Posts

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் : நூல் வாசிப்பு அனுபவம் : ஆசிரியர் ஐ.சுமதி

Image
புத்தகத்தின் அட்டை படத்தையும் தலைப்பையும் பார்க்கும் போது உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்..  நூல்   ரொம்ப polite மாதிரி தான் தெரியும்.. ஆனா அப்படி இல்ல... நம்முடைய அந்த ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு.. கட்டுரைகள்  எல்லாமே ரௌத்திரம்..! உனக்குரிய இடம் எங்கே?,  விடுங்க சார்.. திட்டாதீங்க சார்.. படிக்க வைக்கவா? எதார்த்தத்தை விவாதிக்க வைக்கவா?, மாணவர்கள் எதை தெரிந்து கொள்ளணும் ?,  கைய கட்டு ..வாய பொத்து ..,  கேள்வியா கேட்கிற கேள்வி?, எவ்வளவு தைரியம் பாஸ் உங்களுக்கு ? - இப்படியான இந்நூல் 25 கட்டுரைகளின் தொகுப்பு.  தலைப்புகளில் பல கேள்விகள்... இந்த கேள்விகளில் மாணவன் ஆசிரியரை நோக்கி கேட்கும் கேள்விகள் மட்டுமல்ல,  ஆசிரியர் அதிகாரியை நோக்கி கேட்கும் கேள்விகளும் அடங்கும்.. கணக்கும் இனிக்கும் என்ற கட்டுரையில் கணக்கு ஆசிரியர் என்றாலே " ஏன் கோபம்? சிடுசிடுப்பு? சிரிச்சா என்ன? (கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போய் பார்த்தால் நம் கணித ஆசிரியர் எல்லாருமே கொஞ்சம் உர்ன்னு தான் இருந்துருக்காங்க🤔) "சிரிக்கத் தெரியாத மனிதர்களைப் பார்த்தால் சிரிக்க தோன்றும் எனக்கு " என்கிற கவிஞர்...

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
ஆசிரியருடைய மொழி நடை சிறப்பாக பேசப்படும் அளவுக்கு நகைச்சுவை நிறைந்தது. 16 தலைப்புகளில் ஆசிரியரின் அனுபவங்களை இந்நூலில் தொகுத்துள்ளார். பால்வாடி பிள்ளைகளை நேரில் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் "குது குதுன்னு காய்ச்சல் அடிச்சு கம்பம் ஆஸ்பத்திரியில் ஊசி போட்டது... பால்வாடி சித்திக், "சார், அப்படியே ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு.. அப்படியே  விளையாடிட்டு.. சோறு சாப்பிட்டுட்டு... அப்படியே அம்மா வந்துடும்ல.. அப்படியே வீட்டுக்கு போய்டலாம்ல?” என்ற ஒரே கேள்வியை விடாமல் 5 நிமிடம் இடைவெளியில் மீண்டும் மீண்டும் கேட்பதும்,  ஒரு கட்டத்தில், “என்னால் முடியலடா சித்திக்... அப்புறம்  நா அழுதுருவேன்...!” என்று சார் சொல்வதும், “எங்க சார்.... கொஞ்சம் அழுங்க சார் ? எப்படி இருக்கீங்கன்னு பார்ப்போம்? ” என்று ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கூறுவதும்...  பே....என்று கூறி ஆசிரியரை பயமுறுத்துவதும்.. ஹா ஹா ஹா ஹா என சத்தமா சிரிங்க சார் என்று கெஞ்சுவதும் (கொஞ்சுவதும்) அழகு. புதிய கழிவறை ஜன்னலை உடைத்து,  உள்ளே சென்று மலம் கழித்த மாணவர்களை கண்டுபிடிக்க பெயர் பட்டியல் தயாரிக்கவும்... வீடு வீடா...

திட்டமிடாத வகுப்பறைகள் வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
ஒரு வகுப்பறைக்குள் ஆசிரியர் எப்படி திட்டமிடாமல் செல்ல முடியும் ? பிளான் ஏ /பி/ சி என குறைந்தது மூன்றாவது இருந்தால் தான் ஒரு நாளை திறம்பட கொண்டு செல்ல முடியும். திட்டமிடாத வகுப்பறையை எப்படி திட்டமிடுவது? என்ற கேள்வியோடு வாசித்த புத்தகம். தேனி சுந்தர் எனும் இடைநிலை ஆசிரியரால் எழுதப்பட்ட புத்தகம். தேனினும்  இனிய வகுப்பறை செயல்பாடுகளால் (அனுபவங்களால்) நிரம்பி உள்ளது. திட்டமிடாத வகுப்பறையில் மாணவர்கள் விளையாடுகிறார்கள், விளையாட்டில் ஆசிரியரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் கற்றும் கொடுக்கிறார்கள். இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது ஒட்டிக் கொள்ளும் புன்னகை... புத்தகத்தை முடிக்கும் வரை மறையாது அதிகரிக்கும்...!   புத்தகத்தில் வரும் மாணவர்கள் அனைவரும் கவிதைகளே ! களிமண் கொடுத்து உருவம் செய்து வரச் சொன்னால் அணுகுண்டு செய்து வந்த பால்வாடி மிதுன்...அந்த அணுகுண்டில் இரு இலைகளுடன் கூடிய ஒரு காம்பை செறுகி, அதை  குட்டி செடியாக்கிய மயூரி ... கலைத் திருவிழாவில் பல குரல் போட்டியில் எல்லோரும் நாய் பூனை ஆடு என குரல் எழுப்பும்போது, சதீஷ் என்றாலே சேட்டை என...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் நூல் குறித்து புதிய ஆசிரியன் இதழில்

Image
 

மாணவர் மனசு நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்...

Image
வகுப்பறையில் மாணவர்களுடன் ஏற்படும் அனுபவங்களையும் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் வித்தியாசமான முறைகளையும் சுவாரசியமான படைப்பாக்கி உள்ளார் இந்நூலாசிரியர். நூலில் உள்ள கட்டுரைகள் சலிப்பைத் தராமல், கதையாகவே எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு ஆசிரியருமே இப்படியான முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனத் தோன்ற வைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மழலை மொழியை மழலையாகவே உணர்ந்து எழுதியிருப்பது நூலுக்கு வலுச் சேர்க்கிறது. - பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வெளிவரும் “ கனவு ஆசிரியர்”  மாத இதழ்,   ஜூன் 202 5

ஒரு புதிய ஆசிரியனின் எழுத்து: "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." நூல் குறித்து எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன்

Image
சுந்தரின் பத்தாவது நூலை வாசிக்கிறேன். வழக்கம் போல தலைப்பிலேயே ஜொலிக்கிறார் சுந்தர். "உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பு சார்..." பேச்சு வாக்கில் இருக்கிறது தலைப்பு. சின்னப் பையன் ரேப்பரில் சிலேட்டோடு நிற்கிறான். அவன் முழியே அர்த்தம் சேர்க்கிறது. அவன் கேள்வி கேட்கும் பையன்; பகடி செய்யும் பையன். வாத்தியாரை, பள்ளிக் கூடத்தை, அதிகாரத்தை, சமூகத்தை, அரசை என யாரையும் விட்டுவைக்கவில்லை. அப்படியொரு பையனாகவும் ஆசிரியராகவும் அமைப்பாளராகவும் இருந்து வந்த சுந்தர் எழுதிய நூல் இது. இதுவரையிலான சுந்தரின் புத்தகங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வீடு- மகன், மகளோடு ஒரு அப்பாவாக சுந்தர் உரையாடியவை. இரண்டாவது பள்ளிக்கூடம் - மாணவர்களோடு ஒரு ஆசிரியராக சுந்தரின் அனுபவங்கள். இந்த நூலும் இரண்டாம் வகைதான். ஆனால் வகுப்பறையோடு நிற்கவில்லை. அதற்கு வெளியிலும் இயங்குகிறது. ஒரு கலவையான அனுபவத்தைத் தருகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடத்தை களமாகக் கொண்டு சில கட்டுரைகள் இருக்கின்றன. இதுவரை நான் எழுத்தில் வாசிக்காத பகுதியிது. பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி வந்து நிற்கும் ஓர் ஆசிரியரை போய் சாகச் சொல்கிறா...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் - நூல் குறித்து மதுரை அமுதா செல்வி, எழுத்தாளர்

Image
தோழர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் என்ற கட்டுரை தொகுப்பு மொத்தம் 25 கல்விசார் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும் குழந்தைகளுக்காக பேசும் தேனி சுந்தர் அவர்களை வளர்ந்த குழந்தையாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் குழந்தையின் வலியை அவர்களின் தேவையை அவர்களைத் தவிர வேறு யாரும் கச்சிதமாக எடுத்துச் சொல்ல முடியாது என்ற கருத்தியலில் மிகுந்த நம்பிக்கை உடையவள் நான்.  இந்த ஒட்டுமொத்த கட்டுரை தொகுப்பில் அவர் குழந்தைகளுக்காக மிக வீரியத்துடனும் கூர்மையுடனும் கேள்விகளை முன் வைக்கிறார். மாணவர்களை தோல்வியுறச் செய்யும் ஆசிரிய மனோபாவத்தை மிக நேர்மையாக பதிவு செய்கிறார். இவனுக்கு எங்க வகுப்பறையில் ஒரு இன்ச் இடம் கூட யாரும் தரவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு வாசிப்போரையும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை குறித்து அவர் பேசியது மிக சிறப்பு. ஆசிரியர்கள் புரிந்து கொண்ட நிலையில் இருந்து குழந்தைகளுக்கு கற்பிக்காமல் குழந்தைகள் ஒரு கணக்கையோ கருத்தையோ எவ்வாறு புரிந்து கொள்கிறார்களோ அந்த புரிதல் நிலை...