Posts

உனக்குரிய இடம் எங்கே?

காமய கவுண்டன் பட்டியில் நாங்க பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். நான் கொஞ்சம் நல்லா படிப்பேன்.. நான் என்ன சொன்னாலும் பாராட்டுதான்.. அந்த அளவிற்கு ஆசிரியர்களுக்கு என்மேல் நம்பிக்கை.. ஆனால் சில நண்பர்கள் எந்த விதத்திலும் தன்னை ஆசிரியர் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை.. சில நேரங்களில் சரியான விடையையே சொல்லிவிட்டாலும் எங்க வாத்தியார் என்ன செய்யமாட்டார்.. பாராட்டவே மாட்டார். திட்டு மட்டுமே அவர்களுக்கு பரிசு. அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவன் தான் சரவணன்.. அவன் கெட்டிக்காரனுமில்லை.. அதே நேரத்தில் அவனால் வகுப்பறைக்கு ஒரு பிரச்சனையுமில்லை.. யாரோடும் அவ்வளவாக பேசுவதுகூட இல்லை. அவன் எந்தவிதத்திலும் எங்களைப் பாதித்ததே இல்லை. ஒருநாள் தமிழாசிரியர் சங்கரலிங்கம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எங்க பக்கத்தில் உட்கார்ந்து ஏதோ ஒரு பாட்டை தன் வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டிருந்தான்.. யாருக்கும் கேட்டு தன்னை கிண்டல் செய்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாய் இருந்தான்.. சில சேட்டைக்கார நண்பர்கள், ஐயா, சரவணன் பாட்டுப்பாட போற...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்..

அன்று எங்கள் பள்ளியில் கம்பம் பகுதியில் பிரபலமான கண் மருத்துவமனை ஒன்றின் சார்பில் கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.. வழக்கம்போல ஊசி போடத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்து ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்குள் ஒரே கலவரம்.. அழுகையால் பள்ளியே அல்லோல கல்லோலப் பட்டது. சார்.. எனக்கு காய்ச்சல் இல்ல சார்.. கழுத்தக்கூட தொட்டுப்பாருங்க சார்.. இருமல் போயிருச்சு சார்.. மூக்கு ஒழுகல சார்.. ஊசிக்குப் பயந்த குட்டீஸ்கள் ஒரே கலாட்டா.. ஒருவழியாக ஊசிபோட வரல. கண் செக்கப் தான்னு சொல்லி சமாதானப் படுத்தி ஒவ்வொரு வகுப்பாக அனுப்பினோம். அடுத்து என்னுடைய மூன்றாம் வகுப்பு மாணவர்கள். ஒவ்வொருத்தராக அழைக்கப்பட்டனர். போர்டில் 1.. 2.. 3.. என 9 வரையிலான எண்கள் பல அளவுகளில் எழுதப்பட்டு மாணவர்களைப் பத்து அடி தூரத்தில் நிறுத்தி கேட்கும் எண்களைச் சரியாகச் சொல்கின்றனரா எனப் பரிசோதனை செய்யப்பட்டனர். சரியாகச் சொல்லி விட்டால் கண்பார்வையில் ஒரு பிரச்சனையுமில்லை.. பெரும்பாலான மாணவர்கள் சரியாகச் சொல்லிவிட்ட மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தனர். ஆனால் நானும் என்னோடு பணிபுரியும் சக நண்பரும் ஒரு மாணவனின் வருகைக்காக காத...

அறிவியல் திருவிழா

இது என்ன அறிவியல் திருவிழா? வித்தியாசமாக இருக்கிறதே என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு கொஞ்சம் அப்பாற்பட்ட நண்பர்களுக்கு தோன்றக்கூடும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் தமிழகம் முழுக்க அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது நான் இங்கே சொல்லப்போவது..  டிப்டாப்பான மெட்ரிக் மாணவர்களும் சட்டைப்பித்தானின்றி பின்னூக்கு அணிந்த அரசுப்பள்ளி மாணவர்களும் ஒன்றாய் கலந்துகொண்ட திருவிழா.. மிகப்பெரிய மாநகரங்களைச் சேர்ந்த மாணவர்களும் எந்தவிதத்திலும் வெளியுலகிற்கு அறிமுகமே ஆகாத, போக்குவரத்து வசதிகளேகூட இல்லாத மிகப்பின்தங்கிய கிராமத்து மாணவர்களும் ஒருசேரக் கலந்து கொண்ட திருவிழா.. தமிழகம் முழுவதுமிருந்து இண்டர்நேஷனல் பள்ளிகள்,அரசுப் பள்ளிகள்,அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், துளிர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் பயிலும் சிறப்புப் பள்ளிகள், இரவுப் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு திருவிழா.. ஆம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தி...

பேராசிரியர் மணியின் பள்ளிக்கூடத்தேர்தல் : நியாயமான தேர்தல்

Image
ஊர் ஊராய்.. தெருத்தெருவாய் அவரவர் சக்திக்கேற்ப விருதுகளை வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றனர். தினமணி நாளிதழில் சமீபத்தில் வெளிவந்த கட்டுரையொன்றில் வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் வீட்டுக்கொரு விருது வழங்குவதாக எந்தக்கட்சி உறுதியளிக்கிறதோ அந்தக்கட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகக் கிண்டலடித்திருந்தார் கட்டுரையாளர். அந்தளவுக்கு விருதுமோகம் வேராக விழுதாக எங்கும் வியாபித்துக்கிடக்கிறது. அதிலும் பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் துவங்கிய பிறகு வல்லுநர் குழுவே வாயடைத்துப் போகுமளவிற்கு "பட்டங்கள்" ஏராளமாய்த் தாராளமாய் நம் கண்ணில் படுகின்றன. இது எங்கபோய் முடியுமோ தெரியவில்லை! ஆசிரியர்களைப் பொறுத்தவரை நல்லாசிரியர் விருது ஒன்றுதான் அவர்களது ஒரே மற்றும் உயர்ந்தபட்ச எல்லையும்கூட. மாநில அளவிலான நல்லாசிரியர் விருது தேசிய அளவிலான நல்லாசிரியர் விருது என இரண்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதுவும் நாடிநரம்பெல்லாம் அடங்கி ஒடுங்கியபிறகு! துடிப்பாக பணிபுரிகின்ற காலத்தில் புதுமைகள் படைக்கின்ற காலத்தில் விருது வழங்கினாலாவது ஒரு புண்ணியம். விருது கிடைத்த உத்வேகத்தி...

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

Image
# உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23 : ஏப்ரல் முதல் தேதிக்கு என்ன சிறப்பென்று உங்களுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும். முட்டாள்கள் தினம்! மேலே வெள்ளைக் காக்கா பறக்குது..... சட்டையில் பூச்சி ஏறுது.... என்று சொல்லி சிலரை ஏமாற்றி (!) விட்டதாய் நினைத்து சின்னப்புள்ளத் தனமாய் நீங்களும் சிரித்திருக்கக் கூடும். ஆனால் இதே ஏப்ரல் மாதத்தில் தான் உலகப் புத்தக தினமும் வருகிறது. ஆனால் நாம் யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. உலகப் புகழ்பெற்ற மாபெரும் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம் ஏப்ரல் 23. இதைத்தான் உலகப் புத்தக தினமாக அறிவித்து புத்தகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாசிப்பை அதிகப்படுத்தவும் மக்களை அறிவாயுதம் ஏந்தச் செய்யவும் பல்வேறு தரப்பினர் பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருந்தாலும் தமிழக அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமே மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்கள் தோறும் புத்தகங்களைக் கொண்டு செல்லும் பணிகளை அலட்டிக்கொள்ளாமல் அதே நேரத்தில் பெருமிதத்தோடு ஆண்டு முழுக்கவும் செய்து வருகிறது.. புத்தகங்கள் மகத்தானவை.. அற்புதமானவை.. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “ காரிருள் அகத்த...

நூலறிமுகம்: புதிய பரிதியின் தமிழ் என் காதலி....

எங்கெங்கும் காணினும் சக்தியடா என்பது போல எட்டுத்திக்கிலும் கவிஞர்கள் கூட்டம்.. ஆளாளுக்கு ஒரு வட்டம்! அதற்குள் இருந்துகொண்டு எதையாவது எழுதுவதும் அதை கவிதை என வெளியிடுவதும் இன்று சர்வசாதாரணமான கலாச்சாரமாகிவிட்டது... என்னைக் கவிஞன் என்று இந்த சமூகம் கூற வேண்டும்.. அதற்கான முயற்சிகளாக எதையேனும் எழுதுவேன், படைப்பேன் என பகட்டுத்தனமாக கூறுபவர்களுக்கு மத்தியில்... நன்றாக நடக்க, ஓடப்பழகிய நான்காம், ஐந்தாம் அகவைப் பருவத்திலேயே புரட்சி பற்றிக் கவி பாடினால் என்னவென்று சொல்வது? சமணத்தை ஒழிக்கச் சபதமேற்று ஆயிரம் பாடல்களை எழுதிய திருஞான சம்பந்தரைக் கருவிலே திருவுடையார் எனப் போற்றுகின்றனர்.. அப்படியானால் தாலாட்டுக் கேட்கும் பருவத்திலே இப்பாழடைந்த சமூகத்தை புரட்சியால் நீராட்ட நினைத்துக் கவி பாடிய இக்குட்டிப் புலவனை என்னவென்று சொல்வது? ஊனமுற்றவனாய்ப் பிறக்க ஆசை அந்த ஊனமுற்ற உறுப்பு வயிறாக இருந்தால்! வைகை வற்றியதற்கு வருத்தப்படாமல்-அதில் மீன் பிடிக்க நினைக்கிறாய்... பிறந்த நாள் கேக் வெட்டும்போது நினைத்துக் கொண்டேன்.. அம்மாவின் பிரசவ வேதனையை!  இது போன்ற இன்...

ABL : சுகமா? சோதனையா?

காலங்காலமாக இருந்து வந்த கற்பித்தல் முறையினில் ஓர் அற்புத மாற்றம்.. தேர்வுகளில், பணியிடைப் பயிற்சிகளில் எந்த கற்பித்தல், கற்றல் முறை சிறந்தது என்று ஆசிரியர்கள் வாதிட்டார்களோ, தேர்ச்சி பெற்றார்களோ அதுவே இன்றைய செயல்வழிக்கற்றல் முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது.. கவனி.. கவனி.. என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பாடத்தை முடித்த காலம் மலையேறிவிட்டது. சொல்லிக் கொடுங்க சார்.. இந்த அட்டையைப் படிக்க வேண்டுமா எழுத வேண்டுமா? என்று மாணவர்கள் ஆசிரியர்களை நச்சரிக்கும் காலமிது.. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த எல்லைக்கோடு நீக்கப்பட்டு, இடைவெளி குறைக்கப்பட்டு ஒன்றாக அமர்ந்து கற்பிக்கும், கற்கும் முறை.. ஏழை எளிய மாணவர்களின் வியர்வை வாசம், அழுக்குச் சட்டைகளின் நெடி, கிடங்கு விழுந்த கண்கள், அந்தக் கண்களில் தெரிகின்ற ஏக்கம், கனவு ஆகியவற்றை அவர்களோடு அருகிலமர்ந்து உணர்த்திடக் கிடைத்த பெரும்பாக்கியம் இந்த  ABL ... எதுவுமே இல்லாத போது ஏதாவது ஒன்று கிடைத்தால் ஆறுதல் தான். அதுபோல ஒன்றுமே தெரியாமல் கடந்து செல்லும் கடைநிலை மாணவர்களை ஏதாவது படிக்க வைப்பதற்கான வாய்ப்பு! மீத்திறமிக்க ம...