Posts

ஓங்கூட்டு டூணா _வாசிப்பு அனுபவம் : அருந்ததி

தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ஓங்கூட்டு டூணா _ புத்தகத்தை நானும் வாசித்தேன். அதுவும் இரண்டு முறை...! எனை வெகுவாக கவர்ந்த எழுத்து நடை... இதே விடயத்தை இன்னொருவர் இதே போல எழுத முடியுமா என தெரியவில்லை. இது அவருக்கே உரிய தனி நடை.. புத்தகத்தை படித்தபோது...  சிரித்த சிரிப்பிற்கு அளவே இல்லை.  அப்படி ஒரு நகைச்சுவை. ஆமாம், நானும் 20 ஆண்டுகள் தொடக்கப் பள்ளி ஆசிரியை தான்... அரை மணி நேரத்தில் விறுவிறுப்பாக வாசிக்கலாம். 'இயலாதென்று முயலாதவர்கள்... இறக்கை இருந்தும் பறப்பது இல்லை' ஆம்... மாற்று சிந்தனையுடன் புத்தகம் படைத்து... இதை பறை சாற்றி இருக்கிறார் ஆசிரியர்.. குழந்தைகளின் அனுபவங்கள் சார்ந்த வரிகளிலும் வகுப்பறையை தாண்டி... நாம் மண்வாசனையை கவனிக்கலாம்.' எழுத முனைகையில் தான்... எழுத்தாளர் அருமை தெரிகிறது. அப்படி ஒரு அருமையான எழுத்தில்...  தாங்கள் மனதை கவர்கிறீர்கள். வாழ்க.. வளர்க...💐 அன்புடன் தோழமை அருந்ததி ஆசிரியை, தேனி

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : தேனி சீருடையான்

குழந்தைகளே நடித்து குழந்தைகளே இயக்கும் கலைக் காவியம்...! “உனக்குத் தெரியும்; ஒரு குழந்தை ஒரு வார்த்தையைச் சொல்லும்போது அது உனக்குத் தெரியும் என்ற உண்மை உனக்குப் புரியும்.”  நான் ஆறாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்தும் லண்டனில் இருந்தும் வெளிவந்த பிரெய்லி புத்தகங்களை வாங்கி வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவற்றில் குழந்தைகளுக்கான பருவ ஏடு ”சில்ட்ரன்ஸ் ஃப்ரண்ட்” முகப்பு அட்டையில் மேற்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். (you know that truth when a child says it in her language.) ஒரு குழந்தை அனுதினமும் பேசும் மொழிதான் என்றாலும் அது புதிய திசையில் இருந்து புறப்பட்டு புதிய இலக்கு நோக்கிப் பயணிப்பதை உணர முடிகிறது. நம் முகத்தை நாமே பார்த்துக் கொள்வது போல நமக்கே ஆச்சர்யமாய் இருக்கிறது. அனுதினமும் கண்டு கேட்டவை என்றாலும் ஓர் குழந்தை நல விரும்பியால்தான் அதை ஆவணப் படுத்த முடிகிறது.. தேனிசுந்தர் அதைச் செய்திருக்கிறார். “குழந்தை இயலின் ஆவணக் காப்பகம் தேனிசுந்தர்” என்றால் அது மிகையல்ல. ஏற்கனவே குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள் எழுதி அதை நிரூபித்திருக்கிறார். அவற்றின் ப...

சீமையில் இல்லாத புத்தகம் - வாசிப்பு அனுபவம் : கண்ணன்

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர்  தோழர் கண்ணன் அவர்களின் முகநூல் பின்னூட்டம்... சுந்தர் தோழர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. மேலும் பல புத்தகங்கள் தங்கள் மூலம் வரவும் பல பரிசுகள், பட்டங்களை பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..  தங்களின் சீமையில்லா புத்தகத்தை இன்று (7.4.2023) டெல்லி ஏப்.5 போராட்டத்திற்கு சென்று விட்டு ரயில் பயணத்தில் படித்தேன்.. எனது பேத்தி துளிர்விகா என்னிடம் கைபேசியில் தனது மழலை மொழியில் "த்தா சப்டியா?" என கேட்டு அசத்தியதை போல, உங்கள் குழந்தைகள் பேச்சு மழலை மொழி.. தமிழ் வார்த்தைகளை படிக்க படிக்க மிக சோர்வை கூட எனது மூளை தாங்கிக் கொண்டு புத்துணர்ச்சியுடன் படித்து முடித்து விட்டேன் தோழர்.. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழர்.. - கண்ணன் 

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம் : ராஜசேகரன், ஆசிரியர்

வணக்கம் தோழர்.... படிச்சுட்டேன்.. உங்க டுஜக் டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா - இந்த ரெண்டு புஷ்தகத்த படிச்சுட்டேன்.. கீத்தி,புலல்,ஷர்வீன், டார்வின், அபி, அனிருத்,அஜீஸ், யோகா,கலெக்டர் பவுனியா, திவ்யேஷ், பூவினி, சகானா, சிவாணி, யாஷனா, வெனிதாஸ்ரீ தஙக்ச்சி வித்யா, ஜீவனேஷ், சுபிக்ஷா, யோகஸ்ரீ , நந்துசேனா, அம்ரிதா மோடி, ரக்சித், மயூரி, மஞ்சுளா, கவிஸ், ஊமைகுசும்பன் பூங்கதிர், வித்யா, பாரதிராஜா, ரஜினி - இத்துணை காதாபாத்திரங்களை கண்முன் நிறுத்தி... வகுப்பறையிலும் வீட்டிலும், குட்டி குட்டி குழந்தைகளுடன் வாழும் உள்ளம்... எல்லாருடைய வீட்டிலும், வகுப்பறையிலும், நடக்கும் எதார்த்த உரைகளை சற்றே இல்லை இல்லை .. ஆழமாக சிந்திக்க தூண்டும் வகையில் எழுதி இருக்கீங்க.. அரிய பொக்கிஷம் ..‌‌.! டுஜக்.. டுஜக் மற்றும் ஓங்கட்டு டூணா... நூல்களில் குழந்தைகளின் மழலைகளின் சொற்களை கொண்டாடியுள்ளீர்கள்.... சிறப்பு சார்... 👍👍👍 - இராஜசேகரன், ஆசிரியர், தி.கூடலூர்

ஓங்கூட்டு டூணா - வாசிப்பு அனுபவம்.. : பிரதீபா

வணக்கம் சார், உங்களது "ஓங்கூட்டு டூணா"- நூலைப் படித்த போது ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்ற ஆசை வந்து விட்டது எனக்குள்... நான் சந்தித்த, கடந்து வந்த ஆண் ஆசிரியர்களுள் வேறுபட்டவர் நீங்கள்.. ஆமாம் சார், தாயுள்ளம் கொண்ட தாயுமானவனாய் உணர்கிறேன் யோகா பாப்பாவின் உணர்வுகளை மதிக்கும் அந்தப் பதிவை வாசிக்கும் பொழுது..! ஜனநாயக வகுப்பறை என்பதை வெறும் வாய் வார்த்தையோடு நிறுத்தி விடாமல் செயலில் காண்பித்து உள்ளீர்கள்.. நூலின் ஒவ்வொரு பக்கமும் ரசிக்க வைக்கிறது சார், வாழ்த்துகள்.. உங்கள் வகுப்பறையை கண் முன்னே கொண்டு வந்து காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்.. பேரானந்தமாய் உணர்கிறேன். குரங்கை கரையில் சேர்க்கும் பவன்யா, எண்கள் படிக்கும் வித்யா,ஆங்கில வகுப்பில் சுபிக்சாவின் தன்னம்பிக்கையான வார்த்தை வரை பாடப்பொருள் அறிமுகத்திலும் ஜனநாயகமே... மாணவர்கள் உங்களை தன் தந்தையைப் போல் பாவித்து உள்ளார்கள், நீங்களும் அவர்களை உங்கள் குழந்தையைப் போல் பாவித்து உள்ளீர்கள் என்பதற்கு உங்கள் எழுத்தே சாட்சி.. வாசிக்கத் தொடங்கி, கடைசி பக்கத்தை முடிக்கும் வரை சிரித்துக் கொண்டே இருந்தேன்.. இப்படி ஒர...

ஓங்கூட்டு டூணா.! - வாசிப்பு அனுபவம் : மதுரை அமுதா செல்வி

தோழர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ஓங்கூட்டு டூணா..!  நூலை வாசித்து முடித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டது. படிக்கும் அத்தனை புத்தகங்களை குறித்த வாசிப்பு அனுபவங்களை எழுத வேண்டும் என்ற பேராசை மனதில் எழுந்து கொண்டே இருந்தாலும் சூழல் காரணமாக டைரியில் குறிப்பெடுக்கும் கிறுக்கல்களுடன் மட்டுமே நின்று போகின்றது. அதையும் மீறி இந்த புத்தகம் தரும் வாசிப்பு அனுபவத்தை நாலு பேருக்கு சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆவல் சில நேரங்களில் வலுக்கட்டாயமாக என்னை எழுத உந்தித் தள்ளுகிறது அப்படிப்பட்ட உந்துதலின் காரணமாகவே இதை எழுத தொடங்கினேன் ஒரே மூச்சில் எழுத முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதிய அனுபவம் வித்தியாசமானது. காத்திருக்கும் கனப்பொழுதுகளில் கூட 4 வரி எழுதிவிட்டு பயணத்தை தொடரும் போது நான் எந்த ரோட்டில் பயணம் செய்தாலும் என் நினைவுக்குள் அந்த குழந்தைகளின் குறும்புகளே நிரம்பி வழிந்தது . மாதங்களை கடந்த பிறகும் மனதை விட்டு இறங்கிச் செல்ல மறுக்கும் அந்த குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அவர்களின் உலகில் வாழ எத்தனை பேருக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. குழந்தைகளோடு பணியாற்ற...

எதிர்பாராத பரிசு - வாசிப்பு அனுபவம் : பா. கெஜலட்சுமி

டுஜக் டுஜக் நூல் முற்றிலும் மாறுபட்ட வகைமையில் குழந்தைகளின் கற்றலை, கற்பனை ஆற்றலை, அவர்தம் ஆழ அகலத்தை, வெகுளித்தனத்தை, படைப்புத் திறனை, எதையும் ரசித்து ஒன்றிவிடும் மனநிலையை, வெறுப்பை சுமக்காத மனநிலையை அவர்தம் மழலை மொழியிலே புத்தகமாக பதிவு செய்திருக்கிறது. ஒரு தந்தையாக குழந்தைகளின் குறும்புகளை ரசித்து கடந்து விடாமல் அதை தினந்தோறும் குறிப்புகளாக முகநூலிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்ததோடு தொகுத்து நூலாகவும் படைத்திருக்கிறார். அந்நூலை வாசித்த உடனேயே பல வாசகர்கள் முகநூலிலும், தம் வலைதளப் பக்கங்களிலும் குறைந்தகால இடைவெளியிலேயே விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர் கமலாலயன் முன்னுரையோடு, தமிழ்செல்வன் உள்பட பல ஆளுமைகளும் மற்றும் பல்வேறு பணிகளிலிருக்கும் பொதுதள வாசகர்களின் நூறு விமர்சனங்களைத் தேர்ந்தெடுத்து, அதிலும் பக்க அளவைக் கருதி முக்கிய பகுதிகளை மட்டும் தொகுத்திருப்பதில், என் விமர்சனமும் பதிவாகியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆசிரியர், எதிர்பாராத பரிசாக கருதியதால், இத்தலைப்பிட்டு உள்ளமை, பல புதிய வாசகர்களுக்கும் நூல் வடிவில் தங்கள் எழுத்தை காணும் பேறு 'எதிர்பாராத பரிசாக...