Posts

மனமாற்றத்தை ஏற்படுத்தும் புத்தகம்.. டுஜக் டுஜக் - ஒரு அப்பாவின் டைரி : அமலராஜன்

Image
அன்புமிக்க சுந்தருக்கு வணக்கம்.. டுஜக்.. டுஜக்... புத்தகம் படித்து பார்த்தேன்... மிகவும் அருமை. சிறப்பான வடிவமைப்பு.. வழக்கம் போல் நூலுக்கு வலு சேர்க்கும் அன்பு அண்ணன் ஸ்ரீரசா அவர்களின் பேசும் ஓவியங்கள் அருமை. எம் பேராசான் ... எங்கள் வளர்ச்சியில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் பேரா.ச. மாடசாமி அவர்களின் துவக்கப் பக்கங்கள் உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு...... கல்வியில் தன்னை ஈடுபடுத்தியது மட்டுமல்லாமல் எல்லோரையும் கல்வியின்பால் ஈர்க்கும் காந்தமாய் இன்றளவும் செயல்படும் அருமை நண்பர் முனைவர் ராமானுஜம் அவர்களின் பாராட்டு தங்களுக்கு கிடைத்த மற்றொரு மிகப் பெரிய பரிசு.... இனி டுஜக்.. டுஜக்... புத்தகத்துக்கு வருவோம். குழந்தை மொழிகளை கண்டறிந்து அதை நூல் வடிவில் கொண்டு வந்த பெருமை இப்புத்தகத்திற்கு உரியது. இப்புத்தகம் ஒரு மைல்கல் எனலாம்.. வழக்கமாய் பெரியவர்களின் மொழியை கேட்டு பழக்கப்பட்ட நமக்கு குழந்தைகளின் மொழியை எப்படி ரசிப்பது என நினைவூட்டிச் செல்கிறார் சுந்தர். வழக்கமாய் மழலைச் சொற்களின் மொழி பெயர்ப்பாளராக தாய்தான் இருப்பார். இங்கு தந்தை சுந்தரே மொழிபெயர்ப்பாளராக இருந்து இந்நூலைப் படைத்...

டுஜக் டுஜக் நூல் அறிமுக நிகழ்ச்சி

  டுஜக் டுஜக் நூல் அறிமுக நிகழ்ச்சி - தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கள்ளக்குறிச்சி

குழந்தைகளின் குறும்புகளை ரசிக்க வைக்கும் டுஜக்.. டுஜக்..: செந்தில்வேலு

Image
குழந்தைகளின் மொழியில், இயல்பான நடையில் அவர்களின் உரையாடல் நடையிலேயே வந்திருக்கும் அற்புதமான ஒரு நூல் டுஜக்.. டுஜக்..! குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர் தான். பெற்றோர் மட்டுமில்லை குழந்தைகளின் உடன் பிறந்தோரும் உறவினர் வீட்டுக் குழந்தைகளும் கூட அவ்வப்போது ஆசிரியர்களாக மாறி விடுவதை உணர்த்தும் பதிவுகள் இவை.. “ஒன்.. டூ.. திரி கற்றுக் கொள்வது.. வணக்கம் பிரண்ட்ஸ் என்று பேசி யூடியூப் வீடியோ எடுப்பது போன்றவை..” கேள்விகளால் துளைத்தெடுப்பது குழந்தைகளின் இயல்பு. சில நேரங்களில் நமக்கு விடை தெரியும். பல கேள்விகளுக்கு திண்டாட வேண்டி இருக்கும்.. “அம்மா பேரோடு ஆரம்பிச்சு.. தாத்தா பேரோட நிக்காம இந்த இல பேரு.. ஆடு பேரு.. மாடு பேரு… என கேள்விகள் நீளும் போது நம்மிடம் பதில்கள் இல்லை… அதே போல லவ் பேர்ட்ஸ்ல எது ஆண், எது பெண் என்று தெரிந்த நமக்கு அது எப்போ முட்டை போடும்னு கேட்டா சொல்லத் தெரியல..” குழந்தைகள் மட்டுமே தன்னைப் போலவே பிற உயிர்களையும் நேசிப்பர் என்பதற்கு உதாரணமாக இருக்கும் உரையாடல்கள் இவை.. “பூனைக்கும் சேத்து பால் வாங்குப்பா..” “செடிக்கு எப்படிப்பா மாஸ்க் போடுவாங்க..” கட்டுக்கடங்காத கற்பனைக்கு...

டுஜக் டுஜக்.. : ஒளிப்புள்ளிகளின் வழியே பெரிய வானம் தெரிகிறது - சக.முத்துக்கண்ணன்

Image
கவிதைக்கென்ன இலக்கணம்? மண்ணாங்கட்டி இலக்கணம்! எதையும் மீறுவதும், உடைத்துப் பார்ப்பதும் தானே நவீனம். மழலைச் சொற்களை விடப் பெரிதா கவி? இலக்கியத்தில் மட்டுமல்ல. உலகில் வரையறுக்கப்பட்ட எந்தவொன்றும் குறிப்பிட்ட காலம் வரைதான். அப்புறம் ஊறி உப்பிச் சிதறிவிடும். அப்படி செய்து வைத்திருக்கும் விதிகளை, சடங்குகளை உடைத்து காட்டுகிறது சுந்தரின் எழுத்து. குழந்தைகளோடு குழந்தையாக உடன் கிடந்து களித்த அப்பாவின் அனுபவங்கள் தான் நூல் முழுக்க. அப்பா ஆசிரியராகவும் இருப்பதால் நமக்கு இன்னும் நெருக்கமாகி விடுகிறது. ஒரு ஆசிரியராக நாம் கற்க இதில் இடமிருக்கிறது. இசைக்குறிப்புகள் போல குழந்தைகளின் குரல்களை அப்படியே தந்திருக்கிறார். இத்தனை மெல்லோசைகளுக்கும் ஊடாக ஆண் என்கிற கூறு குழந்தைகளுக்குள் மெல்ல முளைப்பதை நுண்மையாக உணரமுடிகிறதே..! அதுவேறொன்றுமில்லை நம் மரபுதான். தமிழ்ச்செல்வன் தோழர் சொல்வதைப் போல ‘என்னயறிமலேயே என் ஆண் மனோபாவம் வெளிப்பட்டிருக்கலாம்’. டார்வினின் மொழி சில இடங்களில் ஓங்கி நிற்கின்றது. புகழ்மதி அதற்குள் அடங்குகிறாள். அப்பாதான் திருத்தி எழுதியிருக்க கூடும். ‘அடப் போடா லூசு’ என மகள் எகிறியடிக்க. ‘மறுத்...

டுஜக் டுஜக் : குழந்தைகளின் உணர்வுகளை குறிப்புகளாக நமக்கு தருகிறது - ஐ.முரளீதரன்

Image
வீடுகளுக்குள் இருக்கும் குழந்தைகளின் உலகத்தை கண்டுகொள்ளாத சூழலில் அவற்றை கவனித்து நமக்குக் கைகளில் தந்திருக்கிறார் எழுத்தாளர். தேனி சுந்தர் அவர்கள். உள்ளே படிக்கப் படிக்க சிறுவயதில் நான் செய்த குறும்புகள், வீம்புகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. மிக முக்கியமாக ஒரு சம்பவத்தை குழந்தைகள் சொல்கிற போது “நேத்து நாளைக்கு ” என்று படிக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி பொங்கி வருகிறது. இரசிக்கக்கூடிய பிழைகள், திருத்த மனசு வராத வார்த்தைகள் எல்லாம் குழந்தைகளிடம் இருக்கிறது. அப்படி இருப்பது தானே குழந்தைமை.! பெரும்பாலும் சிறுகதைகளில் நம்மை குழந்தையின் உலகத்திற்கு அழைத்துச் சென்றவர் கு.அழகிரிசாமி அவர்கள். அதுவும் அன்பளிப்பு கதை முழுவதும் ஒரு வீட்டிற்குள் நடக்கிறது.. குழந்தைகளின் களேபரங்களை மிக சிறப்பாக காட்டியிருப்பார். நம்மைச் சுற்றிலும் குழந்தைகள் விளையாடுவது போன்ற ஒரு உணர்வினை அதில் இருக்கும். அந்த உணர்வினை நான் டுஜக் டுஜக் படிக்கும் போது உணர முடிந்தது. “ஒனக்கு தெரியுமா பாப்பா நீ இந்த வயித்துல தான் இருந்த? ” “அப்ப அண்ணன்  அப்பா வயித்துல இருந்தானா?” - என்ன ஒரு தர்க்கமான கேள்வி பெண் வயித்துல இருந்து ப...

அம்மாவின் பார்வையிலிருந்தும் பதிவுகள் வர வேண்டும்..! - ச.முத்துக்குமாரி

Image
நூலின் பெயரே வித்தியாசமாக இருக்கே?! இது என்ன மாதிரியான நூலாக இருக்கும் என்ற ஆர்வம் இயல்பாக இருந்தது. தோழர் சுந்தரின் மகன் டார்வின், மகள் புகழ்மதி மற்றும் தன் தம்பி குழந்தைகளின் தினசரி உரையாடலை கரோனா காலத்தில் பதிவு செய்துள்ளார். நல்ல முயற்சி. " சின்சான்.. ஹூமாவரி.. மிர்சி.. நொகாரா.. ஷீரோ.. இந்தப் பேரலாம் இன்னும் ரேசன் கார்டுலதான் சேக்கல" எப்போ டார்வினுக்கு சின்சான் பிடிச்சதோ அப்பவே என் மனதிற்கு நெருக்கமாகிவிட்டான். சின்சானை ரசிக்காம கூட இருக்க முடியுமா என்ன?? "நாங்க தான் உங்க லெவலுக்கு வரணுமோ கொஞ்சம் கூட எறங்க மாட்டீங்களோ' என்றான்.. பெரியவர்களுக்கான அறிவுரை.. "இப்டி இப்டி பறக்குற பட்டாம்பூச்சி வாங்கிட்டு வா" இதை வாசிக்கும் போதே புகழ் எப்படி கைகளை அசைச்சி அசைச்சி பறந்துருப்பாங்க என கற்பனை ஓடுகிறது. குழந்தையாகவே இருந்திருக்கலாம். "போ பாப்பா ஒங்ட்ட அப்பா என்னா சொல்லிட்டுப் போனேன்.. அண்ணன பாத்துக்கன்னு சொல்லிட்டுப் போனேன்ல" தங்கச்சி அண்ணனைப் பார்த்துக்கனுமா? எல்லா பொறுப்பையும் பெண்தான் எடுத்துக்கனுமா?! என்ன. "பாப்பா ஓடி வா ரெண்டு பேரும் வெங்காயத்...

டுஜக் டுஜக் : பக்கத்திற்கு பக்கம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்..!- மதுரை அமுதா

Image
டுஜக்.. டுஜக்… படிச்சு முடிச்சுட்டேன்…என் வாசிப்பனுபவத்தை சொல்லியே ஆகணும் … வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் புகழ்மதி என் கைய பிடிச்சு “வா அத்தைன்னு” அவ உலகத்துக்கு கூட்டிட்டு போயிடுறா. அந்த உலகத்துகுள்ள போன கொஞ்ச நேரத்தில் அவளின் அன்பு அற்புதம் செய்ய ஆரம்பித்துவிடுகிறது. நம்மை மயக்கி ஏதோ மாயை செய்கிறது. அவளின் கொஞ்சும் மழலை மொழியில் நம்மை மறந்து சிரித்துகொண்டிருக்கும் போதே… ரியாலிட்டி ன்னு சொல்லி வெளியில கூட்டிட்டு வந்துட்டார் சுந்தர் சார். இன்னும் கொஞ்ச நேரம் அவ கூட இருந்திருக்கலாம்…. குழந்தைகள் உலகம் எவ்ளோ அழகானது என்பதை ஒவ்வொரு வரியிலும் ரசிக்க முடிந்தது. பக்கத்திற்கு பக்கம் மகிழ்ச்சியையும்… நெகிழ்ச்சியையும் கொட்டிவைத்துள்ளார் சுந்தர் சார். பணியின் நிமித்தம் நான் வெளி ஊருக்கு சென்று விட என் இரண்டு பிள்ளைகளையும் அம்மா தான் வளர்த்தாங்க. அதனால குழந்தைகளோட கவித்துவமான உரையாடலை நான் அனுபவித்ததே இல்லை. அந்த குறை இன்று நீங்கியது போல உணர்ந்தேன். வாழ்க்கையில் எவ்ளோ அற்புதமான விசயத்தை வேலையின் பின் ஓடி இழந்துள்ளேன் என்று நினைக்க நினைக்க ஏக்கமாய் இருந்தது. சின்சான், ஹீமாவரி, மிர்ச்சி, நொகாரா...