், மக்களுக்காகத் தான் மதமேயொழிய மதத்திற்காக மக்கள் அல்ல என்பதை அறியாதவர்கள் தங்கள் சுயநலத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தையே தகர்க்க முற்பட்டுள்ளனர். அவர்களது சுயநலமும் வகுப்புவாத அரசியலும் சிறுபான்மை மக்களிடம் மட்டுமின்றி தலித்துகளிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியாளர்கள் இந்த அச்சத்தைப் போக்காவிட்டால் தலித் மக்கள் மதமாற்றம் என்னும் பாதுகாப்பைத் தேடிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் எச்சரிக்கிறார் ரவிக்குமார்.. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் எழுதிய சமீபத்திய நூல். மணற்கேணி வெளியீடாக வந்துள்ளது. அதிகாரத்துவ எதிர்ப்பு நூல் வரிசையில் இது நான்காவது நூல். சிறிய நூல் தான் என்றாலும் ஏராளமான விவாதங்களை எழுப்புவதாக உள்ளது. தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் : ஒரு சமூகத்த...

நூல் அறிமுகம்: அல்லிநகரம் ம.காமுத்துரை அவர்களின் குதிப்பி : கிண்டி விடும் கரண்டி – தேனி சுந்தர்

Image
நாம தினமும் பாக்குற சமையல்காரங்களோட தினசரி வாழ்க்கைச் சம்பவங்களையும் சங்கடங்களையும் உள்ளது உள்ளபடி பேசும் நாவல் குதிப்பி.. குதிப்பிங்கிறது வட்டகையில சோறு கிண்டிவிடுற பெரிய கரண்டி. பக்கத்திலேயே இருந்தும் பாக்காம இருக்கோம்.. கிட்டத்திலேயே இருந்தும் புரிஞ்சுக்காம இருக்கோம்கிற மாதிரி உணர வைக்குற கதை. கலங்க வைக்குற கதை... கதை முழுசும் தேனி தான். தேனிக்காரங்க பேச்சுதான். படிக்கப் படிக்கப் பக்கத்து கடையில் உட்கார்ந்து பேசுறதும் தெருவுல நடக்குறதும் வார்த்தைகள்ல வர்ற மாதிரி இருக்கு. அக்கம்பக்கத்துல் பேசுறது மொத்தமும் காதுல விழுந்துக்கிட்டே தானே இருக்கு. காது நம்மகிட்ட கேட்டுக்கிட்டா கேக்குது? அச்சு அசல் பேச்சு மொழி. நாவல் முழுக்க நம்ம தெருக்காரங்க தான் பேசுறாங்க. படிக்கும் போதே கண்ணுக்குள்ள படமா ஓடுது. நம்ம மக்களுக்கே உரிய அந்த நக்கல், நையாண்டி, திமிரு, தெனாவட்டு, சண்டியர்த்தனம் எல்லாம் அங்கங்க.. அப்படியப்படியே இருக்குது.. சேது, சாரதி, வளர்மதி, கடைக்காரரு, பாக்கியம், அக்காண்டிப் பெரியம்மா, ஆண்டாளு, வாசு, சண்முகம் தோழர், வசந்தி, சரவணன், முஜிபூர், ரமேஷ், துரைப்பாண்டி, கவுண்டரம்மா, சின்...