Posts

கட்டாயத் தேர்ச்சி : 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடுகளின் அடிப்படையில் ஒரு பார்வை..

Image
இந்தியா முழுவதும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.. இச்சட்டம் குழந்தைகள் நலன் சார்ந்து பல அம்சங்களை வலியுறுத்தியது.  அதில் குறிப்பிடத் தக்கவை கட்டாயத் தேர்ச்சி, வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்தல், கல்வி ஆண்டு முழுவது மாணவர் சேர்க்கை, உடல், மன ரீதியான தண்டனைகளுக்கு தடை, சிறப்பு / தனி வகுப்புகளுக்கு தடை, சேர்க்கைக்கு சான்றிதழ்களின்மை ஒரு தடையில்லை போன்றவை..  சட்டம் நடைமுறைக்கு வந்த இந்தப் பத்தாண்டுகளில் தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு என்பதைத் தவிர தனியார் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டிய பல அம்சங்களை நடைமுறைப்படுத்த அரசு போதிய முயற்சிகள் எடுத்ததாகவோ கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் போதிய வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகளை மூடியதாகவோ அல்லது குறைந்த பட்ச நடவடிக்கைகள் எடுத்ததாகவோ தெரியவில்லை.. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டாலும் அது ஏட்டளவிலான தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அளவிலேயே உள்ளன.  இந்தச் சூழ்நிலையில் தான் எந்த வித...

கட்டாயத் தேர்ச்சியும் கற்றல் அடைவுத் தேர்வுகளும்....

Image
தொடக்கக் கல்வியில் அதாவது 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களது கற்றல் அடைவினைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் மாநிலம் முழுவதும் ஒரு பள்ளி / ஒரு வகுப்பு / ஒரு மாணவர் கூட விடுபடாமல் கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு கல்வி ஆண்டுத் துவக்கத்திலும் முதல் ஆய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டு இறுதியிலும் மீளாய்வு அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.  இந்த ஆய்வில் முதல் வகுப்பு மாணவர்கள் அப்போது தான் பள்ளியில் சேர்ந்திருப்பார்கள் என்பதால் அவர்களை மட்டும் தவிர்த்து விட்டு 2ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவரது தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புத் திறன், எழுதுதல் திறன் சோதிக்கப்படுகிறது. கணிதத்தில் அந்தந்த வகுப்பிற்கேற்ற அளவில் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலில் எளிய கணக்குகளைச் செய்தல் மற்றும் கடின கணக்குகளைச் செய்தல் ஆகிய திறன்கள் சோதிக்கப்படுகின்றன.  இந்த ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட தகவல்கள் அடிப்படையில் மாணவர்கள் ஏ, பி, சி, டி என நான்கு தரங்களில் பிரிக்கப்படுகிறார்கள். உதாரணத...

கட்டாயத் தேர்ச்சியும் இடைநிற்றல் ஒழிப்பும்..

Image
இடைநிற்றலை ஒழித்துக் கட்டிய கட்டாயத் தேர்ச்சி முறை..  தமிழக அரசு கொள்கைக் குறிப்பில் பெருமிதம்…!! 6-14 வயது வரையிலான அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல், அவர்களில் இடைநிற்றலின்றி அனைவரையும் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சியடையச் செய்தல் ஆகியவற்றை தொடக்கக் கல்வியில் கொள்கை இலக்குகளாகக் கொண்டிருக்கிற தமிழக அரசு தான் மத்திய அரசின் அடியொற்றி இயங்கும் போக்கின் தொடர்ச்சியாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரும் முடிவை அமைச்சரவை கூடாமல், அரசாணை பிறப்பிக்காமல் அவசர அவசரமாக நடைமுறைக்குக் கொண்டு வரப் பார்த்தது. பரவலாக எழுந்த எதிர்ப்பு கண்டு முதலில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு இல்லை என்றும் அதனை அடுத்து இனிவரும் எந்த ஆண்டும் பொதுத் தேர்வு இல்லை என்றும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.  “2002 ஆம் ஆண்டில் 5.74 இலட்சமாக இருந்த இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 41,034 ஆக குறைக்கப்பட்டுள்ளது.” – (பக்கம் ,18)  “தொடக்க நிலை வகுப்புகளில் 2001ஆம் ஆண்டில் 12 விழுக்காடாக இருந்த இடைநிற்றல் விகிதம் 2016 ஆம் ஆண்டில் 0.90 விழுக்காடாகவ...

நூல் அறிமுகம் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய இந்திய நாத்திகம்

Image
இந்திய தேசம் ஒரு ஆன்மீக தேசம்.. இந்திய தத்துவ மரபே ஆன்மீக மரபு தான்.. அதற்கு எதிராகப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இந்திய மரபார்ந்த பாரம்பரிய, பண்பாட்டு, தத்துவ விரோதிகள் என்பது போல தான் சித்தரிக்கப்படுகிறது.. ஆனால் உண்மை அதுவல்ல. இந்திய தத்துவ மரபு நாத்திக மரபே என்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும் சிறப்பான ஆய்வுநூல் “இந்திய நாத்திகம்”.. புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களால் எழுதப்பட்டது. திரு.சாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதிபுத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.. இது தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் நூற்றாண்டுக் காலம்.. இவர் புகழ்பெற்ற தத்துவாசான்கள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா ஆகியோரிடம் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாணவராகப் பயின்றவர்.. அதேபோல டி.டி.கோசாம்பி, ரொமிலாதாபர் போன்ற அறிஞர்கள் வரிசையில் வைத்தெண்ணத்தக்க சிறப்புடையவர். மத்தியில் ஒரு மதவாத அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில் இவருடைய நூல்கள் அவசியம் வாசிக்கவும் பரவலாக கொண்டுசெல்லப்படவும் வேண்டியவை.. சோசலிசத்திற்கான இந்திய முயற்சி என்பது இந்திய தத்துவ மரபுக்கான போராட்டத்த...

ஜனநாயகமும் அறிவியல் பார்வையும் அடிநாதமாக இருக்க வேண்டும்..

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்ட மாற்றங்களுக்கான பணிகளை நினைக்கையில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்க முயற்சிகளையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை..  இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக கீழிருந்து மேலாக ஒரு கல்விக்கொள்கை உருவாக்கப்படுகிறது என்ற பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்டாலும் பாஸ் மார்க் வாங்கும் அளவிற்குக் கூட கருத்துக் கேட்பு நடத்தவில்லை.. ஒரு நாட்டின் கல்விக்கொள்கையை உருவாக்கும் பணியில் பெயரளவுக்குக் கூட கல்வியாளர்கள் பயன்படுத்தப்படவில்லை.. மாறாக தமிழகத்தில் புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் மாநிலம் முழுவதும் பரவலான கருத்துக் கேட்பு, அதற்கும் முன்னதாக இருந்தே கல்வியாளர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை என நல்லவிதமாகவே பணிகளைத் துவங்கி இப்போது பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டு கருத்துக் கேட்பிற்கு விடப்பட்டுள்ளது.. அதிலும் கூட பல்வேறு இடங்களில் நாட்டின் பன்முகத்தன்மை, சமயச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டே வருவதைப் பார்க்கும் போது நெஞ்சம் மகிழ்கிறது.. நிலைப்பாட்டுத்தாள் மற்றும் பல்வேறு பாடங்களுக்கான வர...

நமது கல்விமுறையில் அறிவியல் மனப்பாங்கிற்கும் அறிவியல் பார்வைக்கும் உரிய இடம் கொடுக்க வேண்டும் - பேரா.பொ.இராஜமாணிக்கம்

Image
முப்பது ஆண்டு கால அறிவியல் செயல்பாட்டாளர், ஏராளமான அறிவியல் பிரச்சாரக் கட்டுரைகள், நூல்கள் எழுதியவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். தற்போது அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பில் துணைத்தலைவராகச் செயல்பட்டு வருகிறார். பி.ஆர். என்று அனைவராலும் அறியப்பட்ட பேரா.பொ.இராஜமாணிக்கம் அவர்களுடன் நமது புதுவிழுது இதழுக்கான நேர்காணல்.. தேனி திண்ணை மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் தங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.. விழுது இதழின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னவிதமான பணிகளை அங்கீகரித்து விருது வழங்கப்பட்டது..? பாராட்டுதலுக்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அறிவியல் பிரச்சாரப் பணிகளுக்காக   அறிவியல் இயக்கத்தில் தொடர்ந்து இயங்கி வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் போது   அறிவியல் இயக்கத்தில்   சரியாக முப்பது வருடம் எனது   பயணம் முடிந்திருந்தது. ஆம், அக்.1987ல் அகில இந்திய அறிவியல் பயணம் வரும் பொழுது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் ஒருங்கிண...

உலகமயமாதல் கொள்கையை முழுமையாக நிராகரித்தால் தான் அனிதாக்களுக்கு கல்வியும் வேலையும் கிடைக்கும் – கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன்

Image
அமலில் உள்ள கல்வி உரிமைச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? அரசியல் உறுதியோடு கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. சரத்து 45, அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் பதிநான்கு வயதிற்கு உட்பட்டவர் அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்க அரசு முயல வேண்டும் என்று கூறியது. அதன்படி 1960 ஜனவரி 26க்குள் அவ்விலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால் 1990 ஆகியும் எட்டவில்லை. எனவே உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதனை அடிப்படை உரிமையென அறிவித்தது. ஆனால் அதற்கான அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணராது அரசு இருந்ததைக் கண்டு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் நாடு தழுவிய பல போராட்டங்களை நடத்தினார்கள். இனியும் தள்ளிப் போட முடியாதென்ற நிலையில் நகல் சட்டத் திருத்தம் அறிவிக்கப்பட்டது. ஐந்து முறை மாற்றப்பட்டு இறுதியாக 86-ஆம் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசு சட்டங்கள் மூலம் அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாயிற்று. முழு உரிமையல்ல.. அரசின் விருப்பத்திற்கிணங்க என்ற கட்டுப்பாடுகளுக்...