Posts

மாணவர் மனசு : வாசிப்பு அனுபவம் : வே.சங்கர், சேலம்

Image
குழந்தைகள் என்றாலே குதூகலம்தான்..எல்லோருக்கும் அவரவர் குழந்தைப் பருவத்தை நினைத்தாலே மனதிற்குள் ஓர் மகிழ்ச்சி துள்ளியெழும்.. நூலின் ஆசிரியர் திரு.தேனி சுந்தர் அவர்கள் ஓர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்..அவர் தன் பணிச்சூழலில், பள்ளியில் மாணவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை அச்சுப் பிசகாமல் அச்சில் ஏற்றியிருக்கிறார்கள். தொடக்கநிலை மாணவப் பருவம் என்றாலே சிறு சிறு குறும்புத்தனங்களும், அப்பாவித்தனமும் நிறைந்ததே என அறிவோம். இங்கே அப்படிப்பட்ட 5 முதல் 10 வயதிற்குட்பட்ட மாணவர்களின் பள்ளி மற்றும் ஆசிரியருடனான செயல்பாடுகள் பற்றிய தனித்தனி தொகுப்பாக எழுதப்பட்டுள்ளது. எழுத்தின் எளிய நடை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது..இலக்கிய நடையில் அல்லாமல் அவரது வட்டார வழக்கு மொழிச் சொற்களையே பயன்படுத்தி அப்படியே எழுதப்பட்டதை வாசிக்கும்போது உடன் நேரில் நாமும் இருப்பதுபோலவே உணரவைக்கிறது. வாசிக்கும்போதே நிச்சயம் நம்முடைய குழந்தைப்பருவ சேட்டைகளும் நினைக்கு வந்துசெல்லும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளோடு குழந்தைகளாய் ஒன்றிப்போய் பணியைச் செய்வதற்கும் ஓர் திறமை வேண்டும். நூலுள் சில... ஒரு மாணவனின் குடிகாரத் தகப்பன்.. தன் மகனை எப்படிய...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : வாசிப்பனுபவம் : இரா.சத்யா, தேவாரம்

Image
இந்த நட்சத்திரங்கள் எட்டிப் பார்ப்பதற்கு குறுகிய காலமே ஆனாலும் என் பார்வைக்குத் தட்டுப்பட சற்று தாமதமாகித் தான் விட்டது. சர்வதேச தன்மை கொண்ட இலக்கியம் என்ற பாராட்டுதலும் நம்ம வீட்டு நட்சத்திரங்கள் என்று கொண்டாடப்படுகிற போற்றுதலும் குழந்தைமை எனும் அற்புத உலகின் சாவிகள் என்ற அடையாளப்படுத்துதலும் நூலின் முகப்பை அலங்கரித்து கௌரவிக்கின்றன. இதற்கு மேல் புதிதாக என்ன சொல்ல வேண்டி இருக்கிறது என்றொரு எண்ணம் தான் எனக்குத் தோன்றியது. புகழ்மதியின் ஆசிரிய தோரணையும் கற்பித்தலும் காணக் கிடைக்கப் பெற்ற அருணா மிகவும் கொடுத்து வைத்தவர்.  நம் குழந்தைகளின் பெயர்கள் வேறாக இருந்தாலும் செல்லப் பெயர்களால் அழைக்கும் போது அதுவே அவர்களது  நிரந்தரப் பெயராக மாறிவிடும் வாய்ப்புகள் நிறைய உண்டு. புகழ்மதியும் நான்கு பெயர்களால் தான் அழைக்கப் படுவதை சொல்லிக் கர்வப்பட்டுக் கொள்ளும் தருணம் மிகவும் அழகியது. விளையாட வந்த சர்வினை படிக்கவும் எழுதவும் சொல்லிக் கற்பிக்கும் பாப்பாவின் அனுசரணையான அணுகுமுறை நிச்சயம் போற்றுதலுக்குரியது. அது கண்டிப்பாக அவரது தந்தையிடம் இருந்தே அவர் பெற்றிருக்கலாம் என்பது என் அனுமானம்....

ஓங்கூட்டு டூணா - மாற்றங்களைத் தருகிற முயற்சி : கனவு ஆசிரியர் இதழின் பின்னூட்டம்

Image
ஓர் ஆசிரியர் தன் மாணவர்களுடனான உரையாடலையும் மாணவர்கள் ஆசிரியரிடம் சொன்ன கதைகளையும் மிக நேர்த்தியாகக் கொண்டுள்ள நூல். சின்னச் சின்ன உரையாடல்களில் பாடமே நடத்தி முடிக்கிற அசாத்தியமான யுக்திகள் மிகப் புதுமையாக உள்ளன. மாணவர்களின் உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பதில் அளிக்கும் விதம் உற்சாகத்தைத் தருகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள வகுப்பறைக் குறிப்புகள் மாற்றங்களைத் தருகிற முயற்சி எனலாம். கட்டாயம் வாங்கிப் படியுங்கள். - கனவு ஆசிரியர்  பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்காக நடத்தும் மாத இதழ் பிப்.2025  

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : குழந்தைகளை முன்னிறுத்தும் படைப்பு : தேனி சீருடையான்

Image
கலைத்தாட்டியம் மிக்க வாழ்க்கையின் மறுபதிப்புதான் இலக்கியம் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அது உண்மையும் கூட. நாரை என்ற பறவை மூலம் தன் மனைவிக்குத் தூது விடுகிறான் ஒரு தமிழ்ப் புலவன். “கையது கொண்டு மெய்யது பொத்தி, காலது கொண்டு மேலது தழுவி” குளிரும் பசியும் தாங்க முடியாமல் நான் இங்கு சுருண்டு கிடக்கிறேன் என்று போய்ச் சொல் என்கிறான். செம்மண்ணில் மழைநீர் கலந்து விட்டால் எப்படிப் பிரிக்க முடியாதோ (செம்புலப் பெயல் நீர் போல) அன்பு கலந்த காதல் நெஞ்சங்களைப் பிரிக்க முடியாது என்று காதலுக்குப் புது விளக்கம் அளிக்கிறது தமிழ்ப் புலவனின் ஆய்வு மனம். அதாவது வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தை அப்படியே சொல்லாமல் ஆய்வு செய்து, அதே நேரத்தில் வாழ்க்கை மற்றும் உளவியல் இயக்கக் கூறுகள் சிதைந்து விடாமல் மொழியின் வழியாக வெளிப்பாடு செய்வதே இலக்கியம் என்று சொல்லலாம். குழந்தையுடனான உரையாடல் என்பது குழந்தைகளின் இயல்பான பேச்சை உள்வாங்கி, அதற்குள் படிந்து கிடக்கும் நுட்பக் கோடுகளை வரிவடிவம் ஆக்கும் திறன் ஒருசில படைப்பாளிகளுக்கு மட்டுமே கைவரக் கூடியது. அவர்களில் மிகவும் முக்கியமானவர் தேனி சுந்தர். இவர் எழுதி...

"நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன" நூல் விமர்சனம் : தேவி நாச்சியப்பன்

Image
"நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன" நூலில் தேனி சுந்தர் அவர்கள், குழந்தைகளை உற்று நோக்கி வழங்கிய செய்தியும் படங்களும் அருமை. கவிதை வடிவில் அமைந்த உரைநடை நூல் எனக் கருதுகிறேன். சங்கப் பாடல்களில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, திருக்குறள் போன்றவற்றிலும் காப்பியங்களில் சூளாமணி, நள வெண்பா போன்றவற்றிலும் சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழிலும் குழந்தையைப் பற்றிய பாடல்கள் உண்டு. குழந்தையின் செயல்களை, "மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு" "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்ப்பட  விதிர்ந்தும்..." என எழுதி உள்ளனர். இவற்றைப் போல் இது இக்கால மொழியில் குழந்தைகள் பற்றி எழுதப்பட்ட இலக்கியமாகவே தோன்றுகிறது.  குழந்தைகளுக்காக எழுதப்படும் இலக்கியம் அவர்கள் வயதுக்கேற்றதாக, புரிந்து கொள்ள எளிதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக அமைகிறது. வயதுக்கேற்றது என்று பார்க்கையில், இது மிகச் சிறிய குழந்தைகள் நாளும் செய்யும் செயல்களின் வருணனையாகவே அமைந்துள்ளது. அந்த வயதுடைய குழந்தைகள் படித்துப் புரிந்து கொள்ள இயலாது. மேலும் ...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : புத்தக அறிமுகம் : சித்ரா டீச்சர்

Image
அனைவருக்கும் வணக்கம். ‘தயவுசெய்து இந்த புகழ் பாப்பாவ மட்டும் எனக்கு கொடுத்திடுங்க’.. இதைத் தவிர வேறென்ன வேண்டும்?!!!.. மரியாதைக்குரிய தேனி சுந்தர் அவர்களின் ‘நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன’ (Natchathirangal Eatti Paarkinrana) இந்த புத்தகத்தில் அப்பாவும் மகளும் வாழ்ந்திருக்கிறார்கள்.. பின் எப்படி அந்த நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்காமல் இருக்கும்?.. குழந்தை இலக்கியங்கள் என்று நான் படித்ததெல்லாம் ஒருவேளை குழந்தை இலக்கியங்கள் இல்லை போலும் என்று தோன்றுகிறது எனக்கு.. இவருடைய மகளுக்கும் இவருக்குமான உரையாடல்கள் தான் குழந்தை இலக்கியமாய் மலர்ந்து கொண்டிருக்கின்றன.. நான் தோழருடைய முந்தைய புத்தகத்தை வாசிக்கும் போதே எழுதியிருந்தேன்.. குழந்தைகளுடனான உரையாடல்களை முதலில் எல்லோராலும் ரசிக்க முடியாது. அப்படியே ரசித்தாலும் யாரும் அதை தொகுக்க முன்வர மாட்டார்கள் என்று.. ஆனால் சுந்தர் அவர்கள் தொடர்ந்து அதை செய்து வருகிறார். இப்படியான பெற்றோர் கிடைக்க புகழ் பாப்பா உண்மையில் ‘வரம்’ பெற்றிருக்க வேண்டும்.. ஆனால் இன்னொரு புறம்.. புகழை மகளாய் பெற இவர்கள் ‘தவம்’ செய்திருக்க வேண்டும்.. ஆரம்பமே அட்டகாசம்.. டீச...

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : மருத்துவர் ஜான்சி

Image
28.12.2024 அன்று தேனி சுந்தர் சார் மாணவர் மனசு ,ஓங்கூட்டு டூணா என்ற இரண்டு புத்தகங்களை எனக்கு புத்தாண்டு அன்பளிப்பாக கொடுத்தார். ஏற்கனவே நான் சாரின் டுஜக் டுஜக்  நூலை படித்து அவரின் ரசிகையாகிவிட்டேன். தற்போது "மாணவர் மனசு" புத்தகத்தை இன்றுதான் படித்தேன். மாணவர் மனசு புத்தகத்தை படித்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் பக்கத்தில் "Great things are done When men and mountains meet" என்ற பிளேக்கின் வரிகளோடு இரா.எட்வின் சார் எழுதிய அணிந்துரை ஆரம்பமே அசத்தல். நானும் கள்ளர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி.கிராமத்து மாணவர்களின் மனநிலையும் அவர்களின் பெற்றோர் மனநிலையையும் சூழ்நிலையையும் மாணவர்கள் சேட்டையும் அவர் பார்த்ததையும் சந்தித்ததையும் அப்படியே எழுத்துக்களாக கொட்டி இருக்கிறார். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். மிகுந்த நன்றி சார்.. அதேபோல பேரா.மாடசாமி சார் அவர்கள் சொன்னதைப்போல ஒவ்வொரு கட்டுரையும் குழந்தைகளோடு குழந்தையாக மாறி வாழ்ந்து இருக்கிறீர்கள். சிரிப்பு போலீஸ் படித்ததும் ஆசிரியர்கள் இப்படி ஒவ்வொரு பள்ளி கல...