மைக் டெஸ்டிங் 1.... 2... 3...
அனைவருக்கும் வணக்கம்.. வீதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்..
கம்பம் பள்ளத்தாக்கு... மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மத்தியில், அதன் மடியில் இருக்கின்ற பகுதி.. இருபத்து நான்கு மணி நேரமும் சுருளி அருவியின் சுகமான, குளிர்ச்சியான தென்றலை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற மக்கள்...
கடந்த சில நாட்களாக, மாதங்களாக என்றே கூறலாம் என நினைக்கிறேன்.. நாட்டின் தென் கடைசியில் அமைந்திருக்கும் இப்பகுதியும் கூட கதகதப்பான வெப்பத்தால் தகித்துக் கொண்டுள்ளது.. மக்களும் தவித்துக் கொண்டுள்ளனர்.. காரணம் 123 ஒப்பந்தம்..!
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரு விசயத்தை, மக்களின் காதுகளை எட்டாமல், மந்திரிகளின் கதவுகளைத் தட்டாமல் மத்திய அரசு புது தில்லிக்குள்ளேயே கண்ணும் காதும் வைத்தாற்போல முடிக்க நினைத்தது எவ்வளவு பெரிய கொடுமை? என்ன ஒரு வில்லத்தனம்?
தண்ணீருக்குள் காற்று விட்டால் மேலே வந்துதானே ஆக வேண்டும்.. வந்துவிட்டதே..! மத்திய அரசின் செயல்பாடு வீசுகின்றதே.. நாட்டின் மூலை முடுக்கெல்லாம், சொல்லப்போனால் சுருளிப்பட்டி பிள்ளையார் கோயில் முன் கிடக்கும் கல்கூட அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாத மேடையாக விளங்கி வருகின்றது, இல்லையா?
இந்த விசயம் தானாக வெளிவரவில்லை.. சில முற்போக்கு, தொலைநோக்குச் சிந்தனையுள்ள தலைவர்கள் எழுப்பிய கேள்விகளாலும் வைத்த கோரிக்கைகளாலும் விடுத்த எச்சரிக்கைகளாலும் வெப்பமடைந்த காற்றே வெளிகளைக் கடந்து வெளிச்சத்தைப் பெருக்கி உண்மை நிலையை உலகிற்கு உணர்த்தியுள்ளது..
நண்பர்களே....... இனியும் மௌனம் காத்தால் மானுடம் நம்மை மன்னிக்காது.. இப்போது பேசத் தவறினால் இனி எப்போதும் பேச முடியாது.. இந்த ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? என்பதல்ல பிரச்சனை.. நமது நாட்டின் இறையாண்மை நிலைக்குமா நிலைக்காதா என்பது தான் பிரச்சனை....
விசயத்திற்கு வருவோம்.. இது என்ன ஒன்.. டூ.. த்ரி ஒப்பந்தம்? இது யார் வைத்த பெயர்? சத்தியமாக அது கூட நமக்குச் சொந்தமில்லை.. 1954 ஆம் ஆண்டு அமெரிக்கா ஒரு சட்டம் நிறைவேற்றியுள்ளது.. அச்சட்டத்தின் முதல் மூன்று பிரிவுகள் (1.. 2.. 3..) அமெரிக்கா அணுசக்தி தொடர்பாக பிறநாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும்போது கவனிக்க வேண்டிய சில சரத்துகளைத் தெளிவாக தெரிவித்துள்ளது.. அதனடிப்படையில் இந்த ஒப்பந்தம் “ஒன்.. டூ.. த்ரி..” ஒப்பந்தம் எனப்படுகிறது..
சரி இந்த ஒப்பந்தம் எப்போது போடப்பட்டது தெரியுமா? ஜூன் 25, 2005ல் அமெரிக்கா சென்ற நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ............. வீட்டுக்குப் போகிற மாதிரி சத்தமில்லாமல் வேலையைத் துவக்கிவிட்டு வந்துள்ளார்.. அதன் பிறகு மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்கும் அங்குபோய் புதிதாக இரண்டு வெளிநாட்டு ஆப்புகளை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்..
நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கப்படவில்லையா? விவாதிக்கப்படவே இல்லை.. அப்போ, அமெரிக்காவிலும் விவாதம் நடந்திருக்காது தானே என நாம் நினைத்தால் அது நம்முடைய முட்டாள்தனம்!
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அவர்களுடைய செனட் சபை, கழுதை சபை, குதிரை சபை அத்தனையிலும் விவாதம் நடத்தி எத்தனை கொக்கி போட்டால் வசமாகச் சிக்கவைக்கலாம் என யோசிச்சு, முடிவு செய்த பிறகு தான் இந்த ஒப்பந்தமே! அமெரிக்காகாரன் மோசமான ஆளு.. அவனுக்குத் தெரியும் யாருயாருக்கு எந்த அளவுக்கு ஆப்பு செய்யணும்னு! செஞ்சுட்டான்.. இனி, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கப்போகிறான்!
ஒப்பந்தத்தின் பயன் என்ன? நம் நாட்டின் மின்சார உற்பத்தியை பெருக்கலாம்.. வகுக்கலாம்.. கூட்டலாம்.. யுரேனியத்தை 3 இலட்சம் கோடிக்கு இறக்குமதி செய்வதன் மூலம் இந்த சாதனையை எட்ட முடியும்! ஏன் யுரேனியம் நம்மூரில் இல்லையா?
அப்படிக் கேளுங்க.. உலகத்திலேயே நம்ம நாட்டில் தான் அதுவும் தமிழ்நாடு, கேரள பகுதிகளில் தான் 80% யுரேனியம், தோரியம் இருக்கிறதென்று நம்ம நாட்டு விஞ்ஞானிகள் எல்லோரும் சொல்கிறார்கள்..
3 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்தால் மட்டும் போதாது.. அதை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமில்லையா? அதுக்கு தனியாக 12 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டும்..
நம்ம நாட்டு தோரியத்தைக் கொண்டு ஆண்டுக்கு 3,50,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.. எதிர்காலத் தேவைக்கு உத்திரவாதம் அளிக்க முடியும்.. இத்துறையில் நம்முடைய முன்னேற்றம் கண்டு பல முன்னேறிய நாடுகளே வாயைப் (ரெண்டு கையாலே) பொத்திக் கொண்டு போகிறார்கள்.. இது அமெரிக்காவுக்கும் தெரியும்னு கோபக்கனலைக் கொப்பளிக்கின்றனர்.. விசயங்களைத் தெளிவாகப் புட்டுப்புட்டு வைக்கிறார்கள் நம்நாட்டு விஞ்ஞானிகள்..!
இன்னொரு பக்கம் இறையாண்மை பாதிப்பு! அமெரிக்க என்ன சொல்கிறதென்றால் “அன்பிற்கினிய இளிச்சவாயர்களே.. நாம் இருவரும் எங்கு சென்றாலும் நான் என்ன சொல்கிறேனோ அதை ஆதரித்தால் மட்டும் போதும் (ஜால்ரா).. கை வலித்தால் ஒன்றும் கவலையே இல்லை.. அதையும் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்கிறது..
ஈரான் கூட சேராதே! பாகிஸ்தான் ரொம்ப மோசம்! (இவரு ரொம்ப யோக்கியம்) ஈராக் ரொம்ப ஆபத்தான நாடு! (காரணமே இவன் தான்) என்று நமக்கு அடுக்கடுக்காக ஆணையிடும் நாடாக அமெரிக்கா செயல்படும்.. செயல்படுகிறது.. ஒரு காலத்தில் அணிசேரா நாடுகளின் தலைவராக இருந்த நாடு நம்நாடு.. ஆமாம் சாமி போடச் சொன்னால் நாமென்ன..??
நண்பர்களே.. அமெரிக்கா எத்தகைய மோசமான நாடு என்பது உலக நடப்புகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரியும்.. அமெரிக்காவின் ஏகபோக ஆதிக்க மனப்பான்மையால் அழிந்த நாடுகள் எத்தனை, அநியாயப் படுகொலைக்கு ஆளான மக்கள் எத்தனை கோடி என்பதெல்லாம் நாமறிவோம்..

அமீனா புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும்
உருப்படவே உருப்படாது...!
- சுதேசு
வீதி இதழ்- செப்.2007
Comments
Post a Comment