Posts

Showing posts from 2022

கவிஞர் இதயநிலவன் எழுதிய ”ஓரெண்டே ரெண்டே ..” நாவல் குறித்து

Image
தேனி, படைப்பாளிகளின் மண். படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லாத மண். எழுத்தின் அத்தனை வித வகைமைகளுக்கும் “இதோ எங்களிடம் ஆள் இருக்கிறார்..” என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் மாவட்டம். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலாக கவிஞர், குறும்பட இயக்குநர், திரைக்கதை, சிறுகதை எழுத்தாளர், நடிகர் எனப் பன்முக ஆளுமைகளில் வெளிப்பட்ட எங்கள் ஆசிரியர், தோழர் இதயநிலவன் அவர்கள் இந்த நூலின் மூலம் நாவலாசிரியர் என்கிற புதியதொரு அவதாரம் எடுத்திருக்கிறார்.. கதையில் இரண்டு பிரச்சினைகள் தீவிரமாகப் பேசப்படுகின்றன. இரண்டு பிரச்சனைகளுக்கும் இடையில் நின்று போராடுபவளாக கவிதா டீச்சர். முதலாவது பிரச்சனை குடும்பத்தில், இரண்டாவது பிரச்சனை ஆசிரியர் பணியில், பள்ளியில், கல்வியில்.. குழந்தையின்மை காரணமாக குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை, சங்கடங்களை கவிதா மிகச் சிறப்பாகவே எதிர்கொண்டு கடந்து வந்தாலும் கூட காலம் அவளுக்கு அடுத்தடுத்த தடைகளை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. காலப்போக்கில் பிரச்சனைகள் அவளது வாழ்வில் இயல்பான அங்கமாக மாறிவிடுகின்றன. தைரியமாக அவற்றைச் சந்திக்கும் மனநிலைக்கு கவிதா தன்னை தயார்படுத்திக் கொள்கிறாள்.. ...

அருண் மோ வின் “பெரியார் தாத்தா” – சு.டார்வின்

ஒரு ஊரில் மாறன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு கதை கேட்காமல் தூக்கம் வராது. ஒரு நாள் அவங்க அம்மா தூங்கிட்டதால அப்பா தான் கதை சொன்னார். அப்போ ஒரு கேள்வி கேட்டார். அவர் என்ன கேள்வி கேட்டார்ன்னா, அவங்க வீட்டு ஹால்ல ஒரு பெரியார் போட்டோ இருந்தது. அதைப் பத்தி கதை சொன்னார். அவர், பெரியார் பத்தி விசயங்களை சொன்னார். என்னவென்றால் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க ஹால்ல ஒரு நிழல் தெரிந்தது.  பெரியார் நிழல் தான். அப்போ அதைப் பார்த்து அங்கே போனான்.. ஐ.. பெரியார்..! அப்பா, இங்கே பாருங்க, பெரியார் தாத்தா..! அவரும் வந்து பார்த்தார்.. அட, ஆமா.. பெரியார் தாத்தா தான்.. மாறன் அவங்க அப்பாவுக்கு தூக்கம் கண்ணைக் கட்டியது. பெரியார் தாத்தா சொன்னார், பேரா, ஏங்கூட வா.. சில விசயங்கள் சொல்றேன் என்றார். அப்போ அவர் கையில் ஒரு தடி வைத்திருந்தார்.. அதை வைத்து ஒரு மினி ஜெட் உருவானது.. அதில் ஏறிக் கொண்டனர். சிறிது நேரத்தில் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராமத்தில் மக்கள் எல்லோரும் கேஸ் எரிக்க பணம் கட்ட முடியாமல் மரத்தையெல்லாம் வெட்டி வெட்டி விறகு எரித்தனர். மரத்தையெல்லாம் வீணாக்கி விட்ட...

கனிமங்கள் நிறைந்து ததும்பும் சுரங்கம்! : தேனி சீருடையான்

Image
சொல் அடர்த்தி இருப்பதால் இதைக் கவிதை என்று சொல்லலாம்; சந்தத்துடன் கூடிய இசைக் கோலம் இல்லாததால் கவிதை இல்லை என்றும் சொல்லலாம். உரையாடலுடன் கூடிய கேள்வியும் பதிலுமாய் நூறு பக்கத்துக்கும் மேல் நீள்வதால் இதைப் புதினம் என்று சொல்லலாமா? அப்படியும் சொல்ல முடியும். ஒவ்வொரு குழந்தையும் நோக்கமின்றி உரையாடுகின்றன. அறிவியல், உளவியல், அரசியல் என உள்ளடக்கக் கூறுகள் கலந்தும் கலைந்தும் கிடப்பதால் இது புதினம் இல்லை என்று சிலர் வாதிடுவர். ஆக, இது “சீமையில இல்லாத புத்தகம்” என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது. உலகின் வேறு எந்த மொழியிலும் இம்மாதிரியான புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இப்படி ஒரு புத்தகத்தை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்ததே ஒரு புரட்சிச் சிந்தனைதான். இந்த நூலின் முக்கியக் கதாபாத்திரங்கள் மூன்று; டார்வின், புகழ்மதி, கீர்த்தி. அப்பா துணைப் பாத்திரமாய் வந்து போவார். அண்ணல் காந்தியடிகள் தனது சுய சரிதையில் குழந்தைக் கல்விபற்றி இப்படிக் கூறுவார். “குழந்தைகளுக்கு முதலில் கோடு போடவும் புள்ளி வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அது ஓவியமாய் மாறி மனசில் படியும்; அதுதான் முதல் கல்வி.” “அறுபது பக்க புஸ...

டுஜக் டுஜக் : நூல் குறித்து தினமலர் நாளிதழ்

Image
டுஜக் டுஜக் : நூல் குறித்த அறிமுகம் - தின மலர் நாளிதழ், சென்னை பதிப்பு

சீமையில் இல்லாத புத்தகம் : இரா.செந்தில்குமார்

Image
தேனி சுந்தர் அவர்களின் முந்தைய படைப்பான டுஜக் டுஜக் நூலின் பரந்துபட்ட வரவேற்பை தொடர்ந்து அதே வரிசையில் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது, சீமையில் இல்லாத புத்தகம். வாசிக்கும் ஒவ்வொருவரையும் தன் பக்கமாக வசீகரிக்கும் அருமையான நூல். குழந்தைகளின் பேச்சு மொழியை பதிவு செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்காகவே அவரை பாராட்டலாம். எல்லார் வீட்டிலும் குழந்தைகள் பேசுகிறார்கள் ஆனால் நாம் அவர்களின் பேச்சை கவனிக்கிறோமா என்பது கேள்விக்குறியே! ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்தவுடன் உடனே கடக்க முடியவில்லை.. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும்… ஒவ்வொரு பக்கமும் குழந்தைகளின் உலகத்தால் விரிகிறது…. அதில் அமைதியாக வேடிக்கை பார்க்கும் போதே பரவசமாகிறது….உடன் பயணித்தால் நம்மை வேறு மனிதர்களாக குழந்தைகள் மாற்றி விடுவார்கள் போலும். சீக்கிரமாக தீர கூடாது என மெதுவாக மெதுவாகவே வாசித்தேன்…. வாசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.. உடனே வாசித்து கடக்கவும் முடியவில்லை… ஒரு சுகமான அனுபவம்.! கேள்விகளால் துளைத்தெடுக்கும் டார்வின்களுக்கு நாம் அளிக்கும் பதிலில் தான் அடங்கியுள்ளது குழந்தைகளின் வளர்ச்சி.. ஓரிடத்தில் டாடா ஸ்கை பற்றி டார்வின் ஒரு க...

சீமையிலே இல்லாத புத்தகம்தான் : பேரா.சோ.மோகனா

Image
வணக்கம் நண்பர்களே.. 06.10.22 அன்று விடியற்காலை ரயில் பயணம் மற்றும் காலை, பேருந்து பயணத்தின் போது, தேனி சுந்தரின் சீமையிலே இல்லாத புத்தகம் படித்தேன். ஒரே மூச்சில் 112 பக்கத்தையும், அணிந்துரையிலிருந்து, அவர் உரை வரை 9௦ நிமிடத்தில் படித்தாகிவிட்டது. என்ன சின்ன சின்ன கவிதை வரிகள் தான், எனவே படிக்க எளிதாகவும், விரைவாகவும் முடிந்தது, ஆனால் சீமையில் இல்லாத புத்தகம் படு சூப்பராக இருந்தது. ஆனால் வழக்கம்போல பல பணிகளால் அதனைப் பற்றிய பதிவு எழுத தாமதமாகிவிட்டது. நெசமாகவே இது சீமையிலே இல்லாத புத்தகம்தான். குழந்தைகளின் மழலை மொழியை பொதுவாக யாரும் பதிவு செய்வதில்லை. மழலை மொழிகளையே பதிவு செய்து இலக்கியம் ஆகிவிட்டார் தோழர் தேனி சுந்தர். படா கில்லாடி தான் இவர். கொஞ்சமும் கற்பனை கலக்காமல், அதற்கான அவசியமே இல்லாமல், நெசமான மழலை மொழியை பேசி மனதை கவர்தல் என்றால், வாழ்க்கை மொழியை குடும்ப மொழியை இலக்கியமாக்கிய முதல் மனிதர் இவராகத்தான் இருக்க முடியும். வாழ்த்துக்கள் மகனே… “வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்.” மேலும் சுந்தர் மகன் டார்வினின் கை ஓவியங்கள் அற்புதமாக உள்ளன. ஒரு சிறு பையனா இதனைப் போட்டான் என்று ...

சீமையிலே இல்லாத புத்தகம் வாங்கி படிங்க : அமுதா செல்வி

Image
ஒரு வழியா “சீமையிலே இல்லாத புத்தகம்” வந்து சேர்ந்து விட்டது. கையில் கிடைத்ததும் வாசிக்க தொடங்கி விட்டேன். அட்டை படமே அட்டகாசமா இருக்கு. திருப்பி பார்த்தால் ஆசிரியர் குறிப்பு அதைவிட பிரமாதம். ஆஹா….. நிச்சயமா இது “சீமையில இல்லாத புத்தகம்” தான்.. இப்படி ஒரு ஆசிரியர் குறிப்பு இதுவரை நான் பார்த்ததில்லை. என்னமோ தெரியாது… சிலரிடம் காரணமே இல்லாமல் ஒருவித உணர்வு நெருக்கம் ஏற்படும். உடனே ‘முறை’ சொல்லி கூப்பிட தோணும். ச. தமிழ்ச்செல்வன் அண்ணனை பார்க்கும் போதெல்லாம் அப்படி ஒரு உணர்வு தோன்றும். அப்பா வயதுகாரர் என்றாலும் அண்ணன் என்று கூப்பிட கூப்பிட இனிப்பா இருக்கும். அது போன்றதொரு நெருக்கம் எனக்கு புகழ்மதியோடு ஏற்பட்டுள்ளது. “மருமகளே” என்று தாடையை பிடித்து கொஞ்ச தோன்றும் நெருக்கம். நான் அவளை நேரில் பார்த்ததே இல்லை. எனக்கும் அவளுக்குமான உரையாடல்கள் அத்தனையும் டுஜக் டுஜக் புத்தகமும் அதனை தொடர்ந்து வரும் வாட்ஸ் அப் செய்திகளும் மட்டுமே. இரண்டு மூன்று நாள் தகவல் இல்லை என்றால் கூட எங்கே போய்ட்டீங்க என்று கேட்க தோணும். நேற்று புத்தகம் கையில் கிடைத்ததும் அவளையே நேரில் பார்த்த மகிழ்ச்சி. ஒவ்வொரு பக்கம் படித்...

கைரதி 377 : நூல் குறித்து

Image
சாதாரணமாக சொல்லிடுறோம்.. பொண்டுகப் பய..! நாம் ஓரளவு கல்வி, விழிப்புணர்வு பெற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற மனநிலை பெரும்பாலும் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை. இன்னும் பல கேவலங்கள் இந்த சமூகத்தில் களையப் பட வேண்டி இருக்கிறது என்பதை உணர்த்தும் கதைகள் கொண்ட தொகுப்பு : கைரதி 377. கோவை மு. ஆனந்தன் அவர்கள் எழுதி இருக்கிறார்.. அலி, ஹிஜரா, யுனக், மாற்றுப் பாலினம், மூன்றாம் பாலினம், சிறப்பு பாலினம், இடைப் பாலினம், அரவாணி, திருநங்கை, திருநம்பி, இருநர், திரினர், பாலிலர், ஒம்போது, பொட்டை, பேடி எனப் பல பெயரிட்டு அழைக்கிறது இந்த சமூகம். எங்கள் பகுதி மக்கள், கிராமங்களில் இது போல இருக்கும் நண்பர்களை “பொண்டுகப் பய..” என்று சொல்லி அழைப்பதுண்டு.. ஆக பெயர்களுக்கு பஞ்சமில்லை. அதே போல அவர்கள் அடையும் அவமானங்களும் கொஞ்ச நஞ்சமில்லை என்பதை மிகுந்த வலியுடன் பதிவு செய்யும் கதைகளின் தொகுப்பு : கைரதி.. சில ஆண்டுகளுக்கு முன்பு லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ஒரு தொகுப்பு வெளிவந்தது. “மெல்ல விலகும் பனித்திரை” என்பது நூலின் பெயர். திருநங்கையர் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு அது. அதில் ஒரே ஒரு கதை ...

தமிழ்நாடு கல்விக் கொள்கை எதிர்பார்ப்புகள் : அறிவியல் இயக்கம், கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு கல்விக் கொள்கை : நமது எதிர்பார்ப்புகள்  

நானும் புத்தன் தான்.. - நூல் குறித்து

Image
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹைக்கூ நூலை வாசித்தேன்.. அப்போ அதுக்கு முன்னாடி நிறைய ஹைக்கூ நூல்களை வாசித்துக் கொண்டிருந்தீர்களா என்று தயவு செய்து கேட்டு விடாதீர்கள்.. தமிழகத்தில் ஹைக்கூ இலக்கியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்கக் கவிஞர்கள் எல்லாம் பெரும்பாலும் நம்மூர்ல தான் இருந்தார்கள்.. நம்மூர்க்காரர்களாக இருக்கிறார்கள்..! ஹைக்கூ சிகரத்தில் எப்போதும் இருக்கும் கம்பம் மாயவன், தோழர்கள் உமர் பாரூக், Tamizhmani Ay மற்றும் Cumbum Puthiyavan ஆகியோரது ஹைக்கூ நூல்கள் எப்படியும் கைக்கு வந்து விடும்… இப்போது அவர்களும் ஹைக்கூ எழுதுவது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். ஆகவே என்னுடைய ஹைக்கூ வாசிப்பு குறைந்ததற்கு அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.. கம்பம் பகுதியில் அந்த ஏக்கத்தை, தாகத்தை போக்கும் விதமாக, குறைக்கும் விதமாக இப்போது கவிஞர் ராஜிலா ரிஜ்வான் ஹைக்கூ சாரல் பொழிந்து வருகிறார்.. அவருடைய இரண்டாவது நூல் “நானும் புத்தன் தான்..” அகநி வெளியீடாக வந்திருக்கிறது.. அடிப்படையில் அவர் ஒரு ஆசிரியர். இஸ்லாமியப் பெண். ஹைக்கூ கவிஞர்.. எல்லாமே கொஞ்சம் தனித்துவமான தன்மைகள் தான்.. தனது அணிந்...

மகாத்மா மண்ணில் மதவெறி - நூல் குறித்து

Image
தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் நக்கீரன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்.. ஜனவரி,30 மகாத்மா காந்தி நினைவு நாள் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.. இந்துத்வ கும்பலின் சதித் திட்டத்தின் படி கோட்சே என்கிற இந்து மத வெறியன் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற தினம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. கடந்த ஜனவரி 30 அன்று கோவையில் நடந்த நிகழ்வில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.. மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பின் போது கோட்சே-வின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்பது தான் அங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.. நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்துப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் தான் தடுக்கின்றனர்.. காந்தியைக் கொன்றவன் கோட்சே என்பது இதுவரை யாரும் சொல்லாத தகவலா..? உலகம் அறியாத உண்மையா? நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒரு குற்றவாளியின் பெயரை ஏன் சொல்லக் கூடாது..?...

தமுஎகச அறம் முகிழ் வாசிப்பறை

  தமுஎகச அறம் கிளை சார்பில் குழந்தைகளுக்காக நடைபெற்ற இணைய வழி நிகழ்ச்சி

ஆயிசா இரா.நடராசன் சிறுகதைகள் : நூல் குறித்து

Image
“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. நீயெல்லாம் மனுசன் தானா..? என்னைப் பார்.. எடு.. புரட்டு.. வாசி..! நான் உன் கண்ணுக்குத் தெரிகிறேன் தானே..!” அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில் நாம் இன்னும் வாசிக்காதவை நம்மை நோக்கி எழுப்பும் குரல்களாகப் பல நேரங்களில் உணர்வது உண்டு. உள்ளே நுழைந்தால் அப்படி ஏராளம் குரல்கள் எழுகின்றன. நம் இயலாமையை என்ன செய்ய..! அப்படி ஒரு குரல் எழுப்பிய நூல் தான் “இரா.நடராசன் சிறுகதைகள்..” அதுவும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் வரிசையிலிருந்த நூல்.. கடந்த சில நாட்களாக அந்நூலுக்கு என்னை அர்ப்பணித்தேன்.. பெயரில்லாதவன் கதையில் தொடங்கி நூலில் இருக்கும் அத்தனை கதைகளும் சிறப்பு. ஆனாலும் இளவரசி பட்டம், மணி மகுடம் எல்லாம் ஆயிஷா கதைக்குத் தான்..! ஒவ்வொரு கதையும் வித்தியாசமான படைப்பு. நாம் எதிர்பாராத பாத்திரங்கள். சம்பவங்கள். திருப்பு முனைகள் நிறைந்தவை. அதை தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் அணிந்துரையும் அழகாகச் சொல்கிறது.. கதை நாயகர்கள் அனைவருமே மிக மிக சாமானியர்கள்.. கழிவறை சுத்தம் செய்பவர், செருப்பு தைப்பவர், பன்றி வளர்ப்பவர், பாலியல் தொழில் செய்பவர், வெட்டியான், பிணவறை காப்பாள...

பள்ளிகளில் ஓராசிரியர் நிலைமை: எச்சரிக்கும் கல்வியாளர் தேனி சுந்தர்

காம்ரேட் டாக்கீஸ் சார்பில் நடைபெற்ற இணைய வழி நிகழ்ச்சி   பள்ளிகளில் ஓராசிரியர் நிலைமை

மனச்சாட்சியின் குரல்கள் : நூல் குறித்து

Image
பேரா ச.மாடசாமி அவர்கள் எழுதிய மனச்சாட்சியின் குரல்கள் : நெருப்பு வார்த்தைகளின் தோரணம்..! அன்புத் தோழர் பேரா.மாடசாமி அவர்களின் புதிய நூல்.. மனச்சாட்சியின் குரல்கள்..! அவசரத்தில் மனதின் குரல் என்று வாசித்து விடக் கூடாது.. அவை பிரதமர் சொல்லும் மாதாந்திர பொய்கள் என முகப்பிலேயே பெயர்க் காரணம் சொல்லி நம்மை எச்சரிக்கிறார்.. அவ்வப்போது முகநூலில் வாசித்த பதிவுகள் தான் என்றாலும் தொகுத்து படிக்கையில் ஒரு சுவாரசியமாக, விறுவிறுப்பாக இருக்கிறது.. நூலில், குழந்தைகள் குறித்த பதிவுகள் தெவிட்டாத இன்பம் என்றால்.. அறிவொளி அத்தியாயம் சிலிர்ப்பூட்டும் தென்றல்.. இரண்டையும் கடந்தால் அனல்..! கத்தரி வெயில்..! ஆம், பழமைவாதமும் போராட்டமும் என்கிற அத்தியாயம் முழுவதும் அனல்.. அதிகாரம், ஆணாதிக்கம், மதவாதம் குறித்த பதிவுகள் அனைத்திலும் நெருப்பு வார்த்தைகள்.. தெறிக்க விட்டிருக்கிறார்.. வாசிக்க வாசிக்க சுடுகிறது.. நமக்கு சொரணை இருக்கிறதா இல்லையா என்று ஒவ்வொரு பதிவும் சோதிக்கிறது.. கைகள் நடுங்க.. கண்கள் சிவக்க.. உடல் முழுவதும் உஷ்ணம் ஏற்றும் அத்தியாயம் அது..! மதம் என்றால் எல்லாம் மதமாகி விடுமா.. இல்லை, ஆதிக்கவாதிகளின் ம...

டுஜக் டுஜக் - ஒரு அப்பாவின் டைரி : வாசிப்பு அனுபவம் : ரமேஷ், நாராயணத் தேவன் பட்டி

Image
டுஜக்..டுஜக்... படித்தேன்.. நண்பர் சுந்தரை பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தை கீழே வைக்காமல் படித்தேன். சூப்பர்...! என் மகனின் மழலைப்பருவம் என் கண்முன் வந்து நிழலாடியது. அவனை பள்ளியில் சேர்க்க போகும் போது பள்ளியில் கேட்ட கேள்வி: யானை என்ன கலர்? அவன் சொன்னான்.. யானை, யானை கலர் தான்....! டுஜக்... டுஜக்... ஓர் அற்புத படைப்பு..! குழந்தைகளின் மொழியை, சிந்தனையை, ஆர்வத்தை, தெளிவாக பதிவு செய்து தொகுத்திருக்கிறார். தரமான உரையாடல்கள்.. தேதி வாரியான பதிவுகள் மிகவும் சிறப்பு.! கொரனா வந்து பிஸ்கோத்து பாக்கெட்ட தூக்கிட்டு போயிரும்! என கூறும் மழலையின் புரிதல் சுகானுபவம். டார்வின், விவேக் இறந்துவிட்டார் என பதிவு செய்யும் போது குழந்தைகளின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றிய புரிதல் இல்லாமல் போனது சுவாரசியமானது. குழந்தைகளுக்கு எது பிடிக்குமோ அதனையே விரும்பி கற்றுக் கொள்கிறார்கள்.. நினைவிலும் வைத்துக் கொள்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. உதாரணமாக என்னிடம் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் அல்ஜீப்ராவில் மிக...