படம் எழுப்பும் கேள்வி

துவக்க வகுப்பில் மன்னர்மன்னன் என்றொரு பாடம். மன்னர் தனது வாரிசுக்கு முடிசூட்டுவிழா நடத்த தீர்மானிக்கிறார். விழா நாளன்று இளவரசரின் நண்பர்களான முடிதிருத்தும் தொழிலாளி, துப்புரவுத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி போன்றோரின் குழந்தைகள் செல்கிறார்கள்.. வாயிற்காவலன் தடுத்து நிறுத்துகிறான்... தகவலறிந்த இளவரசன் நேரடியாகத் தலையிட்டு இவர்களெல்லாம் எனது நண்பர்கள்.. எனக்குச் சிகையலங்காரம் செய்தவர்கள் இவர்கள்.. எமது ஆடைகளைத் துவைத்துக் கொடுத்தவர்கள்.. ஊரைச் சுத்தம் செய்பவர்கள் இவர்கள்... இவர்களின்றி நாமில்லை (யாமில்லை).. பாகுபாடு காட்டக் கூடாது என முடிகிறது.

அட பரவாயில்லையே என முதலில் தோன்றினாலும் பாடத்திற்கு வரையப்பட்டுள்ள படம் வேறொரு கேள்வியை எழுப்புகிறது. படத்தில் துடைப்பம் மட்டுமே சொத்தாகக் கொண்ட துப்புரவுத் தொழிலாளிதான் கரடி.. பின்னணியில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கும் மேலான அரண்மனை அரசனுக்குச் சொந்தமாக..! இதுபோன்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை மறைமுகமாக நியாயப்படுத்தும் படங்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெறுவது நியாயமா? பாடத்தில் சிங்கம், புலி, யானை போன்ற வலுவான விலங்குகள் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவையாம்... கழுதை, முயல் போன்றவை மேற்சொன்ன தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவையாம்.. வலியவர்கள் ஆள்வதும் எளியவர்கள் அவர்களை அண்டி அடங்கியிருப்பதும் தான் யதார்த்தம் என படமும் பாடமும் உணர்த்துகின்றனவா? ஒருபக்கம் சமத்துவ சமூகம் என்ற தலைப்பில் இலட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு, இன்னொருபக்கம் இப்படிப்பட்ட பாடங்களை வைப்பது நியாயமா?

(புதிய ஆசிரியன், ஏப்ரல், 2014)

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!