Posts

Showing posts from 2024

டுஜக் டுஜக் நூல் குறித்து கனவு ஆசிரியர் இதழில்..

Image
நாம் எல்லோரும் குழந்தைகளோடு உரையாடி இருப்போம். நாம் வழக்கமாகப் பார்க்கும் பொருள்களையும் உயிரினங்களையும் அவர்கள் வேறொன்றாகப் பார்ப்பார்கள். கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளின் உலகம் என்ன என்பதை அவர்களிடம் இருந்தே தெரிந்து கொள்ளும் போது நாமும் குழந்தையாக இருக்கும் போது இப்படித்தான் இருந்திருப்போமா எனச் சிந்திக்க வைப்பார்கள். இந்நூலும் அப்படித்தான், இரண்டு குழந்தைகளும் ஒரு அப்பாவும் உரையாடுவதை அப்படியே மழலை மொழியில் தந்து படிக்கும் நம்மை மழலையாக்கிச் சிந்திக்க வைக்கிறது.. - கனவு ஆசிரியர்  டிசம்பர் 2024 இதழ் (பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளிவரும் மாத இதழ்)  

நீர் விளக்கு - பென்னிகுக் நூல் அறிமுகம்

Image
தனக்குத் தானே முன்மாதிரியாக அமைந்த உலகின் ஒரே அணை என்று முல்லைப் பெரியாறு அணை குறிப்பிடப்படுகிறது. நீரின் ஓட்டத்தின் போக்கில் அதை மறித்துக் கட்டப்படுவது தான் பெரும்பாலான உலக வழக்கம். ஆனால் நீரின் போக்கையே மாற்றி, அதற்கு எதிர்ப்புறமாக அணையைக் கட்டி, அதிலும் பல்வேறு நுட்பங்களைக் கையாண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் புளூபிரிண்ட்-ஐ அப்படியே தனது நாவல் மூலம் படம் வரைந்து விளக்கியுள்ளார் ஐயா பொ.கந்தசாமி ஐயா அவர்கள்.  விருதுநகரில் பிறந்தவர் என்றாலும் அவருக்கு தாய்வழிப் பூர்வீகம் தேனி தான். வைகை அணைக்குப் பக்கத்தில் முதலக்கம்பட்டி. சில பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளும் செய்திகளும் அவரை மேலும் மேலும் பென்னிக்குக்கை குறித்த தகவல்களைத் தேடி ஓட வைத்துள்ளது. இதய அறுவைச் சிகிச்சை செய்திருந்த போதிலும் தனது வாழ்நாள் , பிறவிப் பயனாக இந்நூலை அவர் எழுதி முடித்து இருக்கிறார். நான் முதன் முதலாக ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த குள்ளப்ப கவுண்டன் பட்டி தான் கதையின் முக்கியமான உள்ளூர் நாயகனாக வருகிற பேயத்தேவரின் தந்தை மொக்கையத் தேவர் வந்து குடியேறிய ஊர். கூடலூருக்குப் பக்கத்து ஊர் தான். பேயத்தேவர் கூடலூ...

வாசிப்பு அனுபவம் : மாணவர் மனசு : தோகை பழனிவேல்

Image
போர்பந்தரில் பிறந்தாலும் 'மகாத்மா காந்தி' போரை விரும்பாதவர். அதைப் போலத்தான் தேனிக்கு அருகில் பிறந்தாலும் தேனீயைப் போலில்லாமல் தேன் போல இனிக்கிறது தேனி சுந்தரின் எழுத்து.. அவர் பல நாள் ஆராய்ந்து, அவதானித்து, ஆராய்ச்சி செய்து எழுதுவதாக சொல்லவில்லை. கண்களால் கண்டதை, தனக்குள் உணர்ந்த அன்றாடங்களை கட்டுரையாகவேர, கதையாகவோ உருமாற்றும் வித்தையை தெரிந்து வைத்திருக்கிறார். பார்த்தவற்றை நாம் சாதாரணமாக கடந்து விடுகிறோம். அவர் படைப்பாக்குகிறார் அவ்வளவே.. "மற்றவர்களெல்லாம் பூமியில் வசிக்கிறார்கள்.. படைப்பாளன் மட்டுமே வாழ்கிறான் " என்று நான் எப்பொழுதோ படித்த ஞாபகம். தேனி சுந்தரின் படைப்புகளை படிக்கிறபோது அந்த சொற்றொடர் மீண்டும் நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன்பு எங்களூர் கடை வீதியில் இரண்டு பள்ளி மாணவர்கள் பேசிக் கொண்டு சென்றார்கள். அதில் ஒருவன் "டேய்..! விக்னேசு...நீ ஏன்டா இன்னிக்கி பள்ளிக்கூடம் வல்ல.. ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இன்னிக்கி எந்த சாரும் பாடம் நடத்துல .. தெரியுமா"? என்றான். "அப்படியாடா முருகா டெய்லியும் சாருங்க பாடம் நடத்தாமயிருந்தா எவ்வளவு ஜாலிய...

மருத்துவர் பூர்ணிமா கணநாதன் எழுதிய மகப்பேறு : தெரிந்ததும் தெரியாததும் நூல் குறித்து..

Image
தேனி மாவட்டம்,  மருத்துவர் பூர்ணிமா கணநாதன் எழுதிய மகப்பேறு : தெரிந்ததும் தெரியாததும் நூல் குறித்து.. என் மனைவி எங்கள் முதல் குழந்தை டார்வினை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த போது அவருக்கு துணையாக, உதவியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. விழிப்போடு இருக்க வேண்டும் என்பதுவும். வீட்டிலேயே சில நூல்கள் இருந்தன. வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. குறிப்பாக அந்நூலை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது. ஆனாலும் வாசிக்க முடியவில்லை. சில அத்தியாயங்கள் படித்ததோடு நின்று போனது.. காரணம் நூலின் விரிவான உள்ளடக்கம்..! ஆனால் தடம் அறக்கட்டளையின் செயலாளரும் இயன்முறை மருத்துவருமான பூர்ணிமா அவர்கள் எழுதிய "மகப்பேறு - தெரிந்ததும் தெரியாததும் " என்கிற இந்நூல் குழந்தைகளுக்கான ஆத்திசூடி போல அவ்வளவு எளிமையாக, சுருக்கமாக இருக்கிறது. எவ்வளவு நல்ல கருத்தாக இருந்தாலும் மக்களுக்கு அதை நாம் சுருக்கமாக சொல்ல வேண்டி இருக்கின்றது. இல்லையெனில் அதை அவர்கள் கவனிப்பதில்லை. உள்வாங்குவது இல்லை. எனவே எளிதில் விழுங்கும் மாத்திரைகள் போல, அதிலும் விரும்புவோர் இன்னும் நிதானமாக சுவைத்துச் சுவைத்து சாப்பிடும் இனிப...

குழந்தை இலக்கியம் : ஐரோப்பிய தமிழர்கள் நிகழ்வு

குழந்தை இலக்கியம் குறித்து..  

தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு : பிளாட்பார்ம் தமிழ்

Image
பிரபல எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய “மாணவர் மனசு” (Manavar Manasu Book) என்ற நூலினை வாசித்தேன். இப்புத்தகத்தில் மாணவர்களின் மனசை மிக எளிதாக ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். தொடக்கக் கல்வி ஆசிரியராகப் ஒருவர் பணியாற்றுவதற்கு நிதானமும் பொறுமையும் தேவை என்பதை இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். மழலைப் பள்ளிகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடைப்பட்ட பருவத்தினர் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களை கையாள ஒரு ஆசிரியருக்கு தனித்த அணுகுமுறை தேவை என்பதை “மாணவர் மனசு” புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு உணர்வுகளை கையாளத் தெரிந்து கொண்டால் அப்புறம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் கைவசம்தான். அப்படிப்பட்ட முயற்சிக்காக தேனி சுந்தர் அவர்கள் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார் என்பதை இந்நூலிலுள்ள கட்டுரை வழியாக அறிய முடிகிறது. மாணவர்களை பொய் சொல்ல அனுமதிக்கும் ஆசிரியர் : ஆசிரியர்கள் சொல்லும் பொய்யுக்கும், மாணவர்கள் சொல்லும் பொய்யுக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது...

நாவல் இலக்கிய உலகில் ஓர் உலா

Image
ஒரு படைப்பை எழுத்தாளர் தொடங்கி வைக்கிறார். வாசகர் தான் அதை முடித்து வைக்கிறார் என்றொரு சொற்றொடர் உண்டு.ஆனால் இலக்கியம் வாசகரிடம் இருந்தும் தொடங்க முடியும் என்று பறைசாற்றி வருகிறார் பேரா.விஜயகுமார் அவர்கள். நமது மண்வாசம் இதழில் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ்ச் சிறுகதை சிற்பிகள், சிறுகதை இலக்கியத்தின் சிகரங்கள் ஆகிய இருநூல்கள் மூலம் தமிழ் மற்றும் உலகளாவிய அளவிலான சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்த பேராசிரியர், இம்முறை நாவல் இலக்கிய உலகில் ஓர் உலா வந்திருக்கிறார். அவர் மட்டும் செல்லாமல் உடன் நம்மையும் அழைத்துச் செல்கிறார். ராய் மாக்சம் எழுதிய உப்புவேலி, ஹெப்சிபாவின் புத்தம் வீடு, சுசீலாவின் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், முத்துநாகு எழுதிய சுளுந்தீ, தேபேஷ் ராயின் அகதிகள், பூமணியின் வெக்கை, சர்மிளா செய்யத் எழுதிய உம்மத், ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள், தொ.மு.சி.ரகுநாதனின் பஞ்சும் பசியும் , நக்கீரனின் காடோடி, இமையம் எழுதிய செல்லாத பணம், வைக்கம் முகம்மது பசீரின் மதில்கள், பாலமுருகனின் சோளகர் தொட்டி, டி.செல்வராஜின் மலரும் சருகும், சல்மாவின் அடைக்கும் தாழ் உள்ளிட...

தமிழ் அமுது 211வது நிகழ்ச்சி : டுஜக் டுஜக்

டுஜக் டுஜக் நூல் அறிமுகம்  

ஆண்டிபட்டி மாதாவின் ”கடைசி இலை” - சிறுகதைத் தொகுப்பு குறித்து.

Image
மாதா என்கிற பெயரை நான் பணிக்கு வந்த புதிதில் இருந்து கேள்விப்பட்டு வருகிறேன். 2005 ல் தமுஎகச மாவட்ட மாநாடு ஆண்டிபட்டியில் தான் நடந்தது என்று நினைக்கிறேன். தோழர் மக்கள் ராசப்பன், மாதா, மாலன் போன்றவர்களை அந்த மாநாட்டில் முதல் முறையாக பார்க்கிறேன். சுருளிப்பட்டி கிளையின் சார்பில் கலந்து கொண்டு மாநாட்டில் சில கடுமையான விமர்சனங்கள் வைத்த ஞாபகம், ஆனாலும் தோழர் மாலன் அவர்கள் புதியவர் என்ற கரிசனத்தோடு அதற்கு இதமான பதில் அளித்தார். ஆனால் மற்றவர்களுக்கு சுளீர் சுளீர் என்று தான் பதிலுரைத்தார்.. அப்போது முதல் பெயர் தெரியும், ஆள் தெரியும் என்றாலும் அவர் என்ன விதமான படைப்புலகில் இயங்கி வருகிறார் என்று தெரியாது.. அப்புறம் அவரது பெயர் அடிக்கடி காதுகளில் விழுவதும் கூட குறைந்து போனது. இப்போது எழுத்து, புத்தகம் என்று வந்த பிறகு படைப்பாளிகளுடன் மீண்டும் நெருங்குகிற வாய்ப்புகள் கிடைத்தன.. அவர்களது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன.. அந்த அடிப்படையில் தோழர் மாதா அவர்களின் "யாருடைய பிரேதம்?" என்கிற மொழிபெயர்ப்பு கதையை புக்டே இணைய தளத்தில் வாசித்த பிறகு தோழர் பெயர் மீண்டும் அழுத்தமாக என்...

கடமலைக்குண்டு கவிஞர்.அழகர்சாமி எழுதிய அசைவுகளின் அர்த்தங்கள் நூல் குறித்து..

Image
கவிஞர் அழகர்சாமி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வசிக்கிறார் என்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது. வாட்ஸ்அப் மூலம் எப்படியோ அறிமுகம் ஆகிக் கொண்டோம். எனது பதிவுகளுக்கு, படைப்புகளுக்கு அவ்வப்போது வாழ்த்துகள் பகிர்வார். பின்னூட்டங்கள் அனுப்பி வைப்பார். அவ்வளவு தான்.  கடந்த அக். மாத தொடக்கத்திலேயே என்னிடம் சொல்லி வைத்திருந்தார். தன்னுடைய நூல் வெளியீட்டு விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என்று... தொடர்ந்து நினைவூட்டி கொண்டும் இருந்தார். அன்று விடுமுறை நாள் என்பதால் நானும் விழாவிற்கு சென்று வந்தேன்... ஒரு மிகப் பெரிய குடும்ப விழா போல நடந்தது. நான் நினைத்து சென்றது போல அல்லாமல் குறித்த நேரத்தில் நிகழ்வு தொடங்கி விட்டது என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.. இன்றைய நவீன உலகில் ஒரு புத்தகம் உருவாகி வெளிவருவதற்கு ஒன்றிரண்டு நாட்களே போதுமானது. நல்ல தொடர்புகள் இருந்தால் ஒரு நாளே கூட போதுமானது. ஆனால் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவருவதற்காக தோழர் அழகர்சாமி அவர்கள் கால் நூற்றாண்டு காலம் காத்திருந்தார் என்பதை அறியும் போது எனக்கு மனதில் கொஞ்சம் பாரம் ஏறியது போல இருந்தது. நீண்ட நெட...

சீமையில் இல்லாத புத்தகம் குறித்து ஆசிரியர் தி.தாஜ்தீன்

Image
தேனி மாவட்டம் எனும் பெயரை கேள்விப்பட்டதும் கண்ணுக்கு விருந்து, மலைகள், பள்ளத்தாக்குகள், அருவிகள், குன்றுகள். பச்சைப்பசேல் எனப்பரந்து விரிந்த அழகிய இடங்கள், எண்ணிலடங்கா தேனி மாவட்டம், தமிழகத்தின் பொக்கிஷம், இயற்கை அழகின் தோட்டம், எப்போதும் மனதை கொள்ளை கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.  தேனிக்கு மற்றொரு பெருமை சேர்க்கும் விதமாக கல்விப் பணியில் எழுத்து ஆற்றலில் சிறப்பாக பங்காற்றி வருகிறார் தேனி சுந்தர் (Theni Sundar). தேனி சுந்தர் (Theni Sundar) அவர்கள் டுஜக் டுஜக், எதிர்பாராத பரிசு, மாணவர் மனசு, ஓங்கூட்டு டூனா, தேசிய கல்விக் கொள்கை, மற்றும் “சீமையில் இல்லாத புத்தகம்” போன்ற புத்தகங்களை எழுதி உள்ளார்கள். இவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகளின் வாசிப்பு உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. குறிப்பாக என்னைக் கவர்ந்த நூல் “ சீமையில் இல்லாத புத்தகம் ” (Seemaiyil Illatha Puthagam). இந்த புத்தகம் , குழந்தைகளின் சிந்தனைத் திறனை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அவர்களது கற்பனை உலகை விரிவுபடுத்துவதிலும் சிறப்பாக பங்காற்றும் சக்தி கொண்டது. ஒரு அப்பா, இரு குழந்தைகள், ஒர...

கம்பம் அதாயி கல்லூரி வாராந்திர நிகழ்ச்சி

கம்பம் அதாயி கல்லூரி நிகழ்ச்சி  

கிடைக்கிற கல்வி தரமானதாக வேண்டும் : தேனி சுந்தர்

Image
நன்றி : செம்மலர், ஜீன், 2024  

மாணவர் மனசு - அனுபவப் புதுமை : இந்து தமிழ் நாளிதழ்

Image
 நன்றி : இந்து தமிழ் நாளிதழ்

மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம் : சரவண ஸ்ரீ

Image
கோடை விடுமுறை.. குழந்தைகள் போல் ஏனோ எனக்கும் இந்த விடுமுறை தேவை பட்டது.. ஊரெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்ந்தாச்சு… இன்று எனது வாசிப்பில் தேனி சுந்தர் அவர்களின் மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம்.. இந்த நூல் 16 கட்டுரைகளை கொண்டுள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு நூல் விலை : 70 ரூபாய்..  நான் புத்தகம் படித்து முடித்தவுடன் தோன்றியது என் மனதில் புத்தகத்தின் விலை குறைவு இப்புத்தகத்திற்கு இன்னும் எவ்வளவும் கொடுக்கலாம். சிரிப்பு போலீசு….. பெரும்பான்மை கிராமபுற பள்ளிகளில் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு நுளையும் போதே இன்று பள்ளியின் நிலை எப்படி இருக்குமோ? என்று மனதில்ஓடும். … இதில் குற்றவாளிகளை கண்டறிந்து…. சிரிப்பு போலீசாக படிக்கும் போதே நாங்களும் ஆகிட்டோம். சாரு பயந்துட்டாரு….. இதில் சீக்கிரம் வாங்க சார்…பயமுறுத்திட்டுப் போயி உக்காரணும் கால் வலிக்குது….இப்படி சொல்லும் ஆசிரியர் குழந்தைகளின் உறவை விட வேறு என்ன வேண்டும்? டும் டும் டும்……..வாசிக்கும் போதே குழந்தை போல் மகிழ்ந்தேன். மாணவர் மனசு வாசிக்கும் போதே எனக்கும் ஒரு போன் வேண்டும் என்று எழுதிப் போட தோன்றியது .எனது வகுப்பறையிலும் மா...

வானியல் உரையாடல் : கலைஞர் நூற்றாண்டு நூலகம்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மே மாதம் நடைபெற்ற கோடைக் கொண்டாட்டம் நிகழ்வின் ஒரு பகுதியாக    வானியல் உரையாடல்

மாணவர் மனசு நூல் குறித்து : கௌசல்யா, ஆசிரியர்

Image
ஹைக்கூ கவிதை போல காட்சிகளை கண்முன் நிறுத்தும் குட்டிக் குட்டி கட்டுரைகளின் தொகுப்பை தந்த தேனி சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. நாம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஏதோ ஒரு புத்தகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் என்பார்கள் . பல பள்ளிகளின் பிரச்சனை சிரிப்பு போலீஸ் காட்சி பகுதியில் ஒளிந்து உள்ளது. மாணவர் மனசு மட்டுமல்ல ஆசிரியர் மனசையும் பிரதிபலிக்கிறது இந்த புத்தகம் . புத்தகம் வாசிக்க பெரிதும் விரும்பாத ஆசிரியர்களுக்கு கூட ஆர்வத்தை தூண்டும் நூல் இது. எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படுத்தாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகள் அருமையான தலைப்பின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன .ஓவியங்களும் மிக அருமையாக உள்ளது. அதிலும் காமராஜர் பாயாசம் குடிச்சாரு கட்டுரையின் ஓவியம் மிகவும் சிறப்பாக உள்ளது. கட்டுரை ஆசிரியர் தன் மனதில் இருக்கும் பல ஆயிரம் காட்சிகளுள் நமக்கு இந்த தொகுப்பு மூலம் 16 காட்சிகளை மட்டும் தொகுத்து வைத்துள்ளார். துறை ரீதியாக தினம் தினம் நாம் பார்ப்பதை கவனிப்பதை கேட்பதை அப்படியே துல்லியமாக வார்த்தைகளால் வடித்ததால் என்னவோ புத்தகத்தை படித்து மு...

மாணவர் மனசைப் புரிந்து கொள்ள உதவும் இலக்கியப் பெட்டி : ச.தமிழ்ச்செல்வன்

Image
 நன்றி : செம்மலர் இதழ், மே.2024

ஆசிரியரின் மனதை வெளிப்படுத்தும் – மாணவர் மனசு! - மு.தமிழ்ச்செல்வன்

Image
எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ‘மாணவர் மனசு“ என்ற நூலினை வாசித்தேன். மாணவர் மனசை மிக எளிதாக இப்புத்தகத்தில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து அவர் கட்டுரைகளாக எழுதியவைதான். இதிலுள்ள கட்டுரைகளை முகநூலில் ஏற்கனவே வாசித்திருந்ததால் மீள் வாசிப்பு செய்ததை போன்றே உணர்ந்தேன். இந்தக் கட்டுரை தொகுப்பை பாரதி புத்தகாலயம், புக் ஃபார் சில்ரன் வெளியீடாக இவ்வாண்டு வெளியிட்டுள்ளது. தொடக்கக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு நிறைய பொறுமையும் நிதானமும் தேவை என்பதை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வழியாக நாம் அறிய முடிகிறது. மழலைப் பள்ளிகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இடைப்பட்ட பருவத்தினர் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களை கையாள தனித்த அணுகுமுறை தேவைதான். அது அன்பும் அரவணைப்பும் கலந்த, கண்டிப்புடன் கூடியதாகவும் இருக்க வேண்டியதாக இருக்கிறது. அதோடு மாணவர்களிடம் அவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு கீழ் இறங்கி பேசி, அவர்களின் உணர்வுகளை கையாளத் தெரிந்து கொண்டால் அப்புறம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரு...

பள்ளிக் குழந்தைகளின் உலகத்தை அறிந்து கொள்ள... : மாணவர் மனசு

Image
அரசு பள்ளி ஆசிரியரான நூலாசிரி யர் தேனி. சுந்தர், தனது பள்ளி மாணவர்களிடம் கற்றுக் கொண்ட பல்வேறு சம்பவங்களின் தொகுப்பே இந்நூல். 16 தலைப்புகளில் ஒவ்வொரு சம்ப வத்தையும் மாணவர்களின் மொழியில் மிக அற்புதமாக நூலைச் செதுக்கி உள்ளார்.  வகுப்பில் மாணவர்களோடு மாணவராக வலம் வருகிறார். கல்வித்துறை உயர் அதிகாரி கள் வரும்போது அதிகாரிகளுக்கே அதிகாரி யாகவும் மாறிவிடுகிறார். உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது மாணவர்களிடம் அன்பாக பேசி வினாக் கள் எழுப்புவதில்லை. மாறாக அதிகாரத்துடன் கேள்வி கேட்பதை சுட்டிக்காட்ட தயங்க வில்லை நூலாசிரியர். குழந்தைகளின் மொழியில் வினாக்கள் எப்படி எழுப்புவது? என்பதை உயர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதோடு இவரது மாணவர்கள் பாடநூல்களை மட்டுமல்லாது பல பொது அறிவு விஷயங்களை கற்று அறிந்து கொண்டு வருகின்றனர் என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.  அதிகாரிகள் உங்கள் அப்ரோச் மிகவும் அருமையாக உள்ளது என நூலாசிரியருக்கு பாராட்டு சொல்வது அருமை. மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்குக் கொண்டு வரும் தின்பண்டங்களை மற்றொரு மாணவர் வகுப்பறையில் திருடி தின்ற சம்பவத்தை திரையில் பார்க்கும் அளவுக்க...

வீரிய விதை : மாணவர் மனசு நூல் குறித்து பேரா.கம்பம் புதியவன்

Image
 

மாணவர் மனங்களில் ஒரு சிம்மாசனம் : புத்தகம் பேசுது கட்டுரை : கமலாலயன்

Image
puthiyaputhagampesuthu.com/2024/07/15/maanavar-manangkalil-simmasanam/  நன்றி : தோழர் கமலாலயன் புத்தகம் பேசுது இதழ் ஏப்ரல், 2024