Posts

மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களைப் பாதுகாப்பது எப்படி?

மெட்ரிக் ஆசிரியர்களின் விடுதலை பற்றி டிசம்பர் இதழில் முனைவர் ச.சீ.இராஜகோபாலன் எழுதியிருந்தார்கள்.. மெட்ரிக் ஆசிரியர்கள் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடம் வழங்கிப் பாதுகாத்திட வேண்டும். இங்கு பணிவாய்ப்பு இல்லாத காரணத்தினால்தான் அவர்கள் அங்கு அடிமைச் சேவகம் செய்கின்றனர்.. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும் விடுப்பு விதிகளும் பணிப் பாதுகாப்பும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க நாம் வலியுறுத்துவோமாயின் அவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தானே முறைப்படி நியமனம் செய்யமுடியும்? தற்போது வழங்கி வரும் ஊதியத்தை விட பலமடங்கு கூடுதலான ஊதியத்தை மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நிச்சயம் வழங்க முன்வரப் போவதில்லை.. தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்ட பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளின் வேகம் குறைந்துள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்று பல இலட்சங்களைக் கொடுத்து அங்கு கொத்தடிமைகளாக இருக்க பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. எனவே வருமானம் இல்லை என்பதால் அரசு உதவி பெறும் பள்ள...

அறிவியல் கலாச்சாரம் மேலோங்கி இருந்தால் சமகால ஜனநாயக சீரழிவுகளை நாம் சந்திக்க வேண்டி இருந்திருக்காது- பேரா.நா.மணி நேர்காணல்

Image
பொருளாதார பேராசிரியர் மணி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? தற்போது பொருளாதாரத் துறைப் பேராசிரியர் என்ற பொறுப்பை செம்மையாக செய்ய இயலாதவனாகவே உள்ளேன். நான் பணியாற்றும் துறையில் 10 பேர். ஏழு பேர் பணி ஓய்வு பெற்றும் ஒருவர் முதல்வராக பணி உயர்வும் பெற்று சென்ற நிலையில் ஏழு பணியிடங்கள் காலி. முதலில் ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டும் பின்னர் புதிதாக பணி அமர்த்தப் பட்டவர்களை ஒருங்கிணைப்பது ஊக்கமளிப்பது. புதிய துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகளுக்கு திட்டமிடுவது என துறைசார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், ஒரு பொருளாதார பேராசிரியராக சமகால பொருளாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அதன் மீது பங்களிப்பு செலுத்துதல் என்ற பகுதியில் கவனம் செலுத்த முடியாத சூழல் உள்ளது. பொருளாதார வல்லுநர்கள் மாநாடு ஒன்றை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறீர்கள்.. அதென்ன திடீரென வல்லுநர்கள் மாநாடு? கருப்புப் பணம், கள்ளப் பணம் குறித்து விவாதிக்கப்பட்டதா?? தமிழ்நாடு பொருளாதார வல்லுநர்கள் சங்கம் (Association of Economists of Tamilnadu) என்ற அமைப்பு 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பொருளாதாரப்...

அரசுப்பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்

சமீபத்தில் வெளிவந்த தேர்தல் முடிவுகளை விடவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது +2 பொதுத் தேர்வு முடிவுகள்.. எத்தனை பேர் முதலிடம், எத்தனை பேர் இரண்டாவது இடம்.. மூன்றாவது இடம்.. எந்தெந்தப் பாடங்களில் எத்தனை பேர் 200/200? மாணவர்களின், பள்ளி நிர்வாகிகளின் பேட்டிகளால் பத்திரிகைகள் நிரம்பி வழிந்தன.. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி, சிலர் வங்கி, கூட்டுறவுத்துறையில் மேலாளர்கள், சிலர் தனியார் நிறுவன மேலாளர், ஆடிட்டர்.. அதே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப்பள்ளிகளில், மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசுப்பள்ளி மாணவி சரண்யாவிற்கு (1179 மதிப்பெண்கள் ) தந்தை இல்லை.. அவரது தாயார் நிர்மலா ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.. இந்த வருமானத்தில் தான் குடும்பம் வாழ்கிறது.. மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்ற கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசுப் பள்ளி மாணவி சத்யாவின் ( 1178 மதிப்பெண்கள் ) தந்தை ஒரு கட்டிடத் தொழிலாளி.. அம்மா, அப்பா இருவரும் பள்ளிக்கூடமே போகாதவர்கள்.. மூன்றாவது இடம் பெற்ற காஞ்சிப...

அனைவருக்கும் வேண்டும் தரமான கல்வி....!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தமிழகக் கல்வித்தர மேம்பாட்டிற்கான கோரிக்கைகள் தொகுக்கப்பட்டன.. அக்கோரிக்கைகள் அடங்கிய பிரசுரம் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.. அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ள வேண்டியல் பட்டியல்.. இதோ உங்கள் முன்..:   தமிழ்நாடு மீண்டும் ஒரு ஜனநாயகத் திருவிழாவைச் சந்திக்க இருக்கும் சூழல்.. அறிவொளி இயக்க காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டின் கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டு உத்திகள், கல்வித் திட்டங்கள், ஆசிரியர்கள் அறம்சார் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கீழ்க்காணும் கல்விசார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கிறது...   தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து முற்றிலும் அரசின் செலவிலும் பொறுப்பிலுமான பொதுப் பள்ளி முறையை, உண்மையான சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதே புதிய அரசின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்..  அரசுப்பள்ளியில், தாய்மொழிவழிக்கல்வியில் பயின்ற மாணவர்களுக்கே அரசு உயர்கல்வி நி...

அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை சாத்தியமா?

Image
சமீபத்தில் தேனீ கலை இலக்கிய மையம் மற்றும் திண்ணை மனித வள மேம்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆனந்த விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி அவர்களின் நூலான கற்க கசடற: விற்க அதற்குத் தக என்ற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. அந்நூல் குறித்து கருத்துரையாற்றும் வாய்ப்பினை எனக்கு வழங்கினர் நண்பர்கள். நடைபெற்ற இடம் பயிற்சி மையம் என்பதால் பங்கேற்பாளர்களில் அநேகம் பேர் தகுதித் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள்.. அவர்களிடம் இந்த நூலிற்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என வினவியபோது கனத்த மௌனமே நிலவியது. தொடர்பில்லை என ஆங்காங்கே சில தலைகள் ஆடியதையும் பார்க்க முடிந்தது. பயிற்சி மையம் பிடித்திருக்கிறதா? பயிற்சியாளர்கள் மீது மதிப்பு மரியாதை இருக்கிறதா? என்று நான் கேட்டேன்.... உடனே பலரும் ஆமாம் ஆமாம் என்றனர். சரி, அடுத்த ஆண்டும் இதே பயிற்சி மையத்திற்கு வர விரும்புபவர்கள் எத்தனை பேர் என்றேன்.. அதெப்படி சார் வருவோம்.. நாங்க வேலைக்குப் போக வேண்டாமா? என்றனர். தமிழக அரசு நாளைய தினமே ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் அரசுப்பள்ளிகளில் எவ...

தேய்ந்து வரும் அரசுப்பள்ளிகள்

Image
நண்பர்கள் பலரிடம் பேசும்போதும் சரி, சில கூட்டங்களில் விவாதிக்கும் போதும் சரி.. அரசுப்பள்ளிகளில் சரிந்துவரும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து பேசினால் அப்பிரச்சனையை நாம் மிகைப்படுத்திப் பேசுவதாகவே சிலர் கூறக்கேட்டிருக்கிறேன்.. அந்த வகையில் நமது புரிதலுக்காக சில தகவல்கள்… அனைவருக்கும் கல்வி இயக்க இணையதளத்தில் தமிழ்நாட்டின் மொத்தம் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை, நிர்வாக வாரியாக அப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் எண்ணிக்கை பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.. ( Source:  http://ssa.tn.nic.in/ Statistics.htm )  தமிழகத்தில் உள்ள முப்பது மாவட்டங்களிலும் சேர்த்து 37141 அரசுப்பள்ளிகள், 8409 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11642 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 57192 பள்ளிகள் உள்ளன.. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிகபட்சமாக 80%க்கும் மேல் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன.. திருநெல்வேலி. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்களில் 50%க்கும் குறைவான அரசுப்பள்ளிகள் தான் இருக்கின்றன.. தலைந...

நூல் அறிமுகம்: என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா- ச.மாடசாமி

Image
ஆசிரியர்: பயந்த குடிமக்களை விரும்பும் பயந்த சர்வாதிகாரி.... கடந்த நவம்பர் 1 அன்று அதிகாலை 4 மணி இருக்கும்.. புதுக்கோட்டையில் நடைபெறும் அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழுவில் கலந்துகொள்வதற்கு கம்பம் பேருந்து நிலையம் வந்து விட்டேன். உடன் வர வேண்டிய நண்பர் வந்து சேர கொஞ்சம் தாமதம்.. வரும் வரை எதையாவது வாசிப்போம் என்று வாங்கி வைத்திருந்த ஆனந்த விகடனை எடுத்தேன்.. அதில் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் நேர்காணல்.. ஆர்வம் தொற்றிக்கொள்ள அவசர அவசரமாய்ப் படித்து முடித்தேன்.. அதுக்கு என்ன இப்போ.. அப்படிங்கிறீங்களா? அதிலிருந்த ஒரு தகவல் அப்படி.. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் தாயார் இறந்த அன்று உடனிருந்த நண்பர்களுக்கு ஒரு கதை சொன்னாராம்.. அது ஆண்டன் செகாவ் எழுதிய “ஆறாவது வார்டு” எனும் கதை. மனநோயாளிகளைப் பற்றிய கதை அது. “நமது இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆறாவது வார்டாக, மனநோயாளிகளின் கூடாரமாக இருப்பதால் தான் அந்தக் கதையை என் மனம் தேர்வு செய்திருக்கிறது ” என்கிறார் பி.கே. பேரா.ச.மாடசாமியின் என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா கட்டுரைத் தொகுப்பு நூலினை வாசிக்கும்போதும் இந்த மனநோய...