Posts

சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் : சீனி சந்திரசேகரன்

Image
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என கையொப்பமிட்டு நூலாசிரியரால் அனுப்பப்பட்ட புத்தகம்.  சிறிய கல்விக்கூடத்தை பற்றி பெரிய அளவில் பேசும் புத்தகம் இது நூலில் இருந்து.. பாடம் நடத்துச் செல்லும் பொழுது கோபத்தை வாசலில் நிற்க வைத்து விட்டு நீங்கள் மட்டும் வகுப்பறைக்குள்ளே செல்லுங்கள். நிறைய சிரிங்க! உடம்புக்கு நல்லது! உங்க மனசுக்கும் நல்லது. வலியவர்கள் ஆள்வதும் எளியவர்கள் அவர்களை அண்டிய அடங்கி இருப்பதும் தான் எதார்த்தம் என படமும் பாடமும் உணர்த்துகின்றனவா? ஒரு பக்கம் சமத்துவ சமூகம் என்ற தலைப்பில் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட பாடங்களை வைப்பதில் நியாயமா?  படம் எழுப்பும் கேள்வி. அடிக்கடி கேட்பதால் மட்டுமே அறதப்பழசான வார்த்தைகளாக நமக்கெல்லாம் இருக்கின்ற எண்ண்ம் எந்த அளவிற்கு தவறான ஒன்று என்பதை விளக்கும் மாணவர்கள் சொல்லும் புரியாத வார்த்தைகள்.. இன்றைய வகுப்பறை நெருக்கடிகளுக்கான மருந்து அரசாணை விதிமுறை தொகுப்பு நூல்களில் நிச்சயம் இல்லை. உங்களது சமஸ்தானத்தை ஆளுகின்ற அதிகாரிகளிடமும் இல்லை. கல்வியாளர்களிடம் இருக்கிறது. கல்வி சார்ந்த நூல்களில் இர...

உனக்குள் புதிய ஆசிரியன் - இந்து தமிழ் திசை நாளிதழ்

Image
ஒரு சின்ன பள்ளிக்கூடத்தில் வழக்கமாக வருவது போல அனுஸ்ரீ என்கிற குழந்தை அன்றும் பள்ளிக்கூடம் வந்திருக்கிறாள். தாமதமாக வந்ததற்கு ரெண்டு திட்டு திட்டிவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டேன். ஒரு விபத்தில் சிக்கி அனுஸ்ரீயின் அப்பாவும் தாத்தாவும் மருத்துவமனையில் இருக்கிற செய்தி நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது. காரணம் விலகல்.. ஆசிரியர் மாணவர் இடையே இடைவெளி... - இப்படியான தொடர் சுயபரிசோதனைக்குத் தன்னைத்தானே உட்படுத்திக் கொள்ளும் அரசுப் பள்ளி ஆசிரியர் தேனி சுந்தர். இவர் எழுதி பிரபல இதழ்களில் வெளியான கல்வி குறித்த கட்டுரைகளின் தொகுப்பு உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்.. தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் அனைத்துப் பரிமாணங்களையும் உற்றுக் கவனித்து பல்வேறு கோணங்களில் அலசும் இந்நூலை ஆசிரியர்கள் வாசித்தால், அவர்களும் புதிய ஆசிரியனாக உதித்தெழுவது திண்ணம்.. - இந்து தமிழ் திசை நாளிதழ் ஜன.13.2026

குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல் : சீனி சந்திரசேகரன்

Image
குழந்தைகள் உலகை பார்க்க நமக்குத் தெரியவில்லை. குழந்தைகளின் மனம் கவிமனம். எப்போதும் படைப்பூக்கம் துள்ளும் குழந்தைகள் மனதைப் படம் பிடித்து காட்டும் நூல். நூலிலிருந்து.. அறிந்தும் அறியாத பருவத்திலேயே இந்த சமூகம் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் குழந்தைகள் தலையில் திணிக்கிறது அதில் கடவுள் மதம் சாதி சடங்கு சம்பிரதாயம் மூட பழக்கங்கள் எல்லாம் அடங்கும். பேய் சாமி எல்லாமே சும்மாச்சும் தான் பாப்பா.. வீட்டுப்பாடம் தரும் அல்லலை புரிய வைக்கும் நிகழ்வு... அம்மாச்சி வீட்டுக்கு போய் எழுத போறேன்னு சொல்லி ஸ்லேடும் நோட்டும் எடுத்து ஒரு பையில  போட்டு கொண்டு போயிட்டாங்க இரண்டு மணி வாக்குல வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வந்துச்சு கட்டம் போட்டு  எழுதி இருந்தது எழுதியது அம்மா.. எழுதச் சொன்னது டீச்சரா நடிச்ச குழந்தை.. இத இத இத இதெல்லாம் எழுதிட்டு வந்துருங்க ஈஸியா சொல்றாங்க டீச்சர் எழுதற எங்களுக்கு தானே கையெல்லாம் வலிக்குது குழந்தை டார்வின் கவலை... குழந்தைகளை எப்படி அழைத்தாலும் அழகுதான் எனச் சொல்லும் எனக்கு நான்கு பெயர். வட்டக் கண்ணாடி போட்டவர் எல்லாம் குழந்தைகளுக்கு காந்தி தான். அதிகாரிகள் விசிட் வருவதைப் பற...

சுந்தரின் ஜட்ஜ்மெண்ட் ரொம்ப கரெக்ட்.... : கவிஞர் இதயநிலவன்

Image
வணக்கம் தோழர்களே, சரியான ஜட்ஜ்மெண்டில் எழுதப்பட்டிருக்கும் உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் என்கிற கட்டுரை நூல். முதலில் இந்த தலைப்பிற்குள் எழுத வேண்டும் என்று முடிவு செய்த தோழர் ஆசிரியர் தேனி சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .... தான் பணி செய்கிற துறையில் நிகழ்கிற செயல்பாடுகளை துணிச்சலான வார்த்தைகளோடு எழுதியிருக்கிறார் .... கல்வி என்பது இன்றைய காலகட்டத்தில் பணம் ஈட்டும் ஒரு ஏடிஎம் மிஷினை போல மாணவர்களை தயார் படுத்தும் அவல நிலை நிகழ்வதை ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டுரை தொகுதி சொல்லி முடிக்கிறது.. முதல் கட்டுரையில் தொடங்கி ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் அடிக்கோடிட்டு காட்டும் விடயங்கள் மாணவர்களுக்கு, மாணவர்களின் சிந்தனைக்கு, மாணவர்களின் வாழ்க்கை முறைக்கு மாணவர்களின் உடல் மற்றும் மனநிலையை இரண்டாம் பட்சமாக கருதும் ஒரு கல்விச் சூழல் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் தைரியமாக சொல்லிக் காட்டுகிறார். ஆசிரியர் பணி என்பது ஒரு அறப்பணி மட்டுமல்ல ஒரு பாதுகாப்பான பணி என்பதையும், நமக்கு இணையாக, அல்லது அதற்கும் மேல் ஆசிரியர் படிப்பை படித்துவிட்டு அன்றாடம் காட்சிகளாக இருக்கும் பல ...

மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை எளிதாக்குவது எளிதல்ல : பா.விமலா தேவி, ஆசிரியர்

Image
தமிழக அரசின் தொடக்கப்பள்ளி ஒன்றில் நுழைந்து சில பொழுதுகள் வாழ்ந்த நினைவு இந்த திட்டமிடாத வகுப்பறைகள். திட்டமிட்டு செயல்படுத்தப்படும் பாடத்திட்டம் , கால அட்டவணை , தேர்வு முறை என்பதை தாண்டி கண்டிப்பில்லாமல் ஒரு ஆசிரியர் அரவணைப்போடு குழந்தைகளை ஒரு சுதந்திரமான போக்கில் தன் முனைப்பில் அனுமதித்திருப்பதை ஒவ்வொரு பக்கங்களிலும் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஆசிரியரை தான் இன்று மாணவர்கள் விரும்புகிறார்கள். மாணவர்களின் போக்குக்கு ஆசிரியர் சென்றாலொழிய கற்பித்தலை மாணவர் வசம் எளிதாக்குவது எளிதல்ல. இங்கு ஆசிரியர் தேனி சுந்தர் அவர்கள் தன்னை ஒரு ஆசிரியராக பாவிக்காமல் மாணவனாகவே பாவித்து அவர்களோடு பல செயல்பாடுகளில் ஈடுபடுவதை பார்க்கும் பொழுது தொடக்கநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்படும் பெண் ஆசிரியர்களால் மட்டுமே செய்ய முடிந்த செயல்களை, ஆண்பால் ஆசிரியர்களும் செய்ய முடியும் என்பதை சாத்தியமாக்கி இருக்கிறார். மாநில பயிற்சியாளர் அவர்கள் புத்தகத்திற்கான அணிந்துரை வழங்கியிருப்பதில் “துணிச்சலுக்கு பாராட்டு” என்று இந்நூலின் ஆசிரியருக்கு வாழ்த்து கூறி பாராட்டி இருப்பதை போல, ஒரு ஆசிரியர் கற்றலை பாடப் புத்தகங்களோ...

மனக்கஷ்டமா இருக்கும்போது இந்த நூலை வாசிங்க.. : ரமேஷ் ராஜா

Image
குழந்தைகளோடு பேசுவதென்பது நம் மனதை இலகுவாக மாற்றிவிடும்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளை கவனமாக கையாள வேண்டிய அழுத்தத்தை மீறி,அவர்களோடு உரையாடும் வாய்ப்பு அவர்களின் பணியின் சுவாரசியத்தை கூட்டிவிடுகிறது. அப்படியான ஒரு ஆசிரியரின் வகுப்பறை நிகழ்வுகளின் தொகுப்பு தான் இந்த 'ஓங்கூட்டு டூணா'. நூலின் ஆசிரியர் பெயர் தேனி சுந்தர். பள்ளி ஆசிரியர்,அறிவியல் மற்றும் கல்வி செயற்பாட்டாளர். 'டுஜக் டுஜக்- ஒரு அப்பாவின் டைரி ', ' சீமையில் இல்லாத புத்தகம் ' ஆகிய நூல்களின் ஆசிரியர். தன் வகுப்பறையில் மாணவர்களோடு நடந்த சுவாசியமான வகுப்பறை நிகழ்வுகளை நூலாக்கியிருக்கிறார்.குழந்தைகள் எதிர்பாராத நேரங்களில் நம்மை நமக்கு உணர்த்தி விடுவார்கள். அப்படியான நிகழ்வுகள் அதிகம் நடக்கிற இடம் பள்ளி.அதுவும் ஆரம்பப்பள்ளிகள் இவ்வாறான நிகழ்வுகளால் நிரம்பி வழியும்.மாணவர்களுக்கிடையான சண்டைகள்,ஆசிரியருடனான பிரச்சனை,ஆசிரியரின் பிரச்சனை, மாணவர்களின் வீட்டுப் பிரச்சனைகள் போன்ற எல்லாவற்றையும் போற போக்குல அடித்து விளாசிவிடுவார்கள் குழந்தைகள். நூலில் ஒவ்வொரு நிகழ்விற்கும் வரையப்பட்ட ஓவியங்கள் சிறப்பு.வரைந...

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார் - நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்

Image
  குழந்தைகளின் கண்களுக்கு ஊரையும் உலகத்தையும் காட்டுவதோடு இன்னொரு பக்கம் உள்ள உலகத்து ஜன்னலையும் திறந்து காட்டச் செய்கிறது இந்தப் புத்தகம். வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் ஏற்பட்ட உரையாடலையும் அனுபவங்களையும் தன் பாணியில் 25 தலைப்புகளில் கட்டுரையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர். - கனவு ஆசிரியர் மாத இதழ் அக்டோபர், 2025