Posts

ஒண்ட வந்தவர்கள் ஓடட்டும்...

ஒண்ட வந்தது ஊர விரட்டிடும் புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட கழுதையெல்லாம் உள்ள நுழையுது கம்பு எடுக்க வேணும்... கருப்பசாமியும் சுடலைமாடனும் நம்ம சாமி தாங்க- அட பத்ரகாளியும் பட்டாளம்மனும் நம்ம சாமி தாங்க... செல்லாயம்மனும் கூத்தனாட்சியும் நம்ம சாமி தாங்க...- அந்த மாரியம்மனும் மந்தையம்மனும் நம்ம சாமி தாங்க..... கொழவ போடுறோம் கும்மியடிக்கிறோம் நம்ம சாமிக்கு- அட கெடா வெட்டுரோம் கோழியறுக்கிறோம் நம்ம சாமிக்கு...... பொங்க வைக்கிறோம் வத்தி பொறுத்துறோம் நம்ம சாமிக்கு- அட பட்ட சாராயம் பீடி சுருட்டும் படைச்சு வைக்கிறோம் நம்ம சாமிக்கு..... அருவா கத்தி கம்பு இருந்தா நம்ம சாமி தான் - அவாளின் அபிசேகம் உள்ள நுழைஞ்சா நாம் காலிதான்... தொந்தி பெருத்தவன் நூலு போட்டவன் உள்ள நுழையுறான் நம்ம சாமிய நீஷ பாஷையில் ஏதோ வையுறான்... இடத்தப் புடிச்சவன் மடத்தப் புடிக்கிறான் புரிஞ்சு நடக்க வேணும்- கண்ட கழுதையெல்லாம் உள்ள நுழையுது கம்பு எடுக்க வேணும்..! தமியன் வீதி இதழ் - ஜூன், 2008

மைக் டெஸ்டிங் 1.... 2... 3...

அனைவருக்கும் வணக்கம்.. வீதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. கம்பம் பள்ளத்தாக்கு... மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மத்தியில், அதன் மடியில் இருக்கின்ற பகுதி.. இருபத்து நான்கு மணி நேரமும் சுருளி அருவியின் சுகமான, குளிர்ச்சியான தென்றலை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற மக்கள்... கடந்த சில நாட்களாக, மாதங்களாக என்றே கூறலாம் என நினைக்கிறேன்.. நாட்டின் தென் கடைசியில் அமைந்திருக்கும் இப்பகுதியும் கூட கதகதப்பான வெப்பத்தால் தகித்துக் கொண்டுள்ளது.. மக்களும் தவித்துக் கொண்டுள்ளனர்.. காரணம் 123 ஒப்பந்தம். .! நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரு விசயத்தை, மக்களின் காதுகளை எட்டாமல், மந்திரிகளின் கதவுகளைத் தட்டாமல் மத்திய அரசு புது தில்லிக்குள்ளேயே கண்ணும் காதும் வைத்தாற்போல முடிக்க நினைத்தது எவ்வளவு பெரிய கொடுமை? என்ன ஒரு வில்லத்தனம்? தண்ணீருக்குள் காற்று விட்டால் மேலே வந்துதானே ஆக வேண்டும்.. வந்துவிட்டதே..! மத்திய அரசின் செயல்பாடு வீசுகின்றதே.. நாட்டின் மூலை முடுக்கெல்லாம், சொல்லப்போனால் சுருளிப்பட்டி பிள்ளையார் கோயில் முன் கிடக்கும் கல்கூட அணுசக்தி ஒப்பந்தம் குறி...