Posts

அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை சாத்தியமா?

Image
சமீபத்தில் தேனீ கலை இலக்கிய மையம் மற்றும் திண்ணை மனித வள மேம்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆனந்த விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி அவர்களின் நூலான கற்க கசடற: விற்க அதற்குத் தக என்ற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. அந்நூல் குறித்து கருத்துரையாற்றும் வாய்ப்பினை எனக்கு வழங்கினர் நண்பர்கள். நடைபெற்ற இடம் பயிற்சி மையம் என்பதால் பங்கேற்பாளர்களில் அநேகம் பேர் தகுதித் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள்.. அவர்களிடம் இந்த நூலிற்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என வினவியபோது கனத்த மௌனமே நிலவியது. தொடர்பில்லை என ஆங்காங்கே சில தலைகள் ஆடியதையும் பார்க்க முடிந்தது. பயிற்சி மையம் பிடித்திருக்கிறதா? பயிற்சியாளர்கள் மீது மதிப்பு மரியாதை இருக்கிறதா? என்று நான் கேட்டேன்.... உடனே பலரும் ஆமாம் ஆமாம் என்றனர். சரி, அடுத்த ஆண்டும் இதே பயிற்சி மையத்திற்கு வர விரும்புபவர்கள் எத்தனை பேர் என்றேன்.. அதெப்படி சார் வருவோம்.. நாங்க வேலைக்குப் போக வேண்டாமா? என்றனர். தமிழக அரசு நாளைய தினமே ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் அரசுப்பள்ளிகளில் எவ...

தேய்ந்து வரும் அரசுப்பள்ளிகள்

Image
நண்பர்கள் பலரிடம் பேசும்போதும் சரி, சில கூட்டங்களில் விவாதிக்கும் போதும் சரி.. அரசுப்பள்ளிகளில் சரிந்துவரும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து பேசினால் அப்பிரச்சனையை நாம் மிகைப்படுத்திப் பேசுவதாகவே சிலர் கூறக்கேட்டிருக்கிறேன்.. அந்த வகையில் நமது புரிதலுக்காக சில தகவல்கள்… அனைவருக்கும் கல்வி இயக்க இணையதளத்தில் தமிழ்நாட்டின் மொத்தம் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை, நிர்வாக வாரியாக அப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் எண்ணிக்கை பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.. ( Source:  http://ssa.tn.nic.in/ Statistics.htm )  தமிழகத்தில் உள்ள முப்பது மாவட்டங்களிலும் சேர்த்து 37141 அரசுப்பள்ளிகள், 8409 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11642 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 57192 பள்ளிகள் உள்ளன.. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிகபட்சமாக 80%க்கும் மேல் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன.. திருநெல்வேலி. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்களில் 50%க்கும் குறைவான அரசுப்பள்ளிகள் தான் இருக்கின்றன.. தலைந...

நூல் அறிமுகம்: என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா- ச.மாடசாமி

Image
ஆசிரியர்: பயந்த குடிமக்களை விரும்பும் பயந்த சர்வாதிகாரி.... கடந்த நவம்பர் 1 அன்று அதிகாலை 4 மணி இருக்கும்.. புதுக்கோட்டையில் நடைபெறும் அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழுவில் கலந்துகொள்வதற்கு கம்பம் பேருந்து நிலையம் வந்து விட்டேன். உடன் வர வேண்டிய நண்பர் வந்து சேர கொஞ்சம் தாமதம்.. வரும் வரை எதையாவது வாசிப்போம் என்று வாங்கி வைத்திருந்த ஆனந்த விகடனை எடுத்தேன்.. அதில் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் நேர்காணல்.. ஆர்வம் தொற்றிக்கொள்ள அவசர அவசரமாய்ப் படித்து முடித்தேன்.. அதுக்கு என்ன இப்போ.. அப்படிங்கிறீங்களா? அதிலிருந்த ஒரு தகவல் அப்படி.. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் தாயார் இறந்த அன்று உடனிருந்த நண்பர்களுக்கு ஒரு கதை சொன்னாராம்.. அது ஆண்டன் செகாவ் எழுதிய “ஆறாவது வார்டு” எனும் கதை. மனநோயாளிகளைப் பற்றிய கதை அது. “நமது இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆறாவது வார்டாக, மனநோயாளிகளின் கூடாரமாக இருப்பதால் தான் அந்தக் கதையை என் மனம் தேர்வு செய்திருக்கிறது ” என்கிறார் பி.கே. பேரா.ச.மாடசாமியின் என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா கட்டுரைத் தொகுப்பு நூலினை வாசிக்கும்போதும் இந்த மனநோய...

தமிழக மாணவிகளுக்கு கௌரவம்: புதிய தலைமுறை கல்வி இதழ்

Image

களமிறங்கும் நேரமிது

Image
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக குறிப்பாக தேனி, சிவகங்கை மாவட்டங்களில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த மே மாதம் நடந்த மாநிலச் செயற்குழு முடிவின் படி மாநிலந்தழுவிய இயக்கமாக மாறியுள்ளது. கோடை விடுமுறையைக் கொண்டாட நண்பர்கள் பலரும் பலவிதமாய்த் திட்டமிட்டுக் கொண்டிருக்க அறிவியல் இயக்க (ஆசிரியர், தொண்டர்கள்) நண்பர்கள் இந்தப் பிரச்சாரத்திற்காக திட்டமிட்டனர்... அதன் விளைவு? தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், சென்னை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருப்பூர், விழுப்புரம் என பத்து மாவட்டங்கள் வரையிலும் விரிவிடைந்துள்ளது. பல மாவட்டங்களில் இந்தப் பணியை நண்பர்கள் கையிலெடுப்பதற்குத் தயங்கினார்கள்.. காரணம் என்னவெனில் நானே ஒரு தனியார் / மெட்ரிக் / நர்சரி பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறேன்.. நான் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டு எப்படி இதைக் கொண்டு செல்லமுடியும்? எனது குழந்தையை தனியார் பள்ளியில் படிக்கவைத்துக் கொண்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் இந்தப் பிரச்சாரத்தைச் செய்வது? உள்ளம் உறுத்துகிறத...

அதிகரிக்க வேண்டும் ஆசிரியத் தற்கொலைகள்.....

Image
நான் ஆசிரியராகப் பணியேற்கும் போது மிகவும் சின்ன வயசு. 19 கூட முடியவில்லை.. மருத்துவச் சான்றிதழ் கேட்டுப் போகும்போது கூட கம்பம் செல்வம் டாக்டர் நம்பவில்லை. தம்பி, நீ எல்லா வகுப்புகளும் படிச்சுட்டுதான் வந்தியான்னு கேட்டார்..  2004 பிப்ரவரியில் பணியேற்கச் செல்கிறேன். எட்டாம் வகுப்பைக் கடந்துதான் தலைமை ஆசிரியர் அறையெனத் தகவல். போகும்போதே எட்டிப் பார்த்தேன்.. வாட்டசாட்டமா நல்ல மொரட்டு மொரட்டுப் பயலுக எட்டாம் வகுப்பிற்குள்.. பார்த்தவுடன் வியர்த்துப் போனது எனக்கு..!  எந்த வாத்தியாருக்காவது பணிஸ்மெண்ட்-ன்னா கே.ஜி.பட்டி பள்ளிக்கூடத்துக்குத் தான் மாத்துவாங்கலாம்.!? தலைமை ஆசிரியர் என்ன டைப்போ? மத்த வாத்தியார்கள் எல்லாம் டிப்டாப்பா இருக்கிறார்களே, நம்மோடு சகஜமாகப் பழகுவார்களா? இந்தப் பயலுக நம்ம சொல்றத கேட்பாய்ங்களா? மதிப்பாய்ங்களா? –இப்படி பல கேள்விகள் மனதிற்குள் இடமின்றி முட்டி மோதும் குழப்பமான மனநிலையில் தான் நான் முதல் நாள் பணியேற்றேன்... ஒரே நாளில் ஏழெட்டு பேர் அந்தப் பள்ளியில் சேர்ந்தோம்.. எல்லாருமே புதுசு. கொஞ்ச நாளில் சகஜ நிலைக்கு வந்தாச்சு. அப்புறம் பாத்திங்கன...

மூடும் அபாயத்தில் அரசுப்பள்ளிகள்.... மக்கள் பாதை மாத இதழ் நேர்காணல்

அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க போராடும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மிகச்சிறப்பான செயல்பாடு சம்பந்தமாக கண்ணுற்ற நாம் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை வெகுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மக்கள் பாதை இதழ்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு. தேனிசுந்தரிடம் நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்..  கந்தர்வனின்  அந்த பிரபுவின் புத்திரனும் அந்தக் கூலிப் பயலும் எவ்வளவு காலம் ஒரே பள்ளியில் படிப்பது அதனால் தான் நகராட்சி பள்ளிகள் நவோதயா பள்ளிகள் என இருபிரிவு ஆக்கினோம்...                                                            -என்ற கவிதையின் மூலம் இந்த வம்பான வர்க்கப் பிளவின் வேதனையை உணர்ந்த நாம் களப்போராளி சுந்தரின் கருத்துகளைப் பகிர்கிறோம்... ஏன் இன்ற...