Posts

இல்லந்தோறும்.. உள்ளந்தோறும்.. நாள்தோறும் அம்பேத்கர்..! – தேனி சுந்தர்

Image
தேசமே கார்பரேட் மயமாகும் இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரும் அவரவர் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க போராடியாக வேண்டியிருக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பெரும் நிறுவன ஊழியர்கள் தங்கள் தீராத பிரச்சனைகளுக்காக வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அத்தகைய வேலை நிறுத்தங்களை தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட தொழிற்தகராறு சட்ட மசோதாவை எதிர்த்துப் போராடி உரிமையை பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே நிலைநிறுத்தியவர் டாக்டர் அம்பேத்கர் .. எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம், அகவிலைப்படி வழங்கிடும் சட்டம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, தொழிலாளர் வைப்பு நிதிச் சட்டம், ஊதியத்துடன் கூடிய விடுப்புச் சட்டம், தொழிலாளர் விபத்து நஷ்ட ஈடு, வேலைவாய்ப்பு அலுவலக உருவாக்கம், சம வேலைக்குச் சம ஊதியம், தொழிலாளர் நலத்துறை என ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காக அவர் வாதாடாத, போராடாத அம்சங்கள் எதுவுமில்லை.. குறிப்பாக பெண்களின் உரிமைக்காக அவரது போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. பெண்களை இழிவாகவும், கேவலமாகவும் பேசுகிற மனுதர்மம் போற்றப்படும் நாட்டில் இந்த ...

நான் அமைதியாக இருக்கப் போவதில்லை..! – தேனி சுந்தர்

Image
“கடந்த சில இரவுகளாக நான் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை. தாங்கமுடியாத அளவுக்கு நான் பயமுறுத்தப்படுகிறேன். சித்திரவதைகளின் மூலம் குற்றுயிராக்கப்படுகிறேன். மருத்துவ வசதி ஏதும் தரப்படவில்லை..”- கென் சரோ விவா. யார் இந்த கென் சரோ விவா. நாம் நைஜீரியாவுக்குப் போக வேண்டும். நைஜர் டெல்டா பகுதிகள் முழுவதும் அங்குள்ள எண்ணெய் வளங்களுக்காக ஷெல் கம்பெனியால் சூறையாடப்பட்டது. அந்த நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களின் துருப்பிடித்து உடைந்த துளைகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவால் எந்நேரமும் – நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக – தீ ஜீவாலைகள் எரிந்து கொண்டிருந்தன. பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீ ஜீவாலைகள் தெரிவதாக விண்வெளி வீர்ர்களே கூறியதாக பதிவுகள் இருக்கின்றன. அங்கு அப்போதிருந்த சர்வாதிகார ராணுவ அரசுக்கும் ஷெல் கம்பெனிக்கும் இடையிலான கள்ளக் கூட்டு காரணமாக இரக்கமின்றி நிலங்கள் சூறையாடப்பட்டன. அப்பகுதியில் வாழ்ந்த ஓகோனி மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அம்மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர். ஓகோனி மக்களின் இனக்குழுத் தலைவர் ஒருவரின் மகன் தான் கென்சரோ விவா. அந்த மக்களின் துயரங்களை தன் எழுத்துகள...

ஏழை மக்களின் சுற்றுச் சூழலியல்

Image
பொதுவாக சுற்றுச் சூழலியல் குறித்த ஆர்வமும் அறிவும் அதற்கான செயல்பாடுகளும் வளர்ந்த நாடுகளில் தான் இருக்கும் .. அவர்கள் ஏற்கனவே வளர்ச்சியின் பெயரால் இயற்கையைப் பாழடித்த காரணத்திற்கு பரிகாரம் செய்வது போல செயல்படுவதும் உண்டு.. வளர்ந்த நாடுகளுக்கு தான் அதற்கான பணமும் செயல்படுவதற்கான ஆற்றலும் தேவையும் உண்டு.. ஏனெனில் அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.. ஏழை நாடுகளின் மீது சூழலியல் கட்டுப்பாடுகளைச் சுமத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு எதிரான கருத்து ஆகும்.. அதே போல படித்த, நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் அது குறித்து சிந்திப்பர், எழுதுவர், பேசுவர் என்கிற பார்வையும் இருக்கிறது.. சுற்றுச் சூழல் சிந்தனை என்றாலே துருவப் பகுதிகளில் பனி உருகுவதும், பனிக் கரடிகள் பரிதாபமாக நிற்பதுவும் ஓசோன் படல ஓட்டையும் தான் நினைவுக்கு வருகிறது.. அவற்றிலும் கூட உலகளாவிய சிந்தனை உள்ளூர் அளவிலான செயல்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன.. உலகளாவிய அளவில் கவனம் பெற்ற சில சூழலியல் போராட்டங்கள் உள்ளன. இவையாவும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குறிப்பாக 1970களில் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்றவை. வளர்ந்த நாடுகளில் நடைபெற்றவை அல்ல....

ஓங்கி ஒலிக்க வேண்டிய குரல்....

Image
அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி ஜோபைடன் பேசியது விவாதமாகி இருக்கிறது. தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் முகக் கவசம் களைந்து முகத்தில் புன்னகையோடு மற்றவர்களை வரவேற்கலாம். இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். முகக்கவசம் தொடர்பாக இவ்வளவு தூரம் அவர் அவசரப்பட வேண்டியதில்லை என்று கருத்துகள் வந்துள்ளன. அவ்வளவு நம்பிக்கையோடு அவர் பேசுவதற்கு காரணம் அந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது என்பது தான். தடுப்பூசி போட்டதால் அங்கு தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளது. தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் அமெரிக்காவை முந்தும் தகுதி உலகில் மோடி தலைமையிலான இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது என்று கிண்டலாக விமர்சிக்கப்படுகிறது.அந்த நையாண்டிக்குப் பின்னுள்ள துன்பமும் துயரமும் கையறு நிலையும் எதிரி நாட்டுக்கும் கூட வந்து வ...

நூல் அறிமுகம் : மோகனா : ஓர் இரும்புப் பெண்மணியின் கதை - தேனி சுந்தர்

Image
அறிவியல் இயக்கத்தை அறிந்தவர்கள் அனைவரும் பேரா.மோகனாவை அறிவார்கள்.. ஆகச் சிறந்த கருத்தாளர்.. எந்த தலைப்பில் பேச வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டே இருப்பார்.. அவ்வளவு சீக்கிரம் உரையை முடிக்கமாட்டார் என்பது தான் அவரைப் பற்றி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நமக்குள்ள பயம்.. வானியல் குறித்துப் பேசும் போது எந்த குறிப்பும் இல்லாமல் ஏராளமான தகவல்களை சொல்லிக் கொண்டே போவதை பல நாட்கள் வியப்புடன் பார்த்திருக்கிறேன்.. அதே போல வாய்க்குள் வராத அறிவியல் பெயர்கள், விஞ்ஞானிகளின் பெயர்கள் அவர்களின் காலம் போன்றவற்றையும் கூட குறிப்பின்றியே பேசுவார்.. அப்படியொரு வியக்கத்தகு நினைவாற்றல் உடையவர்.. அந்த நினைவாற்றல் துணையுடன் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.. அதிலும் பல சம்பவங்களை தேதியுடன் குறிப்பிட்டிருந்தார்.. நான் அவரைத் தொடர்புகொண்டு, எப்படி தேதிகளுடன் எழுதியிருக்கிறீர்கள்..? டைரி எழுதி உள்ளீர்களா..? என்று கேட்டேன்.. இல்லை தோழர், எல்லாம் நினைவிலிருந்து தான் என்றார்.. ஆச்சர்யமாக இருந்தது. பார்க்கும் அனைவரிடமும் எளிதாகக் கலந்து விடுவார்.. பழகிய, பேசிய எல்லோரையும் நினைவில் வைத்திருப்பார்.. திடீரென போனில் அழை...

நூல் அறிமுகம்: எல்லோரையும் எழுத வைக்கும் சிலேட்டுக்குச்சி – தேனி சுந்தர்

Image
சிலேட்டுக்குச்சி.. அந்த வார்த்தையே அழகான வார்த்தை.. ஆயிரம் நினைவுகள் தோன்றும்.. ஒவ்வொருவரும் இன்னொரு முறை வாழ்ந்து பார்த்துவிட முடியாதா என ஏங்கும் குழந்தைப்பருவ நினைவுகளை ஓடும் நதியின் கரையில் மோதும் அலைகள் போல வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளத்தோடு உரசி உரசி எழுப்பி விடும் நூலாக வெளிவந்துள்ளது. அரியலூரில் ஆசிரியராக வாழும் நண்பர் முத்துக்கண்ணனின் முதல் நூல். தேனி மாவட்டம் கூடலூர் அவருக்கு சொந்த ஊர். பணி நிமித்தம் வாக்கப்பட்டு போன ஊர் அரியலூர். சிலேட்டுக்குச்சி, முழுக்க முழுக்க கல்விக்கூட பதிவுகள், பகிர்வுகளின் தொகுப்பு.. ஏற்கனவே பல பதிவுகளை முகநூலில் வாசித்திருக்கிறேன்.. இருந்தாலும் தொகுப்பாக ஒரு சேர வாசிக்கும் போது பலவகைக் காய்கறிகள், பாயாசத்தோடு விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கிறது எனக்கு. அத்தியாயங்கள் பதினேழு.. சிறுகதைகள் போல சம்பவங்களும் அதைச் சொல்லும் விதமும் வாசிக்க வாசிக்க அத்தனை அழகாக இருக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே ஒரு சிக்ஸர்.. அதில் வரும் மனோஜ் மொத்தப் புத்தகத்தையும் வாசித்து பிறகும் கடைசியாக ஒருமுறை உங்களைச் சிரிக்க வைப்பான்.. இரண்டு நாட்கள் கழித்து கூட...

நூல் அறிமுகம் : நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும்

படிப்பறிவில்லாத ஏழை மக்கள் வாழ்வதற்கான திறன்கள் மற்றும் பிழைத்திருப்பதற்கான உத்திகள் குறித்துத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி யோனா பிரீட்மேன்.. அவர் ஒரு கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைப்பதில் ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விடச் சிறந்தது என்கிற நம்பிக்கையுடையவராக இருந்தார். சுற்றுச்சூழல் கல்வி, சுயதிட்டமிடல், சமையலறைத் தோட்டங்கள், உணவுகளைப் பாதுகாப்பது, உடல்நலம், பாதுகாப்பான குடிநீர் எனப் பல தலைப்புகளில் 300க்கும் மேற்பட்ட படப்புத்தகங்களை உருவாக்கியுள்ளார்.. அவற்றில் ஒன்று தான் நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும் என்கிற இந்தப் புத்தகம்.. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு படங்கள்.. படங்களின் அருகிலேயே எளிமையான சிறு சிறு வாக்கியங்கள்.. குழந்தைகள், பெரியவர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் என அனைவரும் அந்நூலை வாசிப்பிற்கும் வழிகாட்டலுக்கும் பயிற்சி அளிக்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.. அவரவர் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.. கழிவுகளையும் களைகளையும் எப்படிச் செல்வமாக மாற்ற முடியும்.. மனிதக் கழிவிலிருந்து உரம...