Posts

மாணவர் மனசு நூல் குறித்து சீனி சந்திரசேகரன்

Image
பாரதி புத்தகாலயத்தின் மூலம் வாங்கிய புத்தகம். குழந்தைகள் மொழி, விளையாட்டு, வருத்தம், கொண்டாட்டம் என ஒவ்வொன்றையும் அருமையாக பதிவு செய்திருக்கும் கட்டுரைகள் தொகுப்பு இந்நூல். நூலிலிருந்து... ஆசிரியரை மழலைகள் பயமுறுத்த விளையாடும் விளையாட்டு நெஞ்சைகொள்ளை கொள்கிறது.. மன்னிப்பு கேட்காமலேயே மன்னிக்கிறவங்க மாமனிதர்கள். அந்த குணம் குழந்தைகளிடம் இருக்கிறது. ஆசிரியர் வீட்டை கண்டுபிடிப்பது ஆனந்தம் குழந்தைகளுக்கு.. குழந்தைக்கு வேறு சொத்துக்களெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எப்படியாவது அவனை நல்லா படிக்க வச்சிடுங்க சார். அதுபோதும் எனும் பெற்றோர்கள் வேண்டுகோள் கண்ணில் கண்ணீரை வர வரைக்கும். எப்பேர்ப்பட்ட ஆசிரியர் இருக்கும் வகுப்பறையாக இருந்தாலும் அவர் போட்ட கால அட்டவணைப்படி கற்றல் நிகழாது. ஆனால் நிகழும் கொஞ்சம் பிந்தி வாரதுகள நின்னு கூட்டிட்டு போகத்தான் இந்த பள்ளிகளுக்கு நேரமே இருப்பதில்லை.. பள்ளிக்கு வந்த அதிகாரி அந்த பதிவேடு எடுங்க இந்த பதிவேடு எடுங்க என ஆரம்பித்தார்.. வந்ததுக்கு ஏதாவது ஒன்றில் பிழை கண்டுபிடிப்பு கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து எங்களை அழகு பார்க்க வேண்டும் என்பதில் அவருக்கு அப்படி ஒரு ஆசை...

திட்டமிடாத வகுப்பறைகள்.. நூல் குறித்து சீனி சந்திரசேகரன், செங்கல்பட்டு

Image
பாரதி புத்தகாலயத்தின் மூலம் வாங்கிய புத்தகம் : திட்டமிடாத வகுப்பறைகள்.. _ தேனி சுந்தர் வகுப்பறை குழந்தைகளுக்கானது என்பதையும், அங்கே என்ன நடக்க வேண்டும்? என்பதை குழந்தைகளே தீர்மானிக்கிறார்கள் என்பதையும், நூல் படிப்பது போன்று நாம் பாடத்தை நடத்த முடியாது என்பதையும், பல்வேறு வகுப்பறை நிகழ்வுகள் மூலம் சொல்லும் நூல் இது. நூலிலிருந்து... ரொம்ப சுத்தமா இருக்கணும். நீட்டா இருக்கணும். பள்ளிக்கூடம் போயிட்டு திரும்ப வர வரைக்கும் ஆடைகள் அழுக்காகாமல் இருக்கணும், என்ற கருத்து மாறணும். கறை நல்லது. அழுக்கு நல்லது. திறந்த வெளியில் கற்றல் ரொம்ப நல்லது. வருடம் எல்லாம் வகுப்பறையில் பொருத்தமற்ற போட்டிகளை வைத்து குழந்தைகளை நாம் தோற்கடிக்கிறோம். வருடத்தில் ஒரு நாள் அவனுக்காக போட்டி நடக்கும்போது அவன் வெற்றிவாகை சூடி கதாநாயகன் ஆகிறான். சிறந்த கல்வி, வருகை, விளையாட்டு, எல்லாம் முக்கியம்தான். அவை எல்லாவற்றையும் விட முக்கியம் ஒழுக்கம், பொது வெளியில் நேர்மையாக நடந்து கொள்வது. குழந்தைகளோடு பழகும் போது நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். முடியாதவர்கள், முயற்சி செய்யாதவர்கள், மூக்கு உடைபடுவது நிச்சயம். குழந்தை...

டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - வாசிப்பு அனுபவம் : இளையவன் சிவா

Image
மழலைச் சிறகில் மனம் பெறும் அனுபவங்கள்.. எல்லோருக்கும் குழந்தைச் செல்வங்கள் வரமெனக் கிடைத்து வாழ்வாங்கு வாழ்கின்ற வாழ்வை இல்லறம் ஏற்படுத்தித் தருகிறது. ஆனால் எல்லோருமே குழந்தைகளின் இயல்பை, குழந்தைத் தன்மையை விரும்பி ரசிக்கின்ற அதே நேரம் அதை ஆவணமாக பதிவாக நினைவுபடுத்தி வைப்பதில்லை. அப்படி ஒரு அப்பாவின் டைரியில் தனது பிள்ளைகளின் மழலைத்தனமான வினாக்களையும் அவர்களின் குறும்புகளையும் பதிவு செய்து பொதுவெளியில் உலவ விட்டிருக்கிறார் தேனி சுந்தர். கல்வியின் பல அம்சங்களை குறித்து பொது அரங்குகளில் பல முக்கியமான விமர்சனங்களையும் விவாதங்களையும் நிகழ்த்தி வருபவர். கற்றல் கற்பித்தல் தொடர்பான அனுபவங்களை நூலாக எழுதியிருப்பவர் தேனி சுந்தர். சிறு குழந்தைகள் அப்பாவுடன் நடத்தும் உரையாடல் வழியே அவர்களுக்கு உரிய மழலைத்தனமும் எதையும் கேள்வி கேட்கும் தன்மையும் இயல்பாகவே அமைந்து விட்டு விடுதலையான சுதந்திரத்தனத்தில் பெரியவர்களின் வாழ்க்கை முறையையும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளின் வழியே வளரும் உரையாடலகளை கவிதைகளாக எழுதி தேனி சுந்தர் காட்சிப்படுத்தி இருக்கிறார். பொதுவாகவே எல்லோரது வீடுகளிலும் குழந்தைகள் தொடர்ந்...

திட்டமிடாத வகுப்பறைகள் : வாசிப்பு அனுபவம் - வாலண்டினா பிரான்சிஸ்

Image
மாணவர் மனசு என்ற புத்தகம்தான் நான் வாசித்த தேனி சுந்தர் அவர்களின் முதல் நூல். அந்நூலில் வகுப்பறையில் குழந்தைகளுக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அப்படியே எழுதியிருந்தார். அந்நூலில் சில கட்டுரைகளை வாசிக்கும் போது சிரிப்பு அடக்கமுடியவில்லை. அந்த அனுபவம்தான் இந்நூலைப் படிக்கத் தூண்டியது. இந்நூலிலும் குழந்தைகளுக்கான வகுப்பறை எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு கட்டுரையும் உள்ளது. குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதைவிட அவர்களுக்குப் பிடித்தமானதை செய்ய விடும்போதுதான் குழந்தைகள் இயல்பாகக் கற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தை ஒவ்வொரு அனுபவக் கட்டுரையிலும் பார்க்க முடிகிறது. இவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதும் டோட்டாசான் புத்தகத்தில் வரும் கோபயாக்ஷி என்ற தலைமை ஆசிரியர்தான் நினைவுக்கு வருகிறார்.! குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பேரன்பும் அக்கறையும் ஒவ்வொரு கட்டுரை வாசிப்பிலும் அறிய முடிந்தது. சும்மா இரு.. என்பதுதான் குழந்தைகளுக்குப் பிடிக்காத விஷயம்.அவர்கள் விருப்பப்படி கற்றல் அமைந்துவிட்டால் கற்றல் ஒரு சுமையாக இர...

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன - நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்

Image
இந்தச் சமூகம் அறியாத பருவத்தில் குழந்தைகள் மனதில் தன்னிடம் இருக்கும் சகலத்தையும் வலிந்து புகுத்தி விடுகிறது. இதனால் மதம், சாதி, சடங்கு, சம்பிரதாயம் போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் வாயிலாக அவர்களிடம் அது படிந்து விடுகிறது. அதைத் தவிர்த்து சுயம், சுயமரியாதை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நூல் வலியுறுத்திக் கூறுகிறது.  - கனவு ஆசிரியர் இதழ் செப்டம்பர், 2025

தேனி சுந்தரின் 'மாணவர் மனசு' வெளிப்படுத்தும் சிறார் உளவியல் : முனைவர் மு.செந்தில் குமார்

Image
புதியவன் செந்தில் அவர்களின் வாசிப்பு அனுபவம்     கம்பம் பள்ளத்தாக்கில் விளைந்த, விளையும் இலக்கியப் பயிர்களில் முக்கியமான, முதன்மையான பயிர் தேனி சுந்தர் அவர்கள். அப்பகுதியின் படைப்பாளர்கள் கதை, கவிதை, நாவல் என இயங்கும்போது இவர் மட்டும் குழந்தைகளுக்கான இலக்கியத்தைக் கையிலெடுத்து தொடர்ச்சியாகப் படைப்புகளைப் படைத்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மையப் பொறுப்பு, த.மு.எ.க.ச, ஆசிரியர் இயக்கங்களில் முனைப்போடு பங்காற்றி வருகிறார். கல்வி, சிறார்கள் தொடர்பான இவரது கட்டுரைகள் நாளிதழ்கள் இலக்கிய, இதழ்களில் வெளிவந்துள்ளன. 2016 - மகாராஜாவின் புதிய ஆடை 2021 - டுஜக் டுஜன் அப்பாவின் டைரி 2022 - சீமையில் இல்லாத புத்தகம் 2023 - எதிர்பாராத பரிசு 2023 - ஓங்கூட்டு டூணா 2024 - மாணவர் மனசு 2025 - நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன 2025 - திட்டமிடாத வகுப்பறைகள் 2025 - உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் 2025 - நட்சத்திரக் குழந்தை மேற்கண்ட அவரது படை...

டுஜக் டுஜக் (ஒரு அப்பாவின் டைரி ) - வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

Image
இந்நூல் நூறு பக்கங்களை கொண்டது. புதுக்கவிதை வடிவில் குழந்தையின் மழலை மொழியை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும் பொழுதும் நம் மனதில் ஒரு பிளாஷ் பேக் தோன்றும். நம் வீட்டுக் குழந்தைகளின் சிறுவயது நினைவுகள் ஞாபகத்திற்கு வரும். இந்த புத்தகத்தை வாசித்த பின் கண்ணில் காணும் குழந்தைகள் எல்லாம் (நடமாடும்) கவிதைகளாகவே தோன்றும். அவர்களின் ரசிகர்களாவோம் நாம்... அடுத்தவர்களின் டைரியை வாசிக்க கூடாது !ஆனால் இந்த அப்பாவின் டைரியை தைரியமாக வாசிக்கலாம்.. இது ஒரு அப்பாவின் டைரி அல்ல... அப்பாக்களின், அம்மாக்களின் டைரி... இந்த நூலை வாசிக்கும் பொழுது இப்படி ஒரு டைரி நாம் எழுதாமல் போனதுக்கான வருத்தம் தோன்றும்... புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தேதியை குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர் - இது அனைத்தும் கொரோனா காலம் Lock down எனும் களம் அமைத்து தந்த நேரத்தில் எழுதப்பட்டது. அய்யோ... மின்னல் வெட்டுது பாப்பா ... உள்ள ஓடி வந்துரு. ...! அது நிம்மல் இல்லப்பா... கெட்டுப்போன லைட்டு....! இப்ப பாரு அமந்து அமந்து எரியும் ..,.! ---------------------------------- "கொஞ்ச நாள் கிளி வேணும் கிளி வேண...