Posts

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் நூலறிமுகம் : புத்தகம் பேசுது இதழில் பேரா.மோகனா அவர்கள்

Image
  கட்டுரையை வாசிப்பதற்கான லிங்க்.. ‘வாசிப்பு வித்தாக மனதில் விழும்.. மலராக உலகுள் முகிழ்க்கும்..’ வணக்கம் நண்பர்களே! தேனி சுந்தர், அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தவர் கல்விக் குழுவில் இருந்து பணியாற்றியவர். புது விழுதின் ஆசிரியராக இருந்தவர். இப்போது, ஆசிரியர்களின் கருத்துகளை பதிவிடும், குரல்களை ஒலிக்கும் ‘புதிய ஆசிரியன்’ மாத இதழின் துணை ஆசிரியர்.; கல்வியாளர்; பள்ளிக் குழந்தைகளின் சொந்தக்காரர்;.மாணவர்கள் நலனில் பெரிதும் அக்கறை உள்ளவர்.;கல்வி சார்பாக கருத்துகளை, குரலொலியை தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’, ‘புதிய ஆசிரியன்’ மற்றும் ‘வண்ணக் கதிர்’ உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வருபவர். பணியிடமும் வசிப்பிடமும் கம்பம் தான். அவருடைய புத்தகங்கள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகள் கொண்டவைதான். யாராவது ‘டுஜக் டுஜக்’ என்று ஒரு புத்தகத்திற்கு பெயர் வைப்பார்களா! துணிந்து வைத்திருக்கிறார்.. அந்தப் புத்தகமும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த புத்தகம் ‘சீமையில் இல்லாத புத்தகம்’ என்னடா இப்படி ஒரு பேரு என்று நினைத்து எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.. அடுத்து ...

மாணவர் மனசு நூல் குறித்து முல்லை தெய்வேந்திரன் வாசிப்பு அனுபவம்

Image
குழந்தைகளின் அகவுலகை நாம் புரிந்து கொள்வதன் மூலம் நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண இயலும்.. -  ஆலிசன் கோப்னிக்..   மாணவர் மனசு  நூல் குழந்தைகளை அவர்களின் அக உலகத்தை நெருங்கி நின்று தரிசிக்க நல்ல வாய்ப்பு. தேனி சுந்தர் ஜனநாயக வகுப்பறையை பெயரளவில் இல்லாமல் நடைமுறையிலும் நடத்தி வருகிறார். குழந்தைகளின் உரையாடல்களும் அவர்களை உற்சாகப்படுத்த வகுப்பறையில் தன்னை புதுப்பிக்க சுந்தர் எடுக்கும் முயற்சிகளும் மிகவும் அருமை.  தனது வகுப்பறைக்கு தேவையான கற்பித்தல் உத்திகளை தேர்வு செய்து குழந்தைகளை ஆச்சரியப்படுத்துவது கற்பித்தலில் புதுமையை நிகழ்த்த தொடர்ந்து முயல்வது நம் பள்ளிகளில் நடைபெற வேண்டிய அடிப்படை மாற்றங்களில் ஒன்று. உதாரணமாக டும் டும் டும் கட்டுரை. கதையாக தொடங்கி, பாடலாக மாறி எல்லோரும் இணைந்து செய்கிற ஒரு செயல்பாடாகவும் மாறியதை ஆசிரியர் உணரும் தருணம் அற்புதம். குழந்தைகள் முன் தங்கள் ஒளியை ஆசிரியர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்  என்பார் பேராசிரியர் மாடசாமி அவர்கள்..  சுந்தர் அதை தன் வகுப்பறையில் நிகழ்த்துகிறார். "சார் பயந்துட்டாரு" கட்டுரை அதற்கு ஒரு உதாரணம...

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து புதிய ஆசிரியன் இதழில்

Image
நன்றி : புதிய ஆசிரியன்  

பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்! : உங்க ஜட்ஜ்மெண்ட் ரெம்பத் தப்பு சார் நூல் குறித்து தேனி சீருடையான் அவர்கள்

Image
பழமையை எதிர்க்கும் புதிய சிந்தனைகள்! கஸ்தூரி ரெங்கன் கமிட்டி தயாரித்த தேசியக் கல்விக் கொள்கை வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துவிட்ட்டது. குழந்தைமைப் பருவத்தின் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிக்கை வரையறுத்துள்ள சில கோட்பாடுகள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்பதை சாதாரண வாசகன் கூட புரிந்துகொள்ள முடியும். ஆறு வயதுக்குள் குழந்தைகள் 85 விழுக்காடு மூளைவளர்ச்சி பெறுகிறார்கள் (பக்கம் 19) என்று கண்டுபிடித்திருக்கிறது அறிக்கை. இது இயற்கையியல் பரிமாணக் கோட்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. எந்த அறிவியல் ஞானத்தின் வழியாக இந்த “உண்மை” கண்டுபிடிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை ஆரியக் குழந்தைகள் அந்த இலக்கை எட்டி இருக்க முடியும். அதுவும் கூட முழுமையானது அல்ல. ஏனென்றால் குருகுலக் கல்வி கற்பிக்கப் பட்ட காலத்திலேயே ஒரேவிதமான ஞானத்தைப் பெற்றார்கள் என்று சொல்ல முடியாது என்பதற்கான சில கிராமியக் கதைகள் உண்டு. வாழ்வியல் சூழலும் அனுபவமும்தான் மூளைவளர்ச்சிக்கான கிரியா ஊக்கிகள். இதை கல்வியாளர் தேனிசுந்தர் இந்தப் புத்தகத்தில் மி...

திட்டமிடாத வகுப்பறைகள் குறித்து கவிஞர் விஜயராஜ் காந்தி

Image
மாணவர் மைய வகுப்பறை என்பது பல நேரங்களில் திட்டமிடாத ஒரு வகுப்பறை எப்படி இருக்குமோ அதை கண் முன் கொண்டு வந்து சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு வகுப்பறையை நாம் கண்டிருக்கலாம், கண்டும் காணாது சென்றிருக்கலாம், அல்லது காணாமலே விட்டு இருக்கலாம். இங்கு திட்டமிடாத வகுப்பறைகள் எப்படி இருக்கும் என்பதனை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் தேனி சுந்தர் அவர்கள். தான் முதலில் பணியாற்றிய பள்ளிகளில் உள்ளவற்றை தவிர்த்து தற்பொழுது பணியாற்றும் பள்ளியில் எங்கனம் திட்டமிடாத வகுப்பறைகள் இருந்தன என்பதனை தேனி சுந்தர் எழுத்தில் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது. கலைப் பண்பாட்டுத் திருவிழா தொடக்கப் பள்ளியில் என்ன மாறலை உண்டு பண்ணும் என்ற கேள்வியை நடத்துவதற்கு முன் ஒவ்வொரு ஆசிரியரும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொள்வது உண்டு. அந்த கேள்விகளுக்கு பதிலாக சேட்டைகள் செய்யும் மாணவர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட ஒரு நல்வாய்ப்பாக கலைப் பண்பாட்டுத் திருவிழாவை பயன்படுத்தினர். இதனை திட்டமிடாத வகுப்பரையில் தான் காண முடியும். மாறுவேட போட்டி, பல குரல் போட்டி, காகித கூழ், களிமண் போன்றவற்றில் பொருட்களை செய்து கொண்டு வரும் போட...

நட்சத்திரக் குழந்தை நூல் குறித்து தருண்

Image
நட்சத்திரக் குழந்தை நூல் அறிமுகம்  

"உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்" : எம்.ஜே.பிரபாகர் அவர்களின் வாசிப்பு அனுபவம்..

Image
"சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு பிடிக்காத பாடம் கணக்கு" கணக்கு பாடம் படிக்கக்கூடாது என்ற நிலையில் பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல் பாடத்தை தேர்வு செய்தவர், பிளஸ் டூ முடித்தவுடன் ஆசிரியர் பணிக்கான பயிற்சியில் சேருகிறார். 19 வயதில் பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற தொடங்குகிறார். பயிலும் மாணவர்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் போது ஆசிரியருக்கு கடுகடுப்பும் கோபமும் ஏற்படுகிறது. அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட போது புதியபாதை தோன்றுகிறது. ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை, துவக்க நிலை வகுப்புகளில் கற்புக்கும் போது மிகவும் அன்புடன் கற்பிக்க வேண்டும் என்று என்பதை புரிந்து கொள்கிறார். அறிவியல் கருத்தரங்கில் கற்றுக்கொண்ட சிறு சிறு பயிற்சிகள் மூலம் கணக்குகளை மாணவர்களுக்கு எளிய வகையில் கற்பித்து புரிய வைக்கிறார். மாணவர்கள் கணக்கை புரிந்து கொண்டார்கள் என்பதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறார். கணக்கு பாடம் நடத்தும் போது மாணவர்களை ஒருபோதும் விரட்டுவதும், மிரட்டுவதில்லை என்ற முடிவுக்கு வருகிறார். தொடர்ந்து மாணவர்களுக்கு கணக்கு பாடத்தை இனிக்கும் பாடமாக மாற்றுகிறார். அவரது அனுபவத்தை மற்றவர்களுக...